Published:Updated:

பீப் சாங்கா... கேட்டு ஆடும் கேங்கா... எது தப்பு? அனிருத்தின் ”ஹோலா அமிகோ”

பீப் சாங்கா... கேட்டு ஆடும் கேங்கா... எது தப்பு?  அனிருத்தின் ”ஹோலா அமிகோ”
பீப் சாங்கா... கேட்டு ஆடும் கேங்கா... எது தப்பு? அனிருத்தின் ”ஹோலா அமிகோ”

பீப் சாங்கா... கேட்டு ஆடும் கேங்கா... எது தப்பு? அனிருத்தின் ”ஹோலா அமிகோ”

பீப் சாங்கா... கேட்டு ஆடும் கேங்கா... எது தப்பு?  அனிருத்தின் ”ஹோலா அமிகோ”

இரண்டு நாட்களாக இளைஞர்களின் எதிர்பார்ப்பு அனிருத்தின் சிங்கிள் ட்ராக் எப்போது என்பது தான். ஹோலா அமிகோ என்னும் இந்தப் பாடல் ரம் படத்திற்காக அனிருத் பாடியுள்ள பாடல். சாய் பரத் இயக்கத்தில் ஹ்ரிஷிகேஷ், நரேன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ஹாரர் படம். இப்படத்துக்கு இசை அனிருத். படத்தின் சிங்கிள் ட்ராக்கான ஹோலா அமிகோ பாடல் நேற்று வெளியாகியுள்ளது. பாடலுக்கு வரிகள் - மதன் கார்க்கி , ஆங்கில வரிகள் - பாலன் காஷ்மிர் . அனிருத்துடன் இணைந்து ராம் வரிகளையும் பாடியுள்ளார் பாலன் காஷ்ஹோலா..

இப்பாடல் மற்றும் படத்தின் புரமோக்கள் நேற்று நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது. மதுவிலக்கு கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இப்படி ரம் என்னும் போஸ்டர் சிட்டியில் எங்கும் ஒட்டப்பட்டுள்ளது என ஒரு பக்கம் விமர்சனங்களும் எழுந்துள்ளன. 

ஆனால் பாடல் வரிகளைக் கேட்டால் அப்படி குறை சொல்லும், அல்லது தவறை சுட்டிக் காட்டும் மக்களுக்காகவே எழுதியுள்ளது போல் இருக்கிறது.

ஆரம்ப இசையாக ஹார்ப் எனப்படும் யாழ் வடிவ சின்ன இசைக்கருவியில் அந்தக் கால கொசுவர்த்தி சுருளோ அல்லது நாடக மேடைகளில் ஒரு சின்ன ஸ்ட்ரிங் இசை கொடுக்கும் நுணுக்கத்துடன் ஆரம்பிக்கிறது.இடையில் ஒரு பெண்ணின் மைனஸ் வாய்ஸ் இணைய அனிருத் குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. 

இதை தற்சமயம் கீபோர்டுகளிலேயே கொண்டு வந்துவிடுகிறார்கள் டெக்னாலஜி டெவெலப் பார்ட்டிகள். இந்த ஹார்ப் எனப்படும் இசைதான் மொத்தப் பாடலையும் கொண்டு செல்கிறது. இளையராஜா ‘ராக்கம்மா கையத் தட்டு பாடலில் பயன்படுத்திய விரல் சொடுக்கும் பாணி தான் இதுவும். சரணம் வருமிடத்தில் மட்டும் இந்த ஹார்ப் கொஞ்சம் அமைதி காக்க பாடல் வரிகள் அறிவுரை கூறும் மக்களை அசால்ட்டாக கேள்வி கேட்கிறது. 

மேலைநாட்டு இசையின் தாக்கம் அதிகரித்துவிட்ட நிலையில் ரேப் வரிகளுக்கும் இந்தப் பாடல் மறுப்பு சொல்லவில்லை.. பாலன் காஷ்மிர் குரல் மற்றும் வரிகளிலும் இடம்பெறுவது பாடலுக்கு இன்னும் எனர்ஜி கலாட்டா. எல்லாவற்றுக்கும் மேல் பீப் பாடலா , இல்லை கேட்டு ஆடும் கேங்கா எது தப்புன்னு சொல்லு என இரண்டாம் சரணத்தில் வருகிறது. கொஞ்ச நாளைக்கு இளசுகளில் ரிங் டோன் ஹோலா அமிகோவாக்கத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

ஹோலா அமிகோ

ஹோலா அமிகோ 

ஹோலா செனொரிடா
அடுத்த தெருவில் கிடக்கும் குப்பைக்கு
மூக்க நீ மூடுறியே
உனக்குள் குவிஞ்சி கிடக்கும் குப்பைய 
மறைச்சி ஓடுறியே
உன்னோட ஆளோட அழக அழகா
இழுத்து மூடுறியே
என்னோட ஆளோட அழக ரசிக்க 
பாக்குற நீயும் ஒழுங்கில்ல
நானும் ஒழுங்கில்ல
ஊரும் ஒழுங்கில்ல
யாரும் ஒழுங்கில்ல
நேரம் எனக்கில்ல
வேலை உனக்கில்ல
அடிச்சி திருத்திட 
நானும் கணக்கில்ல
ஹோலா ஹோலா அமிகோ
ஹோலோ செனோரிடா
ஹோலா ஹோலா அமிகோ
ஹோலா செனோரிடா
காசுக்கு அவன் ஊழல் செஞ்சே திண்ணுவானே
ஆனாலும் நீ ஓட்டு போட்டு யேமாத்துவியே
காசுக்கு அவன் மேட்ச் ஃபிக்ஸ் பண்ணுவானே 
ஆனாலும் நீ டிவி பாத்து கத்துறியே
லஞ்சம் வாங்கும் காப்பா
ஹெல்மெட் இல்லா டாப்பா
நீ சொல்லு 
எது ராங்கு’னு
பீப் சாங்கா
கேட்டு ஆடும் கேங் ஆ
நீ சொல்லு
எது தப்பு’னு

Nanaa….

See i from the bottom boy
Not big not king
Just call me a dreamer
And i rise at the sun boy
Never been fit coz
Then you raise the leader
So who wanna stop me?
Please don’t try me?
I feel nothin’
Only god can judge me
Please ask around
I don’t need the crown
Do tell my enemies
I wont stay down
And i wont stay down
And i cant give up
And if i fall do raise me up
And i wanna live it up
And i wanna raise it up
And i wanna shut it down
Tell them till my people live it up
Till my girls raise it up
Coz i wanna put it down, down..

ஹோலா ஹோலா அமிகோ
ஹோலா செனோரிடா
ஹோலா ஹோலா அமிகோ 
ஹோலா செனோரிடா
அடுத்த கட்டுரைக்கு