Published:Updated:

``நயன்தாராவுக்கு ஒரு நீதி... ஸ்வர்ணாவுக்கு ஒரு நீதியா?’’ ராதாரவி, ரஜினிகாந்த், விக்னேஷ் சிவனுக்கு லெனின் பாரதி கேள்வி

``நயன்தாராவுக்கு ஒரு நீதி... ஸ்வர்ணாவுக்கு ஒரு நீதியா?’’ ராதாரவி, ரஜினிகாந்த், விக்னேஷ் சிவனுக்கு லெனின் பாரதி கேள்வி
``நயன்தாராவுக்கு ஒரு நீதி... ஸ்வர்ணாவுக்கு ஒரு நீதியா?’’ ராதாரவி, ரஜினிகாந்த், விக்னேஷ் சிவனுக்கு லெனின் பாரதி கேள்வி

இயக்குநர் லெனின் பாரதி, நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய விஷயங்கள் சர்ச்சையானது பற்றிய தன் கருத்தைச் சொல்கிறார்.

`மேற்குத்தொடர்ச்சி மலை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன் தடத்தை அழுத்தமாகப் பதித்தவர் இயக்குநர் லெனின் பாரதி. அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் மும்முரமாக இருந்தவரை சந்தித்துப் பேசினேன். 

``நயன்தாராவுக்கு ஒரு நீதி... ஸ்வர்ணாவுக்கு ஒரு நீதியா?’’ ராதாரவி, ரஜினிகாந்த், விக்னேஷ் சிவனுக்கு லெனின் பாரதி கேள்வி

`` `மேற்குத்தொடர்ச்சி மலை'க்குப் பிறகான வாழ்க்கை எப்படியிருக்கு?’’

''ரொம்ப நல்லாயிருக்கு. ஒரு ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சுட்டேன். சீக்கிரமே படப்பிடிப்பை ஆரம்பிச்சிடுவேன். தவிர, பிரெஞ்ச் - ஆப்பிரிக்க படம் ஒன்றையும் இயக்கக் கேட்டிருக்காங்க. அதுக்கான வேலைகளும் போயிட்டிருக்கு. இந்தப் படத்துக்காக 40 நாள்கள் பிரான்ஸில் தங்கி கள ஆய்வுகள் பண்ணேன்.’’

``படம் எடுக்கிறதைவிட, ரிலீஸ் செய்வதில் இருக்கும் பிரச்னைகள் இங்கே எப்போ மாறும்னு நினைக்கிறீங்க?’’ 

``இந்தப் பிரச்னை கொஞ்சம் மாறிக்கிட்டிருக்கிறதாதான் நினைக்கிறேன். ஏன்னா, கன்டென்ட் இருக்கிற படங்கள் ரிலீஸ் ஆகுது. கவனமும் பெறுது. முதலில் சினிமா வணிகம் சார்ந்த கலையாகப் பார்க்கப்பட்டுச்சு. அப்புறம், வணிகமாவே மாறிடுச்சு. இப்போ, வணிகம் சூதாட்டமா மாறியிருக்கு. இந்தச் சிக்கல்கள்தான் இதுக்குக் காரணம். கலை நழுவி நழுவி ஒரு பொருளா மாறிடுச்சு. வணிகத்தை உடைக்கிறதுங்கிறது பெரிய வேலைதான். ஆனா, அதை உடைக்க நிறைய நல்ல படங்கள் வந்துட்டிருக்கு. பார்வையாளர்களும் அதை ஏத்துக்கிறாங்க. இது பெருகப் பெருக கண்டிப்பா நிலை மாறும். அதிக பொருள்செலவில் படமெடுத்து அதை ரிலீஸ் பண்ணி, போட்ட பணத்தை எடுக்குறது பெரிய விஷயமா இருக்கு. சின்னச் சின்ன படங்களில் தயாரிப்பாளர்களுக்கு ரிஸ்க் இருக்காது.’’ 

``நயன்தாராவுக்கு ஒரு நீதி... ஸ்வர்ணாவுக்கு ஒரு நீதியா?’’ ராதாரவி, ரஜினிகாந்த், விக்னேஷ் சிவனுக்கு லெனின் பாரதி கேள்வி

``அரசியல் சார்ந்த படங்களுக்கு சென்சார் போர்ட்ல நிறைய கட் சொல்றாங்க. ஆனா, 'இருட்டு அறையில் முரட்டு குத்து', '90 எம்.எல்' மாதிரியான படங்களுக்கு 'A' சர்டிபிகேட் கொடுத்து ரிலீஸ் பண்றாங்க. இதை எப்படிப் பார்க்குறீங்க?''

``சென்சார் போர்டுமேல பல குற்றச்சாட்டு இருக்கு. மத்தியில் ஆளக்கூடிய கட்சி ஆள்களைத்தான் சென்சார் போர்டு கமிட்டியில் பார்க்க முடியுது. இதுதான் வரலாறாகவும் இருக்கு. தணிக்கைக்குத் தனி தகுதி இருக்கணும். சென்சார் போர்டு முதிர்ச்சியடையாமல் இருக்கு. இங்கே, திரைப்படக் கலை சார்ந்த அனுபவமிக்க ஆள்கள் இருக்கணும். 'மேற்குத்தொடர்ச்சி மலை' படத்துல தமிழ், மலையாளம் ரெண்டுமே இருக்கும். ஆனா, படம் சென்சாருக்குப் போனப்போ மலையாளம் தெரிஞ்ச ஒருவர்கூட அங்கே இல்லை. படத்துல தேனி மாவட்ட வட்டார வழக்கு பேசியிருப்போம். 'உன் ங்கோத்தா, அப்பா காலத்துலலாம் இந்தக் கஷ்டம் இல்ல'னு வசனம் வரும். இதில் வர்ற 'ங்கோத்தா'ங்கிற வார்த்தையைக் கட் பண்ணி எடுத்தாங்க. எந்த நிலம் சார்ந்த பகுதியில இருந்து இந்தப் படம் வருதோ, அதுக்கான ஆள்களை உட்கார வைக்கணும்னு யோசிக்க மாட்டேங்கிறாங்க. இதனாலதான் சிக்கல் வருது. 

தவிர, ஆளுங்கட்சியைச் சார்ந்த ஆள்கள் சென்சாரில் இருக்கிறப்போ, அவங்க கட்சிக் கொள்கைக்கு எதிரான படங்கள் வரும்போது எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. பத்தில் இருவர்தான் அங்கே பொதுவான ஆள்களா இருக்காங்க. இப்போ, சென்சார் போர்டு தலைமைப் பொறுப்புல இருக்கிற லீலா மேடம் சரியான தேர்வைச் செய்றதா நண்பரகள் மூலமா கேள்விப்பட்டேன்.’’ 

``நயன்தாராவுக்கு ஒரு நீதி... ஸ்வர்ணாவுக்கு ஒரு நீதியா?’’ ராதாரவி, ரஜினிகாந்த், விக்னேஷ் சிவனுக்கு லெனின் பாரதி கேள்வி

''அடல்ட் ஜானர்களுக்கு அதிக திரையரங்குகள் கிடைக்குது. இதனால, நல்ல படங்கள் எடுக்கிற சிலர் வருத்தப்படுறாங்க. இதை எப்படிப் பார்க்குறீங்க?''

'' 'கொலையுதிர் காலம்' படத்தோட பிரஸ் மீட்ல நடிகர் ராதாரவி சபை நாகரிகம் இல்லாம, பெண்கள் பற்றிய புரிதல் இல்லாம, பிற்போக்குத் தன்மையுடன் ஆபாசமா பேசுறார். இது வன்மையாகக் கண்டிக்க வேண்டிய செயல்தான். இதுக்கு அடுத்து நடந்த விஷயங்களைத்தான் நாம கூர்ந்து கவனிக்கணும். விக்னேஷ் சிவன் ஒரு ட்வீட் போடுறார். 'ராதாரவி ஒரு பாரம்பர்ய குடும்பத்துல இருந்து வந்தவர். அவர் இப்படிப் பேசிட்டார். அவர் பேசுனதுகூட பரவாயில்ல. அங்கே உட்கார்ந்து கைத்தட்டுனவங்களை நினைக்கும்போது, எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு'னு. இது ஒரு நியாயமான கோபம். அதை அப்படியே நிறுத்திட்டு, சுய மதீப்பிடுக்கு வந்தால், இதே விக்னேஷ் சிவன் 'நானும் ரெளடிதான்' படத்துல பார்த்திபன்கிட்ட நயன்தாரா, 'நான் உங்களைப் போடணும் சார்'னு சொல்ற மாதிரி வசனம் கொடுத்துப் பேச வச்சிருக்கார். பார்வையாளர்கள் இந்தக் காட்சியைப் பார்த்துட்டு கைதட்டி சிரிக்கும்போது, விக்னேஷ் சிவனுக்கு சந்தோஷமா இருக்கு. 

படத்துல இடம்பெற்ற வசனங்களும் ஆபாசங்களும் தங்களுக்கு நேரடியா வரும்போது வலிக்குது. அப்போ, உங்களுக்கு சுயமரியாதை, தார்மிகக் கோபம் இருக்கிற மாதிரி, பார்வையாளர்களுக்கும் இருக்கும் இல்லையா? ராதாரவி பேசுனதுகூட தனி அரங்கம். ஆனா, திரையரங்கில் குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும் இருப்பாங்க. விக்னேஷ் சிவன்மேல மட்டும் தப்பு சொல்லலை. சினிமா எப்படி இயங்குதுன்னா, இரட்டை அர்த்த வசனங்கள் அவங்கவங்க படங்களில் பணமா மாறும்போது, தப்பா தெரியலை. ஆனா, அவங்களைத் தனிப்பட்ட முறையில் பேசுறப்போ தப்பா இருக்கு. நயன்தாரா விஷயத்துல தமிழ்த் திரைப்படச் சமூகமே பொங்கி எழுறாங்க, கொதிக்கிறாங்க, ட்வீட் பண்றாங்க, சப்போர்ட் பண்றாங்க. ஆனா, இதே விஷயம் துணை நடிகைகளுக்கு வரும்போது யாருமே வரமாட்டேங்கிறாங்க. பிரபலமா இருக்கிறவங்களுக்கு ஒரு நீதி, இல்லாதவங்களுக்கு நீதி என்பது அநீதியா இருக்கு. நயன்தாராவையும் குறைச்சு சொல்லலை. ஒரு பெண்ணாக இந்த இடத்துக்கு வர நிறையவே கஷ்டப்பட்டிருப்பாங்க. ஆனா, இவங்க எடுக்குற, நடிக்கிற திரைப்படங்களில் இந்த அறம் இருக்கா... அதுதான் என் கேள்வி. 

``நயன்தாராவுக்கு ஒரு நீதி... ஸ்வர்ணாவுக்கு ஒரு நீதியா?’’ ராதாரவி, ரஜினிகாந்த், விக்னேஷ் சிவனுக்கு லெனின் பாரதி கேள்வி

உச்சநட்சத்திரம்னு சொல்ற ரஜினிகாந்த் படங்களிலும் இது இருக்கு. 'சந்திரமுகி' படத்துக்குக் குடும்பம் குடும்பமா திருவிழா மாதிரி போய்ப் பார்த்தாங்க, கொண்டாடுனாங்க. அந்தப் படத்துலகூட வடிவேலு மனைவி ஸ்வர்ணா கேரக்டரை வச்சு ரஜினிகாந்த் கொச்சையான வசனங்களைப் பேசியிருப்பார். அதை யார் கண்டிக்கிறது, கேட்குறது? பொது ஜனங்களுக்கு எந்த மாதிரியான சினிமாவைக் கொடுத்திருக்கீங்களோ, அதுதான் திரும்பவரும். அதனால, ஒரு படைப்பாளிக்குப் பொறுப்பு ரொம்ப முக்கியம். விக்னேஷ் சிவன் தனது அடுத்த படங்களில் இதுமாதிரியான வசனங்களை வைக்கக் கூடாது. நயன்தாரா விஷயம் விக்னேஷ் சிவனைத் தொந்தரவு பண்ணுன மாதிரிதான், அவர் வைத்த வசனம் ரசிகர்களைத் தொந்தரவு பண்ணும்.''

'சினிமாவில் நிலவும் 'உருவம்' மீதான அரசியல் குறித்து?'' 

''உருவ அரசியல்ங்கிறது காலம் காலமா இருக்கு. அழகாக இருக்கிறவங்கதான் மனிதர்கள், கதாநாயகர்கள், கதாநாயகிகள்னு கட்டமைச்சிருக்காங்க. சிலர் இதை உடைச்சு உள்ளே வர்றாங்க. ஆனா, ஒருகட்டத்துக்கு மேலே அவங்களும் உருவ அரசியலுக்குள் சிக்கிடுறாங்க. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தை எல்லோரும் நகைச்சுவைக்குரிய விஷயமா பார்க்கிறாங்க. அதுக்குக் காரணம், சினிமாவில் கட்டமைக்கப்பட்ட உருவ அரசியல்தான். இன்னைக்கு இருக்கிற காமெடி கதாபாத்திரங்களை எடுத்துக்கோங்க... உருவகேலிதான் பண்றோம். யோகி பாபுவைக்கூட 'பன்னி மூஞ்சி வாயா'னுதான் சொல்றோம். உருவத்தைக் கிண்டல் பண்றது, நகைச்சுவை கிடையாது."  

``நயன்தாராவுக்கு ஒரு நீதி... ஸ்வர்ணாவுக்கு ஒரு நீதியா?’’ ராதாரவி, ரஜினிகாந்த், விக்னேஷ் சிவனுக்கு லெனின் பாரதி கேள்வி

'ஹீரோக்கள் கட்டுப்பாட்டில்தான் தமிழ் சினிமா இருக்கா?''

'தமிழ் சினிமா மட்டுமல்ல, ஹாலிவுட் சினிமாக்களும்கூட அப்படித்தான் இருக்கு. ஒரு நடிகர் ஜெயிச்சுட்டா, அவரை நோக்கித் தயாரிப்பாளர்கள் ஓடுவாங்க. முடிவெடுக்கும் அதிகாரம் 90% முன்னணி ஹீரோக்கள் கையில்தான் இருக்கு'' என்று முடிக்கிறார் வருத்தத்துடன்! 

அடுத்த கட்டுரைக்கு