'இந்தியாவின் நைட்டிங்கேல்' எனப் போற்றப்படும் லதா மங்கேஷ்கர் பாரத் ரத்னா, பத்மபூஷன், பத்மவிபூஷன், தாதாசாகேப் பால்கே உட்பட ஏராளமான உயரிய விருதுகளைப் பெற்றவர். 70 வருடங்களுக்கும் மேலான தனது கலையுலக வாழ்க்கையில் 30,000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியவர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல் உறுப்புகள் செயலிழந்ததால் கடந்த ஜனவரி 6-ம் தேதி, தனது 92 வயதில் மறைந்தார். ஒரு சகாப்தத்தின் இசைப் பயணம் முடிந்தது.
நேற்று அவரது 93-வது பிறந்ததினம். இதையொட்டி, அவருக்கு மரியாதை செய்யும் விதமாக உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில், என்ற 40 அடி உயரமும் 14 டன் எடையும் கொண்ட பிரம்மாண்டமான வீணையைப் பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று (28.09.2022) திறந்து வைத்துள்ளார். ‘லதா மங்கேஷ்கர் சவுக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நினைவிடத்தின் திறப்புவிழா நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து அயோத்தியில் உள்ள ராம் கதா பூங்காவில், ஒரு கலாச்சார நிகழ்வும் நடைபெற்றது லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுபடுத்தும் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.