Published:Updated:

``டினேரியஸ் திட்டம், அன்சல்லீடு அடிமைகள், வார்க்.. `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்!" அத்தியாயம் 6

தார்மிக் லீ
``டினேரியஸ் திட்டம், அன்சல்லீடு அடிமைகள், வார்க்.. `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்!" அத்தியாயம் 6
``டினேரியஸ் திட்டம், அன்சல்லீடு அடிமைகள், வார்க்.. `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்!" அத்தியாயம் 6

`கேம் ஆஃப் த்ரோன்ஸ் : ஒரு க்விக் அறிமுகம்!" அத்தியாயம் - 6

இதுவரை இரண்டு சீஸன்களின் கதையையும் பார்த்தோம். இரண்டாவது சீஸனின் முடிவில் ஒயிட்வாக்கர்களின் வருகை வரை கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம். முதல் சீஸனில் இருந்த நிலை, தற்போது தலைகீழாக மாறியிருப்பதை நம்மால் உணர முடியும். நெட் ஸ்டார்க்கின் இறப்பு, புதிய மன்னன் ஜோஃப்ரி பராத்தியனின் கொடுங்கோல் ஆட்சி, ஒயிட்வாக்கர்களின் வருகை, ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணிப்பது, ஜான் ஸ்நோ நைட்ஸ் வாட்ச்சில் சேர்ந்து தன்னை அடையாளப்படுத்தத் தொடங்கியது, டினேரியஸ் டார்கேரியனின் மூன்று டிராகன்கள்... என அனைத்தும் அப்படியே நேரெதிர் ஆகிவிட்டது. இந்த அத்தியாயத்திலும், அடுத்த அத்தியாயத்திலும் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' மூன்றாவது சீஸனில் நடந்ததைப் பார்ப்போம்!

``டினேரியஸ் திட்டம், அன்சல்லீடு அடிமைகள், வார்க்.. `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்!" அத்தியாயம் 6

இந்த சீஸனின் கடைசி எபிசோடு, ஒயிட்வாக்கர்களிடம் முடிந்ததைப் பார்த்தோம். மூன்றாவது சீஸனின் முதல் எபிசோடு, நைட்ஸ் வாட்ச்சின் பயணத்தில் ஆரம்பிக்கும். ஒயில்டுலிங்ஸ் இருப்பிடம் நோக்கிய பயணத்தைப் பற்றி முன்பே கூறியிருந்தேன். அந்தப் பயணத்தின்போது, ஒயிட்வாக்கர்களின் இருப்பை உறுதி செய்யும் ஜியோர் மோர்மன்ட் (Jeor Mormont - நைட்ஸ்வாட்ச் தலைவன்), மீண்டும் அவர்களது தலைமையிடமான `தி வால்'க்குக் கிளம்பிவிடுவார். மறுபக்கம், நைட்ஸ் வாட்ச்சிடமிருந்து பிரிந்து, ஒயில்டுலிங்ஸின் இருப்பிடத்தைப் பார்க்கும் ஜான் ஸ்நோ, அவர்களது தலைவனான மான்ஸி ரைடரைப் பார்த்து நட்பாகிவிடுவார். மான்ஸி ரைடர் என்பவர், ஒயில்டுலிங்ஸ் இனத்தைச் சேர்ந்தவர். ஆனால், இவர் முன்பு நைட்ஸ் வாட்ச்சிற்காகப் பணியாற்றியிருப்பார். ஜான் ஸ்நோ தன்னுடன் பயணித்த இக்ரிட் என்பவர் மீது காதல் வயப்பட்டிருப்பார். 

கேமராவைக் கிங்ஸ் லேண்டிங் பக்கமாகத் திருப்புவோம். 'போரில் வென்றது என்னுடைய உதவியால்தான். எனக்கு ஏன் எந்த அங்கீகாரமும் தரவில்லை' என டிரியன் லானிஸ்டர், அவரது தந்தை டைவின் லானிஸ்டரும் கோபித்துக்கொண்டிருப்பார். `நீ ஒரு டுவார்ஃப் (Dwarf)' என்பதைச் சொல்லாமல் சொல்லி, டிரியனை அவமதித்துவிடுவார், டைவின். ஒருவழியாக சான்ஸா தான் இங்கு மாட்டிக்கொண்டதை உணர ஆரம்பிப்பார். `கவலைப்படாதே இந்த இடத்திலிருந்து நீ தப்பிக்க நான் உனக்கு உதவுகிறேன்' என்று சூசகமாகச் சான்ஸாவிடம் பேசி, ஏதோ திட்டம் தீட்டிக்கொண்டிருப்பார், லிட்டில் ஃபிங்கர் (பீட்டர் பெயிலிஷ்). 

ஜோஃப்ரியின் மனைவியாகப்போகும் மார்கேரி டைரல், கிங்ஸ் லேண்டிங்கில் இருக்கும் ஆதரவற்ற மக்களைச் சந்தித்து, தன்னுடைய நல்லெண்ணத்தை அவர்களிடையே பதியவைத்துக்கொண்டிருப்பார். இது ஜோஃப்ரி பராத்தியனுக்கும், செர்சி லானிஸ்டருக்கும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுக்கும். எங்கே நம்மிடமிருந்து மற்றவர்கள் இந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிக்கொள்வார்களோ என்ற பயம்தான் அது. மெலிஸாண்ட்ரே தன்னுடைய ப்ளாக் மேஜிக்கிற்காக சில மக்களைப் பலி கொடுத்துக்கொண்டிருப்பது டேவோஸிற்கு (ஸ்டானிஸ் பராத்தியனின் பாதுகாவலர்) தெரியவரும். இதனால், மெலிஸாண்ட்ரேவைக் கொல்லவும் செல்வார். இதைப் பார்க்கும் ஸ்டானிஸ் பராத்தியன், அவரைத் தடுத்து சிறைப்பிடிக்க உத்தரவிடுவார். மறுபக்கம், ராப் ஸ்டார்க் கிங்ஸ் லேண்டிங்கை எதிர்த்துப் போர் புரிய தன் படையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பலப்படுத்திக்கொண்டிருப்பார். வெஸ்டிரோஸில் இப்படியாக நடந்துகொண்டிருக்கும். 

``டினேரியஸ் திட்டம், அன்சல்லீடு அடிமைகள், வார்க்.. `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்!" அத்தியாயம் 6

எஸ்ஸோஸில், தனது படையைப் பலப்படுத்திக்கொண்டிருக்கும் டினேரியஸ் டார்கேரின், பக்கத்து ஊர்களில் அடிமையாக்கப்பட்ட மக்களைத் தனது டிராகன்கள் உதவியோடு காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். தவிர, அவரது மூன்று டிராகன்களும் நல்ல வளர்ச்சியை எட்டியிருக்கும். அந்தச் சமயத்தில் டினேரியஸின் பாதுகாவலரான ஜோரா மோர்மன்ட், `அன்சல்லீடு' எனும் அடிமைப்படையைப் பற்றிச் சொல்வார். அவர்கள் மரணத்திற்கே பயப்படாத படை. அதிலிருக்கும் ஒவ்வொரு போர் வீரனுக்கும் உணர்ச்சியென்பதே கிடையாது. அதைத் தன்வசப்படுத்திக்கொண்டால், சூழல் தனக்குச் சாதகமாக இருக்கும் என்று திட்டமிடுவார், டினேரியஸ். அதனால், அன்சல்லீடு இருப்பிடமான அஸ்டோஃபர் நோக்கிப் பயணத்தையும் தொடங்குவார். மிகுந்த பலங்கொண்ட அன்சல்லீடு படையை அந்த ஊர் அரசரிடம் பேசிப் பெறப்போவது எப்படி என்பதைப் பிறகு பார்ப்போம்.

மீண்டும், வெஸ்டிரோஸ் நோக்கி வருவோம். ஜேமி லானிஸ்டரைப் பாதுகாப்பாக கிங்ஸ் லேண்டிங்கிற்குக் கொண்டுசெல்லும் வழியில் போல்டனின் தளபதியால் பிரையின் டார்த்தும், ஜேமி லானிஸ்டரும் அந்த வீரர்களிடம் சிக்கிக்கொள்வார்கள். அப்போது நடக்கும் ஒரு சண்டையில் ஜேமி லானிஸ்டர் தனது வாள் பிடிக்கும் கையை இழந்துவிடுவார். ஜோஃப்ரியும், மார்கேரி டைரல்லும் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களது திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டிருப்பார்கள். ஜோஃப்ரிக்கும், மார்கேரியைப் பிடிக்கத் தொடங்கும். எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களைப் பார்க்கும் ப்ரான் ஸ்டார்க், தனது எதிர்காலக் கனவில் அடிக்கடி இவர் வயதுகொண்ட ஒரு சிறுவனைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்.

தியோன் க்ரேஜாய், தனது கிறுக்குத்தனத்தால் ரூஸ் போல்டனின் 'பாஸ்டர்டு' மகனான ராம்ஸே போல்டன் என்பவரிடம் பணயக் கைதியாகிவிடுவார். அதுமட்டுமன்றி, நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவிற்கு ராம்ஸே போல்டனின் சில கொடுமைகளுக்கு ஆளாவார். ஒயில்டுலிங்ஸுடன் பயணப்படும் ஜான் ஸ்நோ, அங்கிருக்கும் சிலர் செத்துக்கிடப்பதைப் பார்க்கிறார். மேலும், அதெல்லாம் ஒயிட்வாக்கர்களின் வேலை என்றும், செத்தவர்கள் மீண்டும் விட்ஸாக (Wights - ஒயிட்வாக்கர்ஸ் படை) வருவார்கள் என்று அவருக்குத் தெரியவரும். இதனால், டோர்மண்ட் என்பவரோடு, ஜான் ஸ்நோவைக் 'காஸ்டில் ப்ளாக்'கை எதிர்த்துச் சண்டையிட உத்தரவிடுகிறார், மான்ஸி ரைடர். ஜான் ஸ்நோவின் மீதான நம்பகத்தன்மையைப் பரிசோதிப்பதற்காக இப்படிச் சொல்லியிருப்பார். 

``டினேரியஸ் திட்டம், அன்சல்லீடு அடிமைகள், வார்க்.. `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்!" அத்தியாயம் 6

ராப் ஸ்டார்க் படை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததையும், ஃப்ரே குடும்பத்திடம் கொடுத்த வாக்கை மீறி தான் காதலித்த டலிசாவைத் திருமணம் செய்திருந்ததையும் முன்பே பார்த்திருந்தோம். தனது படையைப் பலப்படுத்த ரூஸ் போல்டனுடன் ஒரு சிறிய பயணத்தை மேற்கொள்வார், ராப் ஸ்டார்க். அந்தச் சமயத்தில் கேட்லினின் தந்தை இறந்த செய்தி இவர்களுக்குத் தெரியவரும். மறுபக்கம், கிங்ஸ் லேண்டிங்கிலிருக்கும் லிட்டில் ஃபிங்கர், `டல்லி குடும்பத்தைச் சேர்ந்த லீஸா டல்லியுடன் கைகோத்துவிட்டால் அவர்களுடைய ஆதரவு நமக்குக் கிடைக்கும்' என்று சதித்திட்டம் தீட்டுவார். லீஸா டல்லி என்பவர், காட்டலின் ஸ்டார்க்கின் உடன் பிறந்த சகோதரி. இவர்களுக்கும், லிட்டில் ஃபிங்கருக்குமே நிறைய கதைகள் இருக்கிறது. தனது இந்த நூதனத் திட்டத்தால் சந்தர்ப்பத்தை தனக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்று திட்டமிடுவார், லிட்டில் ஃபிங்கர். டைவின் லானிஸ்டர், அவருக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும், தந்திரப் பேச்சால் எல்லாவற்றையும் தற்காலிகமாக நிறுத்திவைப்பார். 

ப்ரான் ஸ்டார்க் தனது பாதுகாவலர்கள் ஓஷோ மற்றும் ஹோடோருடன் பயணப்படும்போது, தனது கனவில் பார்த்த அந்தச் சிறுவனை நேரில் சந்திப்பார். அப்போதுதான், அவர் ரீடு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரும் அவரின் தங்கையும் ப்ரானைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவரும். ரீடு குடும்பம் காலங்காலமாக ஸ்டார்க் குடும்பத்திற்குச் சேவை செய்துவரும் குடும்பம். ப்ரான் ஸ்டர்க் ஆபத்தில் இருப்பது தெரியவந்தவுடன், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஜோஜன் ரீடு, மீரா ரீடு ஆகிய இருவரும் அவரைத் தேடிப் பயணித்துக்கொண்டிருப்பார்கள். ப்ரான் ஸ்டார்க் முன்பு எதிர்காலத்தில் பார்க்கும் அந்தக் கனவு, நிகழ்காலத்தில் தற்போது நடப்பவை. ஜோஜன் ரீடு என்பவர், ஒரு வார்க் (Warg). அப்படியென்றால், விலங்கு அல்லது பறவைகளின் ஆன்மாவுக்குள் சென்று வேறு இடத்திற்குப் பயணித்து அங்கு நடக்கும் நிகழ்வுகளை இங்கிருந்தே பார்ப்பவர்கள். ப்ரான் ஸ்டார்க், ஹோடோர், ஓஷா என மூன்று பேராகப் பயணித்துக்கொண்டிருந்தவர்கள், அந்த இருவருடன் இணைந்து இப்போது ஐந்து பேராகப் பயணித்துக்கொண்டிருப்பார்கள். எங்கு என்பதைப் பிறகு பார்ப்போம். 

``டினேரியஸ் திட்டம், அன்சல்லீடு அடிமைகள், வார்க்.. `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்!" அத்தியாயம் 6

இப்போது, எஸ்ஸோஸ் நோக்கிப் பயணிப்போம். தன்னுடைய ஒரு டிராகனைக் கொடுத்து அன்சல்லீடின் மொத்தப் படையையும் வாங்குவதுதான், டினேரியஸின் திட்டம். இதை அஸ்டோஃபர் அரசரிடமும் சொல்லி, இருவரும் ஒப்புக்கொள்வார்கள். மேலும் மொழிபெயர்ப்பு செய்யும் மிஸ்ஸாண்டே என்பவரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்வார். பல்லாயிரக்கணக்கான அன்சல்லீடு படைவீரர்கள் முன்பும், அந்த மக்கள் முன்பும் தனது டிராகனைப் பெட்டகத்துக்குள்ளிருந்து வெளியே வரவழைப்பார். எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காக, டிராகனுடைய காலில் சங்கிலி போட்டுக் கட்டியிருப்பார். ஒரு கையில் டிராகனைக் கொடுக்கும் டினேரியஸ், மறுகையில் அந்தப் படையைக் கட்டுப்படுத்தும் கோலைப் (Whip) பெற்றுக்கொள்வார். டினேரிஸ் டார்கேரியனுக்கு வலேரியன் மொழி தெரியாது என்று எண்ணி, அஸ்டோஃபர் அரசன் அவரைத் தகாத வார்த்தையால் திட்டுவார். அதைக் கேட்டதும், `டிராகன் நீ நினைப்பதுபோல் அடிமை கிடையாது. நான் டார்கேரியன் குடும்பத்தைச் சேர்ந்தவள். வலேரியன்தான் என்னுடைய தாய்மொழி' என்று அவர் மொழியிலேயே பேசி அசரடிப்பார், டினேரியஸ். இது அங்கிருக்கும் அனைவருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுக்கும். மேலும், குழந்தைகளைத் தவிர அங்கிருக்கும் மந்திரி, அரசு அதிகாரி, தன்னை அரசன் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் அத்தனை ஆளுமைகளையும் கொல்லச் சொல்லி, அன்சல்லீடு படைக்கு உத்தரவிடுவார். அதுமட்டுமன்றி, அந்த அரசன் டிராகனைக் கையில் பிடித்திருக்கும்போது, `ட்ரக்காரிஸ்' என்று டிராகனுக்கும் உத்தரவிடுவார். அதைக்கேட்ட அடுத்த நொடி, தீக்குழம்புகளைக் கக்கி அந்த அரசரை டிராகன் கொன்றுவிடும். 

அடிமைத்தனம் செய்துகொண்டிருந்த ஒவ்வொருவரையும் கொன்றுவிட்டு, அன்சல்லீடு படையைத் தன் பக்கம் இழுத்துக்கொள்வார், டினேரியஸ். `நீங்கள் யாரும் என்னிடம் அடிமையாக வேலை செய்யவேண்டாம். இப்போதே யார் வேண்டுமானாலும் இங்கிருந்து போகலாம். முழுக்க என் மீது நம்பிக்கை வைப்பவர்கள் மட்டும் எனக்காக நில்லுங்கள்' என்று உணர்ச்சிவசமாகப் பேசுவார், டினேரியஸ். இவரின் பேச்சைக் கேட்டு ஒட்டுமொத்தப் படையும், கையில் பிடித்திருக்கும் ஈட்டிகளைத் தரையில் தட்டி தங்கள் ஆதரவைத் தெரிவிப்பார்கள். அவர்கள் தட்டும் தட்டில் மொத்த ஊருமே அதிரும். கையில் வைத்திருந்த கோலைத் தூக்கியெறிந்துவிட்டு, அந்த மாபெரும் படையோடு தன் பயணத்தைத் தொடங்குவார், டினேரியஸ்.

``டினேரியஸ் திட்டம், அன்சல்லீடு அடிமைகள், வார்க்.. `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்!" அத்தியாயம் 6

சொந்த நாட்டு மக்களே உயிருக்கு பயந்து ஓடிய டினிரேஸ் டார்கேரியனுக்கு இவ்வளவு பெரிய படை பலம் கிடைத்திருக்கிறது. இதை வைத்து என்னவெல்லாம் செய்யவிருக்கிறார் என்பதோடு, மற்ற கதைகளையும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

வின்டர் வந்துகொண்டிருக்கிறது...

அடுத்த கட்டுரைக்கு