Published:Updated:

இந்த மனுஷன் சினிமாவை காதலிக்கவில்லை.... ஆனால்,.... ?! #HBDAnuragKashyap

இந்த மனுஷன் சினிமாவை காதலிக்கவில்லை.... ஆனால்,.... ?! #HBDAnuragKashyap
இந்த மனுஷன் சினிமாவை காதலிக்கவில்லை.... ஆனால்,.... ?! #HBDAnuragKashyap

இந்த மனுஷன் சினிமாவை காதலிக்கவில்லை.... ஆனால்,.... ?! #HBDAnuragKashyap

சமகால இந்திய சினிமா இயக்குநர்களில்முக்கியமானவர் அனுராக் காஷ்யப்.இன்று 44வது பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு நம் வாழ்த்துகள்.

"சினிமா மீது காதல் என்பதையும் தாண்டி வெறி இருந்ததால், வாரணாசியில் இருந்து மும்பைக்கு சொற்ப பணத்தோடு வீட்டில் சொல்லிவிட்டு வந்தேன். ஏற்கெனவே டெல்லி ஹன்ஸ்ராஜ் கல்லூரி வளாகம் எனக்குள் நாடகம் மீது காதலை விதைத்திருந்தது. அதன் தாக்கத்தில்தான் சினிமா இயக்குநராக மும்பைக்குக் கிளம்பினேன். அங்கு அலைந்து திரிந்து கடற்கரையில், பூங்காக்களில், தண்ணீர்த் தொட்டியின் கீழே தூங்கி என வாழ்க்கையைக் கொண்டாடினேன். உள்மனம் சினிமாவை நோக்கிக் குவிந்திருந்ததால், அந்தக் காலகட்டத்தை மனதுக்குள் ரசிக்கவே செய்தேன். நிறைய மனிதர்களைச் சந்திக்க முடிந்தது. அந்தச் சமயம் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. 'தேவ் டி’ வரை வந்தபோது, மிகவும் தன்னம்பிக்கையோடு சினிமாவை எதிர்கொள்ள முடிந்தது. சினிமா மீது நான் கொண்டிருப்பது காதலையும் தாண்டிய ஒரு வெறி!" இது அனுராக் காஷ்யப் தான் சினிமாவுக்கு வந்த பயணத்தை பற்றி சொன்னது.

- நிஜ சம்பவத்தையோ அல்லது தேவதாஸ் பார்வதி போன்ற கதையை 'தேவ் டி' என மார்டன் வெர்ஷனில் படமாக்குவது எல்லாம் அனுராகிற்கு அசால்ட் மேட்டர். அதுவே தான் நிஜக்கதைக்கும். தன்னை அசத்தும் அந்த ஒன் லைன் தன் வாழ்விலிருந்தாலும் அசத்தலான சினிமாவாக்கி விடுவார். விவாகரத்துப் பெற்று ஒற்றை மகளைப் பிரிந்து வாழும் அவரையே ஒரு வில்லனாக மாற்றிவைத்து யோசித்த கதைதான் 'அக்லி’. அவரின் இயலாமையின் வெளிப்பாடுதான் அந்தக் கதை. அவளுடன் நேரம் செலவிட முடியாத குற்ற உணர்வே 'அக்லி’யாக வெளியே வந்தது என அக்லி தோன்றிய கதை பற்றி கூறியிருந்தார்.

- அதிர்ச்சியை உண்டு பண்ணவோ, பார்வையாளர்களைப் பயமுறுத்தவோ நான் படம் எடுக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் ரசிகனை அது பாதிக்க வேண்டும். இப்போதும் என் சினிமாக்களை வைத்து என்னை ஒரு கட்டத்துக்குள் அடக்க முடியாது" இப்படி சுதந்திரமாக தன் இஷ்டப்படி படம் எடுப்பதுதான்  அனுராக் ஸ்டைல். 

நான் திறமையான ஆட்களை மட்டுமே கூட்டுச் சேர்த்துக்கொள்கிறேன். கூடுமானவரை என் படத்தை குறுக்குவெட்டில் விமர்சிப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். பாராட்டினால் சந்தோஷம்; பாராட்டவில்லை என்றால், இன்னும் சந்தோஷம். அப்போதுதான் என் திசையை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், அதற்காக ரசனையையும் என் கனவு சினிமாவையும் கமர்ஷியல் நோக்கில் குறுக்கிக்கொள்ள மாட்டேன். எதற்காகவும் உண்மைத்தன்மையைக் குறைத்துக்கொண்டு படம் எடுக்க மாட்டேன். அச்சுஅசலான இடங்களில், நினைத்த கோணங்களில், நினைத்த காட்சிகளைப் படம் எடுக்க ஸ்டார்கள் எனக்குத் தேவை இல்லை. நடிகர்கள் போதும். ஏற்கெனவே சொன்னதுதான்... ரசிகர்களை என் சினிமாவை ரசிக்கும்படி மாற்றிவிடுவேன். அதனால், விமர்சகர்கள் எனக்கு மிக முக்கியமானவர்கள்"  இது 'பாம்பே வெல்வட்' படம்  ஒரு வெத்து வேட்டு என விமர்சகர்கள் கிழித்துத் தொங்கிவிட்டுக்கொண்டிருந்த போது அனுராக் சொன்னது.

- "நான் குவன்டின் டரன்டினோ வையோ, மார்டின் ஸ்கார்சிஸியையோ சொல்வேன் என்று நினைத்தால் ஸாரி... அதிகம் பாப்புலராகாத ராபர்ட் ரோட்ரிக்ஸ். அவர் தனது முதல் படத்தில் இருந்தே தன்னை எலியாக்கி பரிசோதித்துப் பார்த்து பல சினிமாக்களை உருவாக்கியவர். ஒரு படத்தை தனி ஆளாக நின்று உருவாக்க வேண்டும் என்ற விஷயத்தை அவரிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்" என தன் ரோல் மாடல் பற்றிய கூறுவார் அனுராக்.

- ஒரு முறை, ஒருவர் 'நீங்கள் பைரசி டிவிடியில் படம் பார்த்ததே இல்லை என்று பொய் சொல்லாதீர்கள் என கடுமையாக விமர்சித்த போது,  ஐயா... இந்த நாட்டிலேயே பெரிய ‘பெர்சனல் ஃப்லிம் லைப்ரரி’ வைத்திருப்பவன் நான்’ என்றிருக்கிறார் அனுராக். அதை பார்த்த Andre Borges எனும் நிருபர் சந்தேகத்தோடு அனுராகை தொடர்பு கொள்ள, அவரை அழைத்து தன் ஃபிலிம் லைபரேரியை காட்டி அதிர்ச்சியில் உறைய வைத்தார் அனுராக். 

- அனுராக் 'நோ ஸ்மோக்கிங்' படத்துக்குப் பிறகு 'ரிட்டர்ன் ஆஃப் ஹனுமன்' என்ற குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

- இன்று நடிப்புக்காக கொண்டாடப்படும் நவாஸுதீன் சித்திக்கை சினிமாவுக்குள் கொண்டுவந்ததில் அனுராக் காஷ்யப்பின் பங்கு அதிகமானது.

- இயக்குநராக மட்டும் அல்ல, முருகதாஸ் இயக்கிய 'அகிரா' படம் மூலம் நல்ல நடிகராகவும் தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அனுராக்.

- பாலிவுட்டே கொண்டாடும் இவர் 2003ல் இயக்கிய பான்ச், 2007ல் இயக்கிய ப்ளாக் ஃப்ரைடே இரண்டு படங்கள் இன்று வரை வெளியாகவில்லை.

-பா.ஜான்சன்

அடுத்த கட்டுரைக்கு