என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

வணக்கங்க... நான் ராஜா பேசுறேன்...

இன்று... ஒன்று... நன்று...!

'எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லையென்றால், எப்போதோ என் வாழ்வை முடித்திருப்பேன்’னு மகாத்மா காந்தியே சொல்லியிருக்காராம். செலவே இல்லாத ஒப்பனை புன்னகைதான். ஆனா, அந்த நகையைக்கூட நாம போட்டுக்கிறது இல்லை.

இப்போ நான்லாம் யாரையாவது உடம்பு சரியில்லையானு சீரியஸா விசாரிச்சாக்கூட, 'என்னங்க... உங்களுக்கு எதுவும் உடம்புக்கு நோவா’னு என்கிட்ட நலம் விசாரிக்கிறாங்க. இருக்கிற இம்சைகள்ல எப்படா ரெண்டு நிமிஷம் சிரிப்போம்னு ஒவ்வொருத்தரும் தேடித் திரியிறாங்க. நீங்க இருக்கிற இடத்துல யார் மனசையும் நோகடிக்காம சிரிக்க வைக்கிறது பெரிய கம்பசூத்திரம் எல்லாம் இல்லை. அது எப்படினு உங்களுக்குச் சொல்றேன்...

இந்த அப்பா - பையன் கெமிஸ்ட்ரி இருக்கே... 'அவன் சகவாசம் சரியில்லை. பசங்களோட பார்த்துப் பழகச் சொல்லு’னு நம்ம பையன்கிட்ட சொல்லிக்கிட்டு இருப்போம். 'இதையேதான் அவன் அப்பாவும் அவன்கிட்ட சொன்னாராம்’னு அசால்ட்டா கமென்ட் அடிப்பானுங்க. ஒவ்வொரு அப்பாவும் தன் மகன் மேல இருக்குற பாசத்தைக் காட்டத் தெரியாமத்தான் அவனை அதட்டி, மிரட்டி, உருட்டிக்கிட்டு இருப்பாங்க. அந்தப் பாசத்தை எப்படிப் புரிஞ்சுக்கிறதுனு மகன்களுக்கும் பாசத்தை எப்படி வெளிக்காட்டுறதுனு அப்பாக் களுக்கும் சொல்றேன்...

அன்னைக்கு ரோட்ல பார்த்த ஒருத்தர்... 'சார்ர்ர்ர்ர்ர்... நீங்களா? என் மனைவி நீங்க டி.வி-ல பேசுறதைக் கேட்டா எனக்குச் சோறு தண்ணி வைக்க மாட்டா சார்! உங்களை நேர்ல பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை சார். உங்களோட ஒரே ஒரு போட்டோ எடுத்துக்குறேன் சார்’னு சொல்லி, உச்சி வெயில்ல வளைச்சு வளைச்சு போட்டோ புடிச்சார். எல்லாம் முடிச்சுட்டு கௌம்புறப்போ... 'சார்... தொண்டைக் குழியில இங்கே நிக்குது... ஆனா, வர மாட்டேங்குது... உங்க பேர் என்ன சார்’னு கேட்டார் பாருங்க ஒரு கேள்வி! இப்படி என்னைவெச்சு காமெடி பண்ண சந்தர்ப்பங்களைச் கூச்சம் பார்க்காம சொல்றேன். நல்லா விழுந்து விழுந்து சிரிங்க!

இப்படி இன்னும் நிறைய காமெடிக் கதைகள் இருக்கு. 24.05.12-ல இருந்து 30.05.12 வரைக்கும் 044-66808034  நம்பருக்குக் கூப்பிடுங்க. ஒண்ணு மண்ணா டீடெய்லா பேசலாம்!

இன்று... ஒன்று... நன்று...!

அன்புடன்...
உங்கள் ராஜா