என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

அந்த 7 சிந்தனைகள்!

கி.கார்த்திகேயன்ஓவியங்கள் : ஹரன்

##~##

ங்களுக்குத் தெரியுமா? மனித உடலின் மொத்த எடையில் மூளையின் பங்கு இரண்டு சத விகிதம்தான். ஆனால், ஒரு மனிதனின் 60 சதவிகித ஜீன்கள் அவனுடைய மூளையை உருவாக்குவதில் மட்டுமே செலவழிக்கப்படு கின்றன.  

 ஏன் மூளைக்கு இத்தனை முக்கியத்துவம்? காரணம், ஜனனத்தின் முதல் அழுகை முதல் மரணத்தின் கடைசிப் புன்னகை வரை உங்கள் அத்தனை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவது மூளைதான். ஆக, வாழ்க்கையில் வெற்றி என்ற இலக்கை நீங்கள் எட்டிப்பிடிப்பதையும் கட்டுப்படுத் துவதும் நிச்சயம் மூளையின் ஆற்றல்தான். இங்கு வெற்றி என்பது உங்கள் தொழில்/அலுவலகம்/வணிகம் சார்ந்த இலக்குத் துரத்தல்கள் மட்டும் அல்ல. வீட்டினருடன் அன்புப் பரிமாற்றங்கள், உறவினர்களுக்குள் பாசப் பரிவர்த்தனைகள், குழந்தை வளர்ப் பின் அத்தியாவசியக் குணங்கள் ஆகிய அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்வதுதான் அந்த வெற்றியை முழுமை அடையச் செய்யும்.

அந்த 7 சிந்தனைகள்!

ஆக, உங்கள் மூளையில் ஒவ்வொரு கணமும் உதிக்கும் சிந்தனைகள் செறிவாக, சிறப்பாக இருப்பது அவசியம். ஆனால், எப்போதும் செறிவான சிந்தனைகளை மட்டுமே எப்படி உருவாக்க முடியும்? அதற்குத்தான் சில குணங்களைப் பழகிக்கொள்ளுங்கள் என்கிறார் ஹென்றி டாய். 'தி ஹேபிட் ஆஃப் சக்சஸ்’ (The Habits Of Success) என்ற புத்தகத்தில், மூளையின் திறனை அதிகரிக்க நாம் கைக்கொள்ள வேண்டிய குணங்களைப் பட்டியலிட்டு, அவற்றைக் கைக்கொள்வதற்கான உதாரணங்களையும் குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் விளக்கியிருக்கிறார். புத்தகத்தின் சுவாரஸ்யத்தில் இருந்து இங்கே கொஞ்சம்...

•  அந்த 7 குணங்கள்

1) எளிமை: கற்பனை, நெகிழ்வுத்தன்மை, தொடர் கற்றல்கொண்ட சிந்திக்கும் குணம்.

2) புரிந்துகொள்ளுதல்: எதையும் தெளி வாகப் புரிந்துகொள்ளுதல்.

3) தீர்க்கம்: எந்தச் சிக்கலுக்கும் அதன் பின்னணியையும் அலசி ஆராய்ந்து தெளி வான முடிவெடுத்தல்.  

4) துணிச்சல்: சாத்தியமான ரிஸ்க்கைத் துணிந்து எடுக்கும் ஆற்றல்.

5) துல்லியம்: எந்தத் தகவலையும் அதன் முன்-பின்புலம் அறிந்து துல்லியமாக முடிவெடுத்தல்.

6) சுய ஒழுக்கம்: நினைத்ததைச் செய்து முடித்தல்.

7) சின்னப்புள்ளத்தனம்: எதிலும் ஒளிந் திருக்கும் நகைச்சுவையை ரசிப்பது!

•  எளிமை

எந்தவொரு பிரச்னைக்கும் மிகமிக அடிப் படையான சங்கதியில் இருந்தே தீர்வை யோசிக்க வேண்டும்.

புதிதாகக் கட்டப்பட்ட அந்த ஷாப்பிங் மாலுக்குள் ஒரு கடையை வாடகைக்குப் பிடித்தான் அந்தத் துணி வியாபாரி. ஆனால், அந்த மால் முழுமையாகத் திறக் கப்பட்டபோது, அவன் கடைக்கு இருபுற மும் மிகப் பெரிய துணிக் கடைகள் இருந்தன. வலப்புறம் 'அதிரடித் தள்ளுபடி விலையில்’ என்று போர்டு தொங்க, இடப்புறம் 'வேறெங்கும் பார்க்க முடியாத வித்தியாசமான வெரைட்டிகளில்’ என்று பளபளத்தது வாசகம். இந்த இரண்டு விஷயத் திலும் அந்தக் கடைகளோடு போட்டியே போட முடியாது அவனால். அவனால் முடிந்தது ஒரே விஷயம்தான்... 'நுழைவாயில் இங்கே’ என்று மட்டும் ஒரு போர்டு எழுதி அவன் கடை வாசலில் தொங்கவிட்டுவிட்டான்!

அந்த 7 சிந்தனைகள்!

•  புரிந்துகொள்ளுதல்

உங்கள் வசம் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் அலசி ஆராய்ந்த பிறகே உங்கள் முடிவைத் தீர்மானியுங்கள்!

ஒருமுறை போப், நியூயார்க் நகரத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு அலுவல் சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில், நியூயார்க் நகர வீதிகளில் கார் ஓட்ட ஆசைப்பட்டார் போப். உடனே, டிரைவரைப் பின் இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு, அவர் கார் ஓட்டத் தொடங்கினார். ரசித்து, லயித்து ஓட்டிக்கொண்டு இருந்தவரை ஒரு முனையில் மடக்கினார்  டிராஃபிக் கான்ஸ்டபிள் ஒருவர். குனிந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால், டிரைவர் இருக்கையில் அமர்ந்தபடி போப் புன்னகை புரிந்துகொண்டு இருந்தார். அதைக் கண்டு ஆச்சர்ய அதிர்ச்சி அடைந்த கான்ஸ்டபிள், உடனே வாக்கி டாக்கியில் தனது மேலதிகாரியைத் தொடர்புகொண்டு, ''சார், இங்கே ஒரு பிரச்னை'' என்றார். ''என்ன பிரச்னை?'' என்று கேட்டார் மேலதிகாரி. ''நான் மிக முக்கியமான ஒருவரின் காரை வழிமறித்துவிட்டேன்.''

''யார் அந்த மிக முக்கியமானவர்?''

''அவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் போப்பையே டிரைவராக வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்!''

•  தீர்க்கம்

ஒரு சம்பவம் தொடர்பான முன் - பின் வரலாறு குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்த பிறகே தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும்!

நான்கு வேட்டைக்காரர்கள் அமேசான் காட்டுக்குச் சென்று வேட்டையாடத் தீர்மானித்தார்கள். காட்டுக்குள் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு மீண்டும் அழைத்துச் செல்ல ஒரு குட்டி விமானத்தை வாடகைக்கு அமர்த்திக்கொண்டார்கள். விமானத்தில் பறந்து சென்று காட்டுக்குள் இறங்கி ஐந்து மான்களைச் சுட்டு வீழ்த்தி, வேட்டையை வெற்றிகரமாக முடித்தார்கள். மான்களுடன் திரும்பி வந்த அவர்களைப் பார்த்த விமானி, ''ஏற்கெனவே நாம் ஐந்து பேர் இருக்கிறோம். நம்மோடு சேர்த்து இந்த ஐந்து மான்களையும் விமானம் தூக்கிச் செல்லாது. இரண்டு மான்களை இங்கேயே போட்டுவிடுங்கள்!'' என்றார்.

''அடப் போப்பா... போன வருடமும் இதேபோலத்தான் ஐந்து மான்களைச் சுமந்துகொண்டு இதே போன்ற விமானத்தில்தான் பறந்து சென்றோம். அதெல்லாம் கொண்டுசெல்லலாம்!'' என்று சமாதானங்கள் சொல்லி விமானியைச் சம்மதிக்கவைத்து மான்களை விமானத்தில் ஏற்றிவிட்டார்கள்.

விமானம் பறக்கத் தொடங்கியது. ஒரு மலை முகட்டைத் தாண்டுவதற்காக உயரப் பறக்க முற்பட்டார் விமானி. ஆனால், அதிக கனம் காரணமாக விமானம் மேலெழும்ப முடியாமல் மலையில் மோதிக் கீழே விழுந்தது. மயக்கம் தெளிந்து எழுந்த விமானி, ''நாம் எங்கே இருக்கிறோம்?'' என்று கேட்டார். அந்த நான்கு வேடர்களுள் ஒருவர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ''போன வருடம் நாங்கள் கீழே விழுந்த இடத்தில் இருந்து கிழக்காக அரை மைல் தூரம் தள்ளி இப்போது விழுந்திருக்கிறோம்!'' என்றார்.