ந.வினோத்குமார்
##~## |
சித்தார்த்த முகர்ஜி! சர்வதேச இந்தியர்களால் உச்சி முகர்ந்து பாராட்டப்படும், புலிட்சர் விருது வென்ற அமெரிக்க வாழ் இந்தியர்! அமெரிக்கா ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் படித்து, ரோட்ஸ் உதவித்தொகையை வென்று, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பாற்றல் தன்மைஇயலில் முனைவர் பட்டம் பெற்றவர். புற்றுநோய் பற்றிய ஃபெல்லோஷிப்பினை வெற்றிகரமாக முடித்தவர், தற்போது கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் மருத்துவர்!

புற்றுநோயாளிகளுடனான தன் அனுபவங்களைக் கோத்து சுயசரிதைச் சாயலுடனும், நோயின் தோற்றம் பற்றிய தேடலுடனும் கூடிய பயணத்தை 'The Emperor of All Maladies: A Biography of Cancer’ என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுத்திருக்கிறார் சித்தார்த்தா. புற்றுநோயின் தோற்றம், அதன் வளர்ச்சி, இன்றைய பரிணாமம், அந்த நோய்க்கான முடிவு எங்கே ஒளிந்துகொண்டு இருக்கிறது எனப் பல விஷயங்களை ஆராய்ந்து, புற்றுநோய் பற்றிய முழு முதல் அறிவியல் தொகுப்பாக இதைக்கொண்டு வந்திருக்கிறார். வயிற்றுப் புற்றுநோயுடன் சிகிச் சைக்கு வந்த ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தபோதுதான் இந்தப் புத்தகத்துக்கான ஐடியா எழுந்ததாம். மற்றுமொரு மருத்துவப் புத்தகம் என்று ஒதுக்கித் தள்ளிவிடாமல், பல ஆயிரம் ஆண்டுகளாக மனித இனத்துடன் போரிடும் ஒரு எதிரி பற்றி பதிவு செய்யப்பட்ட முக்கிய ஆவணமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது.
'எப்போது என் மருத்துவப் பணி, மக்களைப் புற்றுநோயில் இருந்து விடுவிக்கிறதோ, அதுதான் நான் பெறும் உண்மையான விருது!’ என்கிறார் சித்தார்த்த முகர்ஜி புன்சிரிப்புடன்!