பட்டாம்பூச்சிகள் வித் பாப்கார்ன்!
'சண்டே ஃபன் டே!’ என்று ஞாயிற்றுக் கிழமையானால் தமிழகமே டி.வி முன் தவம் இருக்கிறது. 'டி.வி கிளிகள் என்ன செய்வார்களாம்?’
சிலருக்கு மெசேஜ் தட்டினால், ''ரெய்டு அடிப்போம்...கும்பல் சேர்த்துட்டுப் போயி ரெய்டு அடிப்போம்!'' என்று, சொல்லிவைத்த
''குழந்தைப் பிள்ளைங்க (?!) நாங்க ஒண்ணு சேர்ந்தா, எப்பவுமே அட்டென்டன்ஸ் கொடுக்குற இடம் குட்டிப் பாப்பாக்கள் விளையாடும் ஃபன் சிட்டிதான்!'' என்று ரஜினி வீடியோ கேம் பைக்கில் ஏறி அமர்ந்தார். அனைத்து லெவல்களிலும் மொக்கை வாங்கியவரிடம் அருகில் இருந்த ஒரு பொடியன், ''என்ன ஆன்ட்டி, அவ்வளவு பில்ட்-அப் கொடுத்தீங்க. கியர் மாத்தக்கூடத் தெரியலை. என் தம்பியே ரெண்டு லெவல் தாண்டுவான்!'' என்று வெறுப்பேற்றினான். உடனே, 'ஓஓஓ...’ என்று கண்ணைக் கசக்கத் துவங்கினார் ரஜினி. ''என்னடா, இந்த விளையாட்டு விளையாடத் தெரியலைன்னா பரவாயில்லை. வா, துப்பாக்கி சுட்டு விளையாடலாம்!'' என்று தேற்றினார் சிந்து. உடனே, அவர்களைச் சுற்றி குழுமிவிட்டார்கள் அனைவரும்.


''அது இல்லைப்பா... அவன் எனக்கு விளையாடத் தெரியலைன்னு சொன்னதுகூடப் பரவாயில்லை. ஆனா, என்னை 'ஆன்ட்டி’னு சொல்லிட்டான். அதான் எனக்குக் கோபம் கோபமா வருது!'' என்று ரஜினி அழுவாச்சி காட்ட, 'கமாண்ட் மோட்’ மாறி ரௌத்ரம் ஆனார்கள். ''உன்னைப் 'பாட்டி’ன்னு சொல்லி இருக்கணும். 'ஆன்ட்டி’னு சொல்லி, உனக்கு வாழ்நாள் பெருமை சேர்த்திருக்கான். இதுல உனக்கு வருத்தம் வேறயா... ஒழுங்கு மருவாதியா எல்லோருக்கும் பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்துரு. மன்னிச்சு விட்டுர்றோம்!'' என்று சமாதான உடன்படிக்கை வாசித்தார் ஆர்த்தி. 'காட்டன் கேன்டி’ (பஞ்சு மிட்டாய்) கடையில் அடுத்த டேரா. ஆளுக்கு முந்தி பஞ்சு மிட்டாயைக் காலி செய்த ஜெயலக்ஷ்மி, கடைக்காரரிடம் பஞ்சு மிட்டாய் செய்வது எப்படி என்று டிப்ஸ் கேட்டு, அடம் பிடித்துச் செயலிலும் இறங்கிவிட்டார். ''தோடா... ஒரு தொழில் கத்துக்கிட்ட. உன்னைக் கட்டிக்கப் போற அந்த பாவப்பட்ட ஜீவனுக்கு பஞ்சு மிட்டாய் பண்ணிப் போட்டாவது பசியாத்துவ!'' என்று ஆரம்பித்து, இன்னும் ஏகமாக ஓட்டிஎடுத்துவிட்டார்கள்.
இவர்களின் அலம்பல்களை ஆரம்பம் முதல் கவனித்துக்கொண்டு இருந்த ஒரு வெள்ளைக்கார துரை, ''ஹாய், மிஸ் ஸ்வீட்டீஸ்!'' என்று வாலன்டியராக வந்து புன்னகைத்தார். விதி வலியது அல்லவா! ''ஹாய் அங்கிள்... நைஸ் டு மீட் யூ! வீ டெடிகேட் பாபா பிளாக் ஷீப் பாட்டு... ஃபார் யூ!'' என்று அவரையும் கலாய்த்துக் காலி செய்தார்கள். பாவம், துரைக்கு நுரை தள்ளாத குறை!

அதன் பிறகு ஆரம்பித்தது ஷாப்பிங் தடபுடல். 500, 1,000 அயிட்டங்களை மாட்டி அழகு பார்த்துவிட்டு, 10, 20 சங்கதிகளை மட்டும் பில் போடக் கொடுத்தார்கள் அம்மிணிகள். இறுதியில், தொட்டுத் துழாவிச் சேகரித்த காசில் ஒரே ஒரு டப்பா பாப்கார்ன் மட்டும் வாங்க முடிந்தது. ''நம்மளுக்குள்ள பலப் பரீட்சைவெச்சு ஜெயிக்கிறவங்க கையில இந்த டப்பாவைக் கொடுத்துருவோம்!'' என்று ஐடியா கொடுத்தார் நிஷா. உடனே, முஷ்டி முறுக்கி ஆர்த்தியும் சிந்துவும் பலப் பரீட்சையில் இறங்க, ஜெயலக்ஷ்மியும் ரஜினியும் ஆளுக்கு ஒருவரை ஆதரித்து உற்சாகப்படுத்தினார்கள். அந்த சைடு கேப்பில் பாப்கார்ன் டப்பாவை லவட்டிச் சென்று கொரித்துக்கொண்டு இருந்தார் நிஷா. அதற்கு மேலும் அங்கு இருந்து க்ளைமாக்ஸ் பார்க்கும் தைரியம் இல்லாததால், எஸ்கேப்!