வாலிஓவியம் : பாரதிராஜா
##~## |
பகவான்
பாபா...
நிலம் புரள - ஒரு
நீள அங்கி -
அணிந்து நடந்த - ஓர்
ஆன்ம வங்கி;
இந்த வங்கியின்
இருப்பு -
அருள்;
பொருள்;
அவற்றைக்கொண்டு - அது
அகற்றியது -
மன்பதையின்
மருள்; இருள்!

'ஓம்’ என்பது
ஓரெழுத்து; அதன் -
பதவுரைதான் - பகவான்
பாபா எனும் ஈரெழுத்து; அந்த -
ஈரெழுத்து -
நீரெழுத்து அல்ல;
நிலையெழுத்து; அதை ஓதி
நின்றார்க்கு மாறியது தலையெழுத்து!
பாபா - நம்
பவ நோய் தீர்க்க -
விண்ணில் இருந்து - இந்த
மண்ணில் இறங்கிய மருந்து!
ஆம்;
அவர் நமது -
நோயைத் தின்ற மருந்து; அந்த
மருந்தைத் தின்றுவிட்டதே நோய்!
அய்யகோ!
அடாத - இந்த
அக்கிரமத்தை
ஆரிடம் சொல்லி அழுவோம் போய்?
பிறந்தது
பிறவாதது; பிறந்து
இறந்தது
இறவாதது;
பிறப்பும் இறப்பும்
பிரமத்திற் கேது? வாழ்வில் -
அடிபடாத பேர்க்கு - இது
பிடிபடாது!
பாபா -
பலருக்கும் நிழல் பரப்ப...
விரிந்து நின்ற
விருட்சம்; இதன்
வேரடி - அந்த
ஷீரடி!
மகாராஷ்டிரத்தில்
மறைந்தது;
ஆந்திராவில்
அவதரித்தது;
நீரில்லார்க்கு
நீரும் -
சோறில் லார்க்குச்
சோறும் -
உதவி
உபகரித்தது;
அதையா - காலம்
அபகரித்தது?!
புட்டபர்த்தியில் - ஒரு குடைக் கீழ்
புவியைக் கொண்டுவந்து -
கட்டிக் காத்தவர் பாபா; அதைக்
கலைக்கா திருக்க வேண்டும் ரூபா!