சினிமா
தொடர்கள்
Published:Updated:

"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்!”

"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்!”

"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்!”

“ஏன்ப்பா... இன்னைக்கான வீடியோ அப்லோடு பண்ணிட்டீங்களா... அந்த இன்டர்வியூ எடிட் எப்போ முடியும்... ஷூட் போன பசங்க வந்துட்டாங்களா?” இளைஞர் படை பரபரத்துக் கொண்டிருக்கிறது ‘நீயா நானா’ கோபிநாத்தின் அலுவலகத்தில். சிட்டிசன்களைக் கவர ஞாயிறு தோறும் தொலைக்காட்சித் திரையில் தோன்றிப் பேசிக்கொண்டிருப்பவர், நெட்டிசன்களைக் கவர Little Talks என்ற யூடியூப் சேனலை நடத்திக்கொண்டிருக்கிறார்.

"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்!”

“ஒண்ணாந்தேதி நாலு பேருக்கு சம்பளம் போடுறதே தனி கெத்துதாங்க... நாம நல்லாருக்கோம்னு ஒரு ஃபீல் கொடுக்குது” என்று நம்மிடம் திரும்பி ரிலாக்ஸாகப் பேசத்தொடங்கினார். இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் அவரிடம் அரசியல், பர்சனல் என, கேட்பதற்கு நிறைய கேள்விகள்.

பத்து வருசங்களுக்கும் மேல `நீயா நானா’ பண்றீங்க... போரடிக்கலையா? அதுல இருந்து என்ன கத்துக்கிட்டீங்க?

“அது எப்படி போரடிக்கும்? நீயா நானாங்கிறது நிகழ்ச்சியோட தலைப்பா இருக்கலாம். ஆனா உள்ளே பேசுறது ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு தலைப்புகள்தான். வெவ்வேறு விதமான மனிதர்கள், வெவ்வேறு விதமான அனுபவங்கள், வெவ்வேறு விதமான கருத்துப் பரிமாற்றங்கள். ஒவ்வொரு வாரமுமே புதுசுதான். ஒவ்வொன்றும் புதிதாக இருக்கிற பட்சத்துல ஒரு விஷயம் நமக்கு போரடிக்காது. அந்த நிகழ்ச்சி உங்களுக்குள்ள ஏற்படுத்தக்கூடிய தாக்கம், உங்களுக்குள்ள ஏற்படுத்தக்கூடிய மலர்ச்சின்னு அது எவ்ளோ பெரிய பாடம்னு அனுபவத்துல உணர்ந்தவன் நான். அதனால நாளுக்கு நாள் அது என்னை வளர்த்துக்கிட்டுதான் இருக்கு. என்னை மேம்பட வைக்குது. அதனால அது போரடிக்கிறதுக்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை. என்ன கத்துக்கிட்டீங்கன்னு கேட்டா, வாழ்க்கையைக் கத்துக்கிட்டேன்னு சொல்லலாம்.”

இப்போது தேர்வாகியுள்ள எம்.பி-க்களில் யாரெல்லாம் முக்கியமானவங்கன்னு நினைக்கிறீங்க?


“இந்திய அளவுல நிறைய பேரைச் சொல்லலாம். தமிழக அளவுல முக்கியமான வெற்றியா நான் பார்ப்பது திருமாவளவன் அவர்களுடைய வெற்றி. தமிழகம் வளர்ந்துகொண்டிருக்கக்கூடிய போக்குல நாடாளுமன்றத்துல அவருடைய குரல் ரொம்ப முக்கியமானதா இருக்கும். அதேபோல ஜோதிமணி, தமிழச்சி தங்கப்பாண்டியன், சு.வெங்கடேசன் இவர்களுடைய வெற்றியும் ரொம்ப முக்கியமானதா பார்க்கிறேன். இந்திய அளவுல நிறைய பெண்கள் ஜெயிச்சிருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெண்ணுரிமை, பெண் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் சார்ந்த விஷயங்களை வெறும் அறிவுபூர்வமா மட்டுமே அணுகாம எமோசனலாவும் அணுகுறதுக்கு இது ரொம்ப அவசியம்.”

"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்!”

இந்தியாவோட மிகப்பெரிய பிரச்னையா எதைப் பார்க்கிறீங்க?

“கஷ்டப்பட்டுப் படிச்சு வர்ற இளைஞர்களுக்கு அவர்களோட தகுதிக்கு ஏற்ற வேலை இல்லாதது தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை. இன்னைக்கு ஒரு போட்டோ பார்த்தேன். ஐடி கம்பெனி முன்னால ஒரு விளம்பரம் இருக்கு, 25 ஆயிரம் சம்பளம் தர்றோம். நீ சாப்பாட்டுப் பொட்டலம் டெலிவரி பண்ணுன்னு.  பொழைப்பு வேற... கரியர் வேற... கார் ஓட்டுறதோ, சாப்பாட்டுப் பொட்டலத்தை டெலிவரி பண்றதோ வேலை கிடையாது. கரியரை வளர்க்க என்ன பண்ணியிருக்கோம்னு பார்க்கணும். அதுதான் நீடித்து நிற்கும். ஒரு துறைசார் அறிவுக்கு என்னை நான் உட்படுத்திக்கணும்னா அந்தத் துறைல நான் பணி செய்யணும். படித்த படிப்புக்கு வேலை வேணும், அதே துறைலதான் வேலை வேணும்னு சொல்லல. ஆனா அவனுடைய அறிவைப் பயன்படுத்திக்கிற மாதிரியான ஒரு வாய்ப்பை இளைஞர்களுக்கு இந்த அரசு கொடுக்கணும். அப்படிச் செய்யாவிட்டால் அது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம் இல்லையா?”

இளைஞர் நலன் சார்ந்து அரசு என்ன மாதிரியான திட்டங்களைக் கொண்டு வரலாம்?


“ஒரு கிராமத்துல படிக்காத ஒருத்தர் இருந்தா அவருக்கு நேட்டிவ் இன்டெலிஜென்ஸ்னு ஒண்ணு இருக்கும். அந்த நேட்டிவ் இன்டெலிஜென்ஸ்ல அவருக்கு நீங்க பயிற்சி கொடுக்கணும். உலகத்துல பல நாடுகள் இதைச் செய்றாங்க. உதாரணத்துக்கு முத்துக்குளித்தல்னு ஒண்ணு இருந்தது. இப்போ அது சுத்தமா இல்லைங்குற நிலைல இருக்கு. அவர்களை நாம எந்தளவுக்கு ட்ரெயின் பண்ணிருக்கோம். சுறாக்களைத் தேடித்தேடி வேட்டையாடுற ஷார்க் அட்டாக்கர்ஸ்னே சிலர் இருக்காங்க. அது பெரிய விஷயம்... அதுவும் ஒரு நேட்டிவ் இன்டெலிஜென்ஸ். பரம்பரை பரம்பரையா மரபு ரீதியிலான ஒரு தொடர்ச்சில அவர்களால அதை கரெக்டா செய்ய முடியும். அவர்களையெல்லாம் கண்டுக்காம சும்மா எல்லாரும் மீன் பிடிக்கிறாங்கன்னு பொத்தாம் பொதுவா விட்டுட்டுப் போயிட முடியாது. அது அவ்வளவு பெரிய ஒரு துறை. இதுமாதிரியான திறமைகளைத் தேடிக் கண்டுபிடிச்சு அவர்களை அடுத்த லெவலுக்கு எடுத்துப் போறதுக்கு என்ன செய்யணும் என்பது பற்றி அரசு சிந்திக்கணும். பல நாடுகள் இதைச் சரியா செய்றாங்க. இங்கயும் திட்டம் இருக்கு. செய்யாம இருக்கோம்.”

"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்!”

அப்பா, அம்மா, மாமனார், மாமியார்னு கூட்டுக்குடும்பமா ஒரே வீட்ல வசிக்கிறீங்கன்னு கேள்விப்பட்டோம். அது எவ்ளோ சவாலா இருக்கு?

“கூட்டுக்குடும்பம்ங்கிறது சவால் இல்லை. அது ஒரு வாழ்க்கை முறைதான். அதனால அது கஷ்டம்னு இதுவரைக்கும் தோணலை. கூட்டுக்குடும்பத்துல இருக்கிற எல்லாரும் அதோட மகிழ்வை உணர்றாங்க. இயல்பான சில சிரமங்கள் இருக்குதான். ஆனா வாழ்க்கைங்கிறது கமிட்மென்ட். அதை உணர்ந்தா இந்தச் சிக்கல்களெல்லாம் தெரியாது. இதை இந்தளவுக்கு வெற்றிகரமா கொண்டுபோறதுக்கு மிக முக்கியமான காரணம் என் மனைவி.”

ஏன் சினிமாவுல நடிக்கிறதை நிறுத்திட்டீங்க?


“சினிமாவுல நடிக்கிறதை நிறுத்தலையே. நடிக்கக்கூடாதுன்னும் முடிவு பண்ணல. மறுபடியும் மறுபடியும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் வந்ததால வேண்டாம்னு சொன்னேன். இப்பக்கூட சில கதாபாத்தி ரங்களுக்காகப் பேசியிருக்காங்க. எனக்கு அது செட் ஆகும்னு தோணுறப்போ கண்டிப்பா ஓ.கே சொல்வேன்.”

- தி.விக்னேஷ்;  படம்: தே.அசோக் குமார்