Published:Updated:

ரஜினி-ரஞ்சித் கூட்டணியிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? #RajiniRanjith

ரஜினி-ரஞ்சித் கூட்டணியிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? #RajiniRanjith
ரஜினி-ரஞ்சித் கூட்டணியிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? #RajiniRanjith

ரஜினி-ரஞ்சித் கூட்டணியிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? #RajiniRanjith


 

கபாலி டீசரில் தொற்றிக் கொண்ட மகிழ்ச்சியையே இன்னும் பல பேர் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறோம். ரஜினி-ரஞ்சித் கூட்டணி, இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. நடிகர் தனுஷ் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினியும் ரஞ்சித்தும் மீண்டும் இணைய போகிறார்கள். 

இந்த தகவல் வந்தவுடன் சமூக வலைத்தளங்களில் அடுத்தப் படம் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதம் தொடங்கி விட்டது. அந்த வகையில் கபாலியில் நாம் ரசித்த விஷயங்களையும், அடுத்த படத்தில் இதெல்லாம் தவிர்த்தால் நன்றாக இருக்குமே என சொல்ல வைக்கும் விஷயங்களையும் சேர்த்து ஒரு மினி ட்ரைலர்.


- அந்த முதல் காட்சி . போலீஸ் அதிகாரிகள் வந்து சிறையின் அறைகதவுகளை திறக்கிறார்கள். 'மை ஃபாதர் பாலையா' என்ற புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறார் ரஜினி. கதவுகள் திறக்கப்பட்டவுடன் புத்தகத்தை கீழே வைத்து விட்டு பொறுமையாக எழுந்து வந்து புல் அப்ஸ் எடுத்து நடக்க ஆரம்பிக்கிறார். உடைகளை போட்டதும். பெரிய கதவுகள் திறக்கப்படுகின்றன. மங்கலாக ஒரு உருவம் தெரிகிறது. கதவுகள் முழுமையாக திறக்கப்பட்டதும் தெளிவான தோற்றம் தெரிகிறது. அதுவரை அமைதியாய் சிலிர்ப்புடன் அமர்ந்திருந்தவர்களில் எழுந்து நின்று கைதட்டி, விசிலடித்து, "தலைவா" என கத்தி ரசிக்காதவர்கள் நம்மில் ஒரு சிலர் தான் இருந்திருப்போம். அப்படி ஒரு அறிமுக காட்சி அவசியம் இருக்க வேண்டும்.

- வழக்கமாக கேங்ஸ்டர் கதைகள் என்றால் எங்கும் கொலை, ரத்தம், துப்பாக்கி சண்டை என தெரிக்க விடும் கதையில் அழகான காதலை ஊடுருவ பழைய ரஜினி வந்திருந்தார். படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை ரஜினியின் முகத்தில் அவ்வளவு உணர்வுகள் போட்டி போட்டு வெளிப்பட்டன. சிறையில் இருந்து வெளிவந்ததும் தன நண்பர்களை சந்திப்பது, மனைவியை கொன்றவர்களை தேடும் இடம், மாணவர்களிடையே ஆர்வத்துடன் உரையாற்றுவது என ஒவ்வொரு காட்சியிலும் சூப்பர் ஸ்டாரின் நடிப்பு ஈர்த்து கொண்டிருந்தது. நடிப்புக்கான அந்த ஸ்கோப் தொடர வேண்டும்.  

- “நெருப்புடா” முதல் கேட்டலிலே கிறகங்கடித்தது. ”வீர துரந்தரா” கேட்க கேட்க பித்துப் பிடிக்க வைத்தது. படம் வெளியானதும் ஊரெங்கும் ஓடியது ”மாயநதி”. அந்த மேஜிக்கல் இசை நிச்சயம் தொடர வேண்டும்.

- பல காட்சிகள் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாய் இருந்தாலும் சில விஷயங்கள் கொஞ்சம் உறுத்தலாய் தான் இருந்தது.கிளாசிக் வகை சினிமாக்களில் இருக்கும் சிலவற்றை, சாதாரண ரசிகன் அதிகம் ரசிக்கவில்லை என்பது தான் உண்மை. அந்த மாஸ் + கிளாஸ் காம்பினேஷன் அடுத்தப் படத்தில் இன்னும் சரியாக வந்தால் நன்றாக இருக்கும்.

- நாசரும் ரஜினியும் மலேசிய வாழ் தமிழர்களுக்காக போராடும் தலைவர்களாகவே சித்தரிக்கப்பட்டாலும், தங்களை எல்லா இடங்களிலும் கேங்காகவே சொல்லி கொண்டார்கள். ரஜினி அவ்வளவு பேருடைய உரிமைகளுக்காக போராடுகிறார் என்றால் அந்த காட்சிகள் எதுவும் மனதில் பதிந்திடாத அளவுக்கு தான் இருந்தது. அந்த குழப்பங்கள் இல்லாத திரைக்கதை வேண்டும்.  

- அட்டகத்தி, மெட்ராஸ் படங்களில் நடித்த நடிகர்கள் பெரும்பாலானோர் கபாலியிலும் இருந்ததால் பல இடங்களில் கதையோடு ஒன்றுவதே சிரமத்தை கொடுத்தது. தினேஷ், ரித்விகா போல சரியாக பொருந்திப் போனவர்கள் ஓகே. கலையரசன் போன்றவர்கள் படத்தில் ஒட்டவே இல்லை.

- 'கபாலி' ரஜினி ரஞ்சித் கூட்டணியில் மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும். அடுத்த படம் ரஜினி படமாகவோ, ரஞ்சித் படமாகவோ மட்டுமே இருக்க வேண்டும் என சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்திருக்கிறார்கள்.

- க.பாலாஜி

அடுத்த கட்டுரைக்கு