Published:Updated:

நான் ரொம்ப பிஸி ! : ஜி.வி. பிரகாஷ்

இயக்குனர் விஜய் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரின் அடுத்த படங்களில் இருந்து ஜி.வி.பிரகாஷ்குமாரை நீக்கி விட்டதாகவும் இருவரின் படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.

இச்செய்தி குறித்து ஜி.வி.பிரகாஷ்குமார் தனது டிவிட்டர் இணையத்தில்  " 2 படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். யு.டிவி நிறுவனம் தயாரிக்க விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கும், சிம்புதேவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்திற்கும் இசையமைக்க இருக்கிறேன்.

க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்திற்கும் இசையமைக்க வாய்ப்பு இருக்கிறது. " என்று தெரிவித்துள்ளார்.