என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

•  போதைப் பொருள் கடத்தல், திருட்டு பயம் அதிகம் நிறைந்த மெக்சிகோவில் காவல் துறை தலைவராகப் பொறுப்பேற்ற 22 வயது கல்லூரி மாணவி மேரிசால் வாலஸ், இப்போது உயிருக்குப் பயந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருக்கிறார். போதைக் கடத்தல் கும்பலைவிட, தன்னுடன் இருந்த போலீஸ்காரர்களே தன்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டுவதாகச் சீறுகிறார் மேரிசால். அப்புறம் ஏன் அமெரிக்கா போகணும்?

இன்பாக்ஸ்

•  இந்திப் படங்களில் நடிப்பதற்காக மும்பையில் செட்டிலான ஸ்ருதி ஹாசன், அந்த வீட்டைக் காலி செய்து பேக் டு பெவிலியன். தமிழ், தெலுங்குப் படங்களில் முத்திரை பதித்துவிட்டு, மீண்டும் மும்பை பக்கம் தலை காட்டலாம் என்பது திட்டம். சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது!  

##~##

•  கார்டியன் பத்திரிகை அரசியல், கலை, விளையாட்டு எனப் பல தள சாதனையாளர்களுள் உலகின் டாப் 100 பெண்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் அருந்ததி ராய்,  இந்திரா நூயி, சுற்றுசூழல் ஆர்வலர் வந்தனா சிவா, 'சேஃப் மதர்ஹுட்’ இந்தியத் தலைவர் அபராஜிதா கோகோய், பெண்கள் நலனுக்காகப் போராடும் சம்பத் பால், சத்புதே ஆகியோருக்கு கௌரவமான இடம். சல்யூட் லேடீஸ்!

•  நடிகைகளின் ஸ்காண்டல் வீடியோக்களைப் பின்னுக்குத் தள்ளி ஹிட் அடித்திருக்கிறது லிண்ட்ஸே லோஹனின் லேட்டஸ்ட் வீடியோ. பிரபல நகைக் கடை யில் அம்மணி நைஸாக நெக்லஸை லவட்டும் சி.சி டி.வி காட்சிதான் அது. வீடியோ க்ளிப்பிங்கை நகைக்கடையிடம் இருந்து காசு கொடுத்து வாங்கி காப்பி ரைட்டோடு கல்லா கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். பாவம், லிண்ட்ஸேவுக்கு க்ளெப்டோமேனியாபோல!

இன்பாக்ஸ்

•  உலகக் கோப்பை கிரிக்கெட் பரபரப்பு களுக்கு இடையே, சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை சத்தமே இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. தீபிகா, ஜோஷ்னா, சௌரவ் கோஷல் என ஸ்டார் ப்ளேயர்களுடன் கலந்து கொண்ட இந்திய அணி லீக் சுற்றிலேயே அவுட். பிராக்டீஸ்... பிராக்டீஸ்..!

இன்பாக்ஸ்

•  பாலிவுட் வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பதால் அசின் மேல் செம கடுப்பு கரீனா கபூருக்கு. 'காவலன்’ இந்தி ரீ-மேக்கில் சல்மான் கானுடன் நடிக்கும் கரீனா, 'தமிழில் அசின் நடித்ததைவிட மலையாளத்தில் நயன்தாரா நன்றாக நடித்திருந் தார். அவர் அளவுக்கு அசின் என்னைக் கவரவில்லை!’ என்று பேட்டி தட்டியிருக்கிறார். இந்தி ரீ-மேக் வரட்டும்... த்ரீ ரோஸஸ்ல யாரு சூப்பர்னு பார்த்துருவோம்!  

இன்பாக்ஸ்

• சிம்பு இப்போது மும்பையில் பிஸி. இந்தி ஹீரோயின்களைப் பிடிக்க வேண்டுமென்றால் முதலில் பாலிவுட்டிலும் பெயர் தெரிய வேண்டும் என்கிற மோட்டிவில், 'எவன்டி உன்னைப் பெத்தான்’ பாடலை அப்படியே இந்தியில் வீடியோ ஆல்பமாக வெளியிட இருக்கிறார். அங்கேயும் மகளிர் அமைப்புகள் இருக்கு மன்மதா!

இன்பாக்ஸ்

•  சச்சினுக்கும் சேவாக்குக்கும் பேட்டிங் ஸ்டைலில் பல ஒற்றுமைகள் இருப்பது போல, சச்சின் மனைவி அஞ்சலிக்கும் சேவாக் மனைவி ஆர்த்திக்கும் ஓர் ஒற்றுமை. இருவருமே தத்தமது கணவர் விளையாடுவதை நேரில் பார்ப்பதில்லை. அப்படிப் பார்த்தால், அவர்கள் சீக்கிரம் அவுட் ஆகிவிடுவார்கள் என்பது சென்டிமென்ட்டாம். உலகக் கோப்பை முடிகிற வரை டி.வி-யில்கூட மேட்ச் பார்க்காதீங்க!

இன்பாக்ஸ்

• சீனாவிடம் இருந்து திபெத்தை மீட்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தலாய் லாமா, தடாலடியாக அரசியல் ஓய்வை அறிவித்திருக்கிறார். திபெத் போராட்டத்தின் எதிர்காலம் என்னவாகும்  என்ற கேள்வி ஒருபுறமிருக்க, தலாய் லாமா இந்தியாவுடன் சேர்ந்து நாடகமாடுகிறார் என்று சீறுகிறது சீனா. இவய்ங்க எப்பவுமே இப்படித்தானே!

இன்பாக்ஸ்

•  அயர்லாந்து ப்ளேயர் ட்ரென்ட் ஜான்சனின் சிக்கன் டான்ஸ்தான் கிரிக்கெட் உலகக் கோப்பை ஸ்பெஷல் ஷோ. விக்கெட்டுகளை வீழ்த்தும்போது எல்லாம் இரண்டு கைகளை மடக்கி ஜான்சன் ஆடும் ஆட்டத்துக்குச் 'சிக்கன் டான்ஸ்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள். இந்திய வீரர்கள் உசேன் போல்ட் ஸ்டைலில் கைகளை வானத்தை நோக்கி உயர்த்தி ஓர் அணியாக போஸ் கொடுக்கத் துவங்கி இருக்கிறார்கள். 'உடலை ரிலாக்ஸ் செய்ய இது ஒரு எக்சர்ஸைஸும் கூட!’ என்கிறார்கள். கோப்பை ஜெயிச்சு இந்தியர்கள் மனசை ரிலாக்ஸ் செய்யுங்கப்பா!

இன்பாக்ஸ்

•  'மதராசபட்டினம்’ இயக்குநர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நான்கே மாதங்களில் ஓவர். சமீபமாக ஒவ்வொரு படங்களுக்கும் வருடக் கணக்கில் நடித்துக்கொண்டிருந்த விக்ரம், இந்த எக்ஸ்பிரஸ் வேகத்தில் அகமகிழ்ந்து, விஜய்க்கு சென்னை பார்க் ஷெராட்டனில் ஸ்பெஷல் பார்ட்டி வைத்திருக்கிறார். அனுஷ்கா, அமலா பால் என கிளிகளும் ஆஜராகி, பார்ட்டிக்கு கலர் சேர்த்திருக்கிறார்கள். 'பல்லே பல்லே பார்ட்டி!

இன்பாக்ஸ்

• இந்த வருட ஐ.பி.எல்லின் ஹைலைட் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தீம் பாடல். உலகக் கோப்பை கால்பந்தினை 'வாகா வாகா’ பாடல் மூலம் பிரபலப்படுத்திய பாப் பாடகி ஷகீரா, அந்த அணிக்கான தீம் பாடலைப் பாட இருக்கிறார். ஷகீராவுடன் ஜோடியாக ஆட ஷாருக் கான் ரெடி. 'ஷஷா’ கூட்டணி!  

இன்பாக்ஸ்

•  எகிப்தைச் சேர்ந்த ஜமால் இப்ராஹிம் தனது பெண் குழந்தைக்கு ஃபேஸ்புக் எனப் பெயர் வைத்திருக்கிறார். தன் நாட்டை சர்வாதிகாரப் பிடியில் இருந்து மீட்க உதவிய 'ஃபேஸ் புக்’குக்கான நன்றிக்கடனாம் இது. 'ஃபேஸ்புக்’, 'உள்ளேன் ஐயா..!’ ஹி... ஹி!  

• 'ஹாரி பார்ட்டர்’ புகழ் எம்மா வாட்சன் ஃபேஷன் டிசைனர் அவதாரம் எடுத்திருக்கிறார். பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்காக பசுமை ஆடைகள் என்ற பெயரில் நவீன ஆடை கள் வடிவமைக்க இருக்கிறாராம். கர்ச்சீப் காஸ்ட்யூமுங்கோ!