தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

வாவ் பெண்கள்: ஒரே வீடியோ... வைரலான அம்மா - மகள்! - ஸ்வேதா மனோச்சா - அயன்னா

வாவ் பெண்கள்: ஒரே வீடியோ... வைரலான அம்மா - மகள்! - ஸ்வேதா மனோச்சா - அயன்னா
பிரீமியம் ஸ்டோரி
News
வாவ் பெண்கள்: ஒரே வீடியோ... வைரலான அம்மா - மகள்! - ஸ்வேதா மனோச்சா - அயன்னா

வாவ் பெண்கள்: ஒரே வீடியோ... வைரலான அம்மா - மகள்! - ஸ்வேதா மனோச்சா - அயன்னா

‘`விளையாட்டாகத்தான் அந்த வீடியோவை போஸ்ட் செய்தோம். அது எங்களுக்கு விளம்பரப் பட வாய்ப்பைப் பெற்றுத்தரும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை’’ - சர்ப்ரைஸ் அகலாமல் பேசுகிறார்கள் ஸ்வேதா மனோச்சாவும் அவர் மகள் அயன்னாவும். பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கும் ‘Me and Ayanna’ முகநூல் பக்கத்தை நிர்வகித்துவரும், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் வசிக்கும் ஸ்வேதாவிடம் பேசினோம்.

வாவ் பெண்கள்: ஒரே வீடியோ... வைரலான அம்மா - மகள்! - ஸ்வேதா மனோச்சா - அயன்னா

‘`என் கணவர் டிரை க்ளீனிங் பிசினஸ் செய்கிறார். நான் வீட்டை நிர்வகிப்பதுடன், பிசினஸ் விஷயங்களில் கணவருக்கு உதவியாக இருக்கிறேன். முறையாக நடனம் பயிலவில்லை என்றாலும் அதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. `12 வயதாகும் என் மகள் அயன்னா முறைப்படி பரதநாட்டியம் கற்று வருகிறாள். ‘நாம் இருவரும் இணைந்து, ‘lamborghini’ பாலிவுட் பாடலுக்கு நடனமாடலாமா?!’ என்று என் மகளிடம் கேட்ட தருணத்தில், எனக்கே கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருந்தது. ஆனாலும், இருவரும் இணைந்து ஆடியபோது, மிகவும் உற்சாகமாக இருந்தது’’ என்று ஸ்வேதா சொல்ல, தொடர்ந்தார் மகள் அயன்னா.

‘`அந்த வீடியோவை என் அம்மா தன் முகநூல் பக்கத்தில் விளையாட்டாகப் பதிவிட்டார். அதைப் பலரும் ஷேர் செய்ய, மிகக் குறுகிய நேரத்தில் அது வைரல் ஆனது. இதுவரை ஒரு கோடியே 8 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்” என்கிறார் அயன்னா, சந்தோஷத்துடன்.

அதற்கடுத்து நடந்தவை தாம் ஆச்சர்யம். ‘’பிரபல ஃபேஷன் பிராண்டுகள் தங்களது விளம்பரங்களுக்கு நடனமாட எங்களை இப்போது அணுகுகின்றனர். விரைவில் தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றவிருக்கிறோம். நம்முள் ஒளிந்துகிடக்கும் திறமைக்கான சந்தையாக இந்தச் சமூக வலைதளத்தைப் பயன்படுத்திக்கொள்ள நாங்கள் ஒரு பாசிட்டிவ் உதாரணம் ஆகியிருப்பதில் மகிழ்ச்சி!” - இணைந்து சொல்கிறார்கள் தாயும் மகளும்!

-ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்