அலசல்
சமூகம்
Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஹான்

ஆஹான்

ஆஹான்

 பொம்மையா முருகன்

ஒரே தேசம் ஒரே தேர்தல்ன்னு சொல்லிட்டு... ஒரே தேசம் ஒரே குப்பைத் தொட்டின்னு அணுக்கழிவைக் கொட்ட தமிழ்நாட்டை சைலன்ட்டா ரெடி பண்றாங்க!

R Muthu Kumar

தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்கக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய கூட்டணிப் பிரச்னை ஒன்று வெடித்திருக்கிறது. அந்த வெடிக்கான திரியைப் பற்ற வைத்திருப்பவர் தி.மு.க-வின் கே.என்.நேரு. ‘தமிழகத்தில் இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் காங்கிரஸ் கட்சியைச் சுமந்து கொண்டிருப்பது? வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க தலைவரிடம் வலியுறுத்துவேன்’ என்பதுதான் நேரு பேசிய பேச்சின் சாரம்.

ஆஹான்

மக்களவையில் தி.மு.க கூட்டணிக் கட்சி எம்.பி-க்கள் அனைவரும் ‘தமிழ் வாழ்க’ என்று ஒற்றுமையாகக் குரலெழுப்பி நான்கு நாள்கள்கூட முடியவில்லை. அதற்குள் கூட்டணிக்குள் குண்டுவெடிக்க என்ன காரணம்? நேரு எழுப்பிய இந்தக் கலகக்குரல்தான் கழகத்தின் குரலா? உண்மையில் யாருடைய குரலாக ஒலிக்கிறார் நேரு? ‘பா.ஜ.க-வைத் தூக்கிச் சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தோம்...’ என்று தம்பிதுரை கேட்டதற்கும் ‘காங்கிரஸை தூக்கிச் சுமக்க முடியாது’ என்று நேரு சொல்வதற்கும் என்ன வேறுபாடு?

 Pa Ganesan

ஆஹான்

பில்லி சூனியம், ஏவல், செய்வினை, அமாவாசை அன்று மயானத்தில் மண்டை ஓடு பூஜை, மழைக்காக அண்டா - குண்டாவில் உட்கார்ந்து பூஜை, குழந்தைகளுக்கு ஓதுவது, மாணவர்களுக்கான பள்ளிப் பொதுத்தேர்வு கால சிறப்பு ஜெபம் எனத் தனி மனிதனுக்குப் பல நம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால், எந்த மத நம்பிக்கையையும் சாராமல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய அரசு, கோயில்களில் யாகம் நடத்த உத்தரவிடுவதும் அமைச்சர்கள் மாலை மரியாதையோடு அமர்ந்து படம் காட்டுவதும் பார்ப்பதற்கு கேவலமாகவும் அருவருப்பாகவும் உள்ளது. மக்களிடம் அறிவியல் கருத்துகளை பரப்ப வேண்டியது அரசின் கடமை என்று இந்திய அரசியலமைப்பு கூறுகிறது.

மழைக்காகக் கோயில்களில் யாகம் நடத்தினால், மழை வரும் என்று நம்புகிற அரசு, இனி இந்து சமய அறநிலையத் துறையைத் தவிர வேறு அரசுத் துறைகளை எல்லாம் மூடிவிட்டு மக்கள் தங்கள் பிரச்னைகள், அடிப்படைத் தேவைகள், மருத்துவச் சிகிச்சை, கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்துக்கும் கோயில்களில் மனுக் கொடுத்து யாகம் நடத்திக்கொள்ளுங்கள் என அறிவித்துவிட்டு, மந்திரிகளை வைத்து மணியாட்டலாம்!

ஆஹான்

Kavin Malar

பொதுவெளியில், ஒரு கருத்தரங்கத்தில் வைத்து தன்னைப் பார்த்து ‘மரம்வெட்டி எனச் சொல்லும் ஊடகவியலாளர்களை வெட்டுவேன்’ என்கிறார் டாக்டர் ராமதாஸ். ‘சண்டாளர்கள்’ என சாதிப் பெயர் சொல்லித் திட்டுகிறார்.

ஊடகவியலாளர்களுக்கு ஒன்று என்றால் பொங்கும் சிலரைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அட ஏன் இன்னும் பொங்கலை? இதுக்குப் பொங்கலைன்னா பின்னே எதுக்குப் பொங்குவீங்க?

Rajesh Kumar

தமிழ்நாட்டுக் குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி.

TASMAC... என்பதன் பொருளாக்கம் கிடைத்து விட்டது.

T- தமிழ் நாட்டின்
A- அனைத்து
S- சரக்கடிக்கும்
M- மக்களும்
A- அருந்தும்
C- கோலா.

ஆஹான்
ஆஹான்

mekalapugazh

யாகத்தைவிட யோகா ஓரளவுக்குப் பரவாயில்லை. அவ்வளவுதான்!

 yugarajesh2

ஐந்து கோடி ரூபாய் கடன் பாக்கிக்காக விஜயகாந்த் வீடு, கல்லூரி ஏலம்

# நடிகர் சங்கத்தின் கடனை அடைச்ச கேப்டனுக்கு, சொந்தக் கடனை அடைக்க முடியாமல் போச்சேய்யா!

 sultan_Twitz

அ.தி.மு.க மக்களவைத் தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம் - செய்தி

# ஒரே ஒரு மக்களவைத் தலைவர் வர்றார்... வழி விடுங்கோ!