என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

விகடன் மேடை - சூர்யா

விகடன் மேடை - சூர்யா

 ##~##
பி.வெற்றிவேல், தக்கோலம்.

''ஜோதிகாவுக்கு முன் யாரையேனும் காதலித்து இருக்கிறீர்களா? சும்மா சொல்லுங்களேன்..!''

''தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப்போறீங்க?''

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

''ஷங்கரின் 'த்ரீ இடியட்ஸ்’ படத்தில் நடிக்க, நீங்க

விகடன் மேடை - சூர்யா

15 கோடி சம்பளமும் தெலுங்கு வியாபார ரைட்ஸும் கேட்டதால்தான், அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக வதந்தி. அந்தப் படத்தில் நடிக்க உங்களுக்கும் விஜய்க்கும் இடையே மியூஸிக்கல் சேர் போட்டி... என்னதான் நடந்தது சூர்யா?''

விகடன் மேடை - சூர்யா

''வதந்தின்னு நீங்களே சொல்லிட்டீங்களே. எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில் கிடையாது. ஒவ்வொருத்தருக்கும் அவங்க தரப்பு பதில்னு ஒண்ணு இருக்கும். தொழில் முறையில் நம்பிக்கையோடு பகிர்ந்துகொண்ட விஷயங்களை, விகடன் கேள்வி - பதிலாக இருந்தாலும் வெளிப்படையாகச் சொல்லக் கூடாது!''

உதயா, கம்பம்.

'' 'நேருக்கு நேர்’, 'ஃப்ரெண்ட்ஸ்’-க்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப் பீர்களா?''

விகடன் மேடை - சூர்யா

 ''நடிக்கக் கூடாதுன்னு எதுவும் இல்லை. அதுக்கான தேவை இருந்தால்!''

ஆர்.மனோகரன், திண்டிவனம்.

''ஒரு திரைப்படம் ஓடும் என்கிற நினைப்பு பொய்க்கும்போது, உங்கள் மன நிலை எப்படி இருக்கும்?''

''ஒரு படம் சரியாப் போகலைன்னா, உறுதியாத் தோணுகிற விஷயம் இது. 'தோல்வி என்னை மட்டும் பாதிக்கலை. படத்துல சம்பந் தப்பட்ட நிறைய பேரைப் பாதிக்குது. காசு கொடுத்து கை தட்ட வர்ற ரசிகர்கள் வரை பாதிப்பு இருக்கு. இன்னும் பொறுப்பா நடந்துக் கணும்னு தோணும்!’

'வெற்றி ஒரு வேலைக்காரன்... தோல்வி ஓர் ஆசிரியன்’னு சொல்வாங்க. கனவுகளுடன் ஒரு யூனிட்டே சேர்ந்து உழைச்ச படம் சரியாப் போகலைன்னா, 'என்ன குறைஞ்சுபோச்சு... ஏன் மக்கள் ஏத்துக்கலை?’ன்னு யோசிப்பேன். காரணத்தைத் தேடிக் கண்டுபிடிச்சாலும், அடுத்த படத்துலதான் சரி பண்ண முடியும்.

ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணிட்டா, அது வெற்றியா இருந்தாலும்... தோல்வியா இருந் தாலும்... நிச்சயம் நல்ல அனுபவமா இருக்கும். ஒரு படம் முடிஞ்சு ரிலீஸ் ஆகும்போது, அடுத்த படத்தில் பாதி தாண்டிப் போயிட்டு இருப்போம். 'சிங்கம்’ ரிலீஸ் ஆகும்போது, ராம்கோபால் வர்மாவோட 'ரத்த சரித்திரம்’ படத்தில் இருந்தேன். அது ரிலீஸ் ஆகும்போது, 'ஏழாம் அறிவு’ படம். அடுத்த வேலைக்குப் போகாம சும்மா இருந்தா, ஒருவேளை மனசைப் பாதிக்கலாம். படம் ரிலீஸ் ஆன முதல் ரெண்டு நாட்கள் சின்னதா ஒரு படபடப்பு இருக்கும். அப்புறம் அதைப்பற்றி யோசிக்க நேரம் இருக்காது!''

கா.கதிரேசன், திருவரங்கம்.

 ''உங்கள் தந்தை நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்தது எது, ஏன்?''

விகடன் மேடை - சூர்யா

'' 'மறுபக்கம்’. அப்பாவை நான் ஆச்சர்யமாப் பார்த்த படம். வெற்றிக்கு டைமிங் ரொம்ப முக்கியம். எம்.ஜி.ஆர், சிவாஜி, என்கிற இமயங்கள் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தபோது, அப்பா ஓர் அறிமுக நடிகர். தன் இருப்பைத் தக்கவெச்சுக்கவே ரொம்ப மெனக்கெடணும். புதிய முயற்சிகள் சுலபமாக் கிடைக்காது. போராடி வாங்கணும். ரிஸ்க் எடுக்கிற காலம் முடியும்போது... ரஜினி, கமல் தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துட்டாங்க.  

ரொம்ப தாகத்தோட இருந்தவருக்குக் கிடைச்சது 'மறுபக்கம்’. சரியான வாய்ப்புகள் அமையாமல்போன கலைஞனை அந்தப் படத்தில் பார்க்கலாம். மத்திய அரசின், 'தங்கத் தாமரை’ விருது வாங்கின படம். 'தேசிய விருதுக்கான சிறந்த நடிகர் சிவகுமார்!’ என்று பத்திரிகைகள் பாராட்டும் அளவு சிறப்பா நடிச்சிருப்பார்!''  

சி.ரவி, காஞ்சிபுரம்.

'' 'ஏழாம் அறிவு’க்குப் பிறகு, உங்கள் சினிமா கமிட்மென்ட்டுகள் என்ன?''

 ''அடுத்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'மாற்றான்’. ரொம்ப வித்தியாசமான கதை. கதையின் நேர்த்திக்காக இயக்குநர் ரொம்ப ஹோம் வொர்க் செய்திருக்கார். 'அயன்’ படத்தின் ஹிட்டுக்கு அந்த ஹோம் வொர்க்தான் காரணம். அதே வெற்றிக் கூட்டணி தொடருது.

அப்புறம் இயக்குநர் ஹரியுடன் ஒரு படம். மிரட்டலான கதை. தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் எப்பவுமே ஏமாற்றம் தராதவர் ஹரி. சாதிச்சுட்டோம்னு யோசிக்காம, 'ஐயோ! அடுத்து என்ன பண்ணப்போறோம்ஜி?’ன்னு சின்ன பயத்தோடு கேட் கிறார். உழைப்பால் ஒரு கதைக்கு மெருகூட்டி அசத்திடுவார். இப்போதைக்கு இந்த இரண்டு படங்கள் மட்டும்தான்!''

ஆதிமூலம், திருநெல்வேலி.

விகடன் மேடை - சூர்யா

''கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்த 'சரவணன்’... இப்போது ஞாபகத்துக்கு வருவாரா?''

 ''கார்மென்ட்ஸ் கம்பெனி சரவணனின் பெயர் மட்டும் மாறி இருக்கு. இப்போ சூர்யா!

கார்மென்ட்ஸ்ல இருந்தபோதும் என்னோட ஒரே பலம், உழைப்பு! ஒரு நாளைக்கு 70 கிலோ மீட்டர் வரை பைக்ல சுத்தியிருக்கேன். 15 மணி நேரம் காட்டுத்தனமா வேலை பார்த் திருக்கேன். சரியான தூக்கம் இல்லாம, பைக் ஓட்டும்போதே தூங்கிக் கீழே விழுந்து இருக்கேன். ஒருத்தர்கிட்ட பேசத் தயங்கி இருக்கேனே தவிர, எந்த வேலையா இருந்தாலும் செய்றதுக்குக் கூச்சப்பட்டதே இல்லை.

'ஏழாம் அறிவு’ சூர்யாகிட்டயும் இதே குணம் இருக்கு. ஒரே ஒரு 'ஸீன்’ மட்டும் ரொம்பப் பலவீனமாத் தோற்றமளிக்கணும். அதுக்காக முகம் வாடிப்போற அளவு வொர்க்-அவுட் பண்ணேன். நான் 'சாப்பிட்ட’ சாப்பாடு பார்த்துட்டு அப்பா திட்டினார். ஒரு ஸீன் என்றாலும், உண்மையா இருக்கணும் என்கிற உறுதி இன்னும் கூடி இருக்கு.

சினிமாவும் சமூகமும் எனக்குக் கொடுத்திருக்கிற இடம் ரொம்பப் பெருசு. அதுக்கு உண்மையா இருக்கிறதுக்கு எவ்வளவு பண்ணாலும் பத்தலை. கடைசியா மிஞ்சுறது நன்றி உணர்வு மட்டும் தான்!''

விகடன் மேடை - சூர்யா