Published:Updated:

இங்கு பெண்கள் வேட்டி கட்டுகிறார்கள்!

இங்கு பெண்கள் வேட்டி கட்டுகிறார்கள்!

'wrap skirts’ சென்னை மின்மினி களின் இப்போதைய ஃபேஷன் சாய்ஸ் இதுதான்! கிட்டத்தட்ட ஆண்கள் அணியும் வேட்டி. அதில்

கலர் கலரா கப் பூக்களைச் சிதறவிட்டதும் 'wrap skirts’ அவதாரம் எடுத்துவிடுகிறது. சளைக்காமல் அவற்றையும் மடித்துக் கட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள் டீன் டிக்கெட்டுகள். wrap skirt-களின் ஸ்தல புராணம் தொடங்கி, பெருமை பகிர்ந்துகொள்கிறார் 'காட்டன் சிட்டி’யின் எம்.டி. ரஜிதா.

 ''மலாய், இலங்கை மக்களின் ஃபேவரைட் ஆடை இந்த ஸ்கர்ட்கள். இதற்கு முன்னரும் நம் பெண்கள் இதை நைட்டிக்குப் பதில் வீட்டுக்குள் அணிந்து வந்தார்கள். ஒரு சிலர், துணிந்து வெளியிடங்களுக்கும் அணிந்து வந்தார்கள். ஆனால், அந்த ஸ்கர்ட்களில் அழகிய வேலைப்பாடுகளோ, பளிச் டிசைன்களோ இருக்காது. ஒரே நிறத்தில் சிம்பிளாக இருக்கும். ஆனால், இப்போது இதிலேயே பிரின்டட் ஸ்கர்ட்கள் மார்க்கெட்டில் வரத் துவங்கி விட்டன. 'அட, கலர்ஃபுல்லா வித்தியாசமா இருக்கே!’ என்று அவற்றை அணிந்து ஷாப்பிங் மால், தியேட்டர், பீச், பூங்காக்கள் என்று பொது இடங்களில் வளைய வருகிறார்கள்.

இங்கு பெண்கள் வேட்டி கட்டுகிறார்கள்!

அதிலும் பிரின்டட் ஸ்கர்ட்களில் இந்தியப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் டிஸைன்கள் கண்ணைப் பறிக்கும். ஒவ்வொருத்தர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரியான அளவுகள், டிசைன் களில் ஸ்கர்ட்கள் கிடைக்கின்றன!'' என்பவர், தனக்கேற்ற ஸ்கர்ட்களைத் தேர்ந்தெடுப்பதுபற்றி சில டிப்ஸ்  கொடுக் கிறார்.

முட்டு தாண்டாத ஷார்ட் ஸ்கர்ட் களை மீட்டிங், நேர்முகத் தேர்வு, கல்லூரி போன்ற அலுவல் சார்ந்த இடங்களில் அணியாதீர்கள். அவை ஷாப்பிங், மாலை நேர விருந்து, பார்ட்டி போன்ற வற்றுக்கானவை. ஸ்கர்ட்டின் நிறத்துக்கு ஏற்றபடி குட்டிக் குட்டி டாப்கள் அணியலாம். அதே சமயம், கொஞ்சம் பருத்த உடல்வாகு கொண்டவர்கள் ஷார்ட் ஸ்கர்ட் அணியாமல் தவிர்ப்பது நலம்.

இங்கு பெண்கள் வேட்டி கட்டுகிறார்கள்!
இங்கு பெண்கள் வேட்டி கட்டுகிறார்கள்!

முழு நீள ஸ்கர்ட்கள் உங்களை எந்த இடத்திலும் பாந்தமாகக் காண்பிக்கும். ஸ்கர்ட்டின் நிறத் துக்கு எதிர் நிறத்தில் டாப் அணிய லாம். இவ்வளவு பில்ட்-அப் கொடுப்பதால், ஸ்கர்ட்களின் விலை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று

அஞ்சாதீர்கள். `200-ல் ஆரம்பிக்கிறது விலை குறைந்த மாடல்கள். அதிகபட்ச விலை `500-க்குள் அடங்கிவிடுகிறது!''

அப்புறமென்ன, wrap skirt-ஐ மடிச்சுக் கட்டுங்க கேர்ள்ஸ்!