இன்று... ஒன்று... நன்று...!
வணக்கம் நான் நாஞ்சில் நாடன்...
கோடை கடுமையா இருக்கு. வெக்கை தாங்கலை. நாம தண்ணீர் குடிக்கிறோம். பழரசம் குடிக்கிறோம். ஆனா, பறவைகள் என்ன செய்யும்? அவற்றுக்கும் தண்ணீர் தவிக்கும்தானே? அதற்கு நாம் என்ன செய்யலாம்? நம் அனைவருக்கும் சாத்தியமான ஒரு வழி சொல்கிறேன்.
நர்சரி பள்ளியில் படிக்கும் பையனிடம் கேட்டால், கடகடவென 20 கார்களின் பெயர்களைச் சொல்கிறான். ஆனால், 10 மரங்களின் பெயர் தெரியவில்லை. ஒருவருடன் 10 வருடங்கள் பழகியும், அவர் பெயர் தெரியாமல் இருப்போமா? நமக்கு மரங்களின் பெயர் தெரியவில்லை என்பதை நினைத்து, அந்த மரங்கள் எத்தனை வருத்தப்படும்? இதற்கு என்ன செய்யலாம்?

உலகில் வேறு எந்த மொழிக்காரர்களும் தமிழ்ச்செல்வன், தமிழரசி என மொழியின் பெயரால் தமக்குப் பெயர் வைத்துக்கொள்கிறார்களா எனத் தெரியாது. மலையாளச்செல்வன், கன்னடச்செல்வி, வங்கராணி என்று கேள்விப்பட்டது இல்லை. எந்த சினிமா காதலனும் தன் காதலியை கன்னித் தெலுங்கே, குஜராத்திக் கொடியே என்று பாடியது இல்லை. நமக்கு நம் மொழி மீது மரியாதை, பற்று அதிகம். ஆனால், 15 ஆண்டுகள் பள்ளியில் தமிழ் படிக்கும் பிள்ளைகளுக்குப் பிழை இல்லாமல் தமிழ் வாக்கியங்களை எழுதத் தெரியவில்லை. இதற்கு என்ன செய்வது?
ஒரு மசால் தோசை 50 ரூபாய், ஒரு காபி 20 ரூபாய் விற்கும் காலத்தில் 80 ருபாய்க்குப் புத்தகம் வாங்க யோசிக்கிறோம். குடும்பத்தின் வரவு - செலவுக் கணக்கு எல்லாம் மனதில் வந்துபோகிறது. ஒரு மனிதன் நற்குணங்களோடு வாழ்வதற்கு புத்தகங்கள் அவசியம். ஏன்?
வாருங்கள்... எல்லாம் பேசுவோம். 03.05.12-ம் தேதி முதல் 09.05.12-ம் தேதி வரை 044-66808034 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். உள்ளதைப் பேசுவோம்... உள்ளத்தில் இருந்து பேசுவோம்!
அன்புடன்...
நாஞ்சில் நாடன்