Published:Updated:

'ஆடியன்ஸை சுவத்துல முட்டிக்க வைக்கணும்..!' - ஆதித்யா காமெடியன்ஸ் கலகல!

விகடன் விமர்சனக்குழு
'ஆடியன்ஸை சுவத்துல முட்டிக்க வைக்கணும்..!' - ஆதித்யா காமெடியன்ஸ் கலகல!
'ஆடியன்ஸை சுவத்துல முட்டிக்க வைக்கணும்..!' - ஆதித்யா காமெடியன்ஸ் கலகல!

'ஆடியன்ஸை சுவத்துல முட்டிக்க வைக்கணும்..!' - ஆதித்யா காமெடியன்ஸ் கலகல!

ஆதித்யா சேனலில் அட்ராசிட்டி பண்ணும் இந்த ஆல்டைம் ஃபேவரைட் வி.ஜேக்களின் சந்திப்பு.

'அட்டடேய்' கோபி :

''என் பேரு கோபி. கோபியையே 'குட்டி கோபி'னு ஸ்டைலா வெச்சுக்கிட்டேன். இப்போ யாரும் என்னைக் கோபினும் கூப்பிடுறது இல்லை. குட்டி கோபினும் கூப்புடுறது இல்லை. இங்கே நல்ல ஜோக் சொன்னாலே யாரும் சிரிக்க மாட்டாங்க, அதுவும் மொக்கை ஜோக் சொல்லி நாங்க சிரிப்போமாங்கிற ரேஞ்சுலதான் பார்ப்பாங்க. மொக்கை ஜோக்கைப் பொறுத்தவரைக்கும் சிரிக்கணும்னு அவசியம் இல்லை... ஆடியன்ஸைப் பக்கத்துல இருக்கிற சுவத்துல முட்டிக்க வைக்கணும், நற நறனு பல்லைக் கடிக்க வைக்கணும். அதாங்க சக்ஸஸ்! 'வா மச்சான் படத்துக்குப் போலாம்'னு ஃப்ரெண்ட்ஸைக் கூப்பிடுவேன். 'முடிஞ்சா வர்றேன்'னு சொல்வாங்க. 'முடிஞ்சப்பறம் எதுக்கு வர்றீங்க?'னு மொக்கையைப் போட்டு எஸ்கேப் ஆயிடுவேன். இப்படி எல்லையே இல்லாமப் போயிட்டு இருக்கும். 

படிப்புக்கும் நமக்கும் தூரம் அதிகம். சி.ஏ படிச்சா மாசம் ஒன்றை லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம்னு நினைப்புலதான், குருநானக் காலேஜ்ல சி.ஏ படிச்சேன். முதல் வருடமே என்னைத் தூக்கி கல்ச்சுரல்ஸ் கேங்க்ல போட்டாங்க. புரொஃபஸர்ஸும் எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. என்னோட பார்ட்னர் லோகேஷ், எனக்கு ஜூனியர். ஒருத்தருக்கு ஒருத்தர் ஃபெர்பார்மன்ஸ் பண்ணும்போது எப்படி இருந்துச்சு, எப்படிப் பண்ணியிருக்கலாம்னு மாத்தி மாத்தி சொல்லிப்போம். முதல் முதல்ல நானும் லோகேஷும் ஐ.ஐ.டி-யிலதான் சேர்ந்து ஷோ பண்ணினோம். நல்ல ரீச் கிடைச்சது. அப்பவே 'ஜோடியா பண்ணலாம்'னு பிளான் பண்ணோம். இடையில ஒரு கம்பெனியில சூப்பர்வைசரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒருநாள் லோகேஷும், சத்துவும் எனக்கு போன் பண்ணி, 'ஆதித்யா சேனல்ல ஒரு சீன் பண்ணக் கூப்பிடுறாங்க. என்னால போக முடியலை. நீ போக முடியுமா'னு கேட்டாங்க. 'சொல்லுங்க பாஷா பாய்... உங்களுக்கு மட்டும் எப்டி இவ்ளோ பானிபூரி?'னு அந்த நிகழ்ச்சியில நான் பேசுன டயலாக் எல்லோருக்கும் பிடிச்சுருந்தது. பிறகு, என்னை வேலைக்கும் போகவிடலை. ஊருக்கும் போகவிடலை. பேஸிக்கலி, எங்க அப்பா தெருக்கூத்து கலைஞர். முன்னாடி அவரோட சரியா பேசிக்க மாட்டேன். இப்போ, நானும் நடிப்புத் துறைக்கு வந்துட்டேன். நிச்சயம் அப்பாவுக்கு சந்தோஷமா இருக்கும்னு நினைக்கிறேன்!'' 

''மறக்க முடியாத சம்பவம்?"

''எங்க ஊர்ல பெரும்பாலும் பணக்கார ஆட்களாதான் இருப்பாங்க. கோயில் திருவிழாவில ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவாங்க. அந்த ஸ்டேஜ்ல எனக்கு ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணச் சொல்லி சான்ஸ் கேட்டேன். யாருமே  எனக்கு மைக் கொடுக்கலை. என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எவ்வளோ சொன்னாங்க. அனுமதி கிடைக்கலை. சமீபத்துல எங்க ஊர்ல நடந்த திருவிழாவுல எங்கிட்ட கேட்காமலேயே என் பெயரைப் போட்டு பத்திரிகை அடிச்சு, தாம்பூலத்துல வெச்சுக் கொடுத்தாங்க. நம்மை மதிக்காத ஒரு ஊர்ல நம் திறமைக்கு அங்கீகாரம் கொடுத்து என் அம்மாவைப் பெருமைப்படுத்தினேன். இந்த ஒண்ணு போதும், வாழ்க்கையில வேற எதுவும் வேணாம்னு தோணுச்சு." 

''அடுத்து?"

" 'கல்லூரி' படத்துல 'நீங்க சொல்றது?' வசனத்துல நடிச்ச வினோத், மைம் கோபி அண்ணா இவங்கதான் என் குரு. எனக்கு இப்போ சினிமா வாய்ப்புகள் வந்துக்கிட்டு இருக்கு. நானும் லோகேஷும் சேர்ந்து, கவுண்டணி - செந்திலை ரீ-க்ரியேட் பண்ணணும்னு ஆசை!'' என்று முடித்தார்.

அகல்யா :

ஆதித்யா சேனலில் 'மாமா எங்கே இருக்கீங்க' நிகழ்ச்சியில் 'டவுட்டு' செந்திலோடு அதகளப்படுத்தும் சென்னைப் பொண்ணு.

''விஸ்காம் பண்றப்போ, இமயம் டி-வி-யில இருந்து ஒரு ஷோவுக்காக எங்க காலேஜ் வந்தாங்க. வந்தவங்க, 'சேனல்ல காம்பியரிங் பண்றீங்களா?'னு கேட்டப்போ, 'சரிவருமா?'னு ஒரு டவுட் இருந்துச்சு. ஃப்ரெண்ட்ஸ்தான், 'நீதான் லொட லொடனு எதையாவது பேசிக்கிட்டு இருப்பியே... நிச்சயம் செட் ஆகும்'னு அனுப்பி வெச்சாங்க. புதுயுகம், ராஜ் டி.வினு சுத்தி, சில சீரியல்களில் நடிச்சு, இப்போ ஆதித்யா டி.வி-யில ஐக்கியம் ஆகியிருக்கேன்.'' என லொட லொடவெனக் கொட்டும் அகல்யாவின் அப்பா ஓர் அரசியல்வாதி.

''அப்பா அரசியலில் பிஸி. அம்மா வேலைக்குப் போறாங்க. ஒரே தங்கச்சி. குட்டி ஃபேமிலி... கலாட்டா... ஜாலியான வாழ்க்கை. 'மாமா எங்க இருக்கீங்க?' ஷோ பார்த்துட்டு, 'பாவம்பா உனக்கு வரப்போற பையன்'னு ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க. 'கவலைப்படாதீங்க உள்ளங்கையில வெச்சுத் தாங்குவேன்'னு சத்தியம் பண்ணிச் சொல்லி வெச்சிருக்கேன்.

''மறக்க முடியாத சம்பவம்?”

''வர்தா புயல் சமயத்துல நான் கன்னியாகுமரியில இருந்தேன். ட்ரெயின் எல்லாம் அஞ்சுமணி நேரத்துக்கும் மேல நிப்பாட்டிட்டாங்க. எனக்கு எதுவும் பிரச்னை இல்லைதான். ஆனால், அந்த நாளை நினைச்சா, இப்பவும் உதறலா இருக்கு.'' 

''அடுத்து?”

''டி.வி ஷோ தவிர மியூஸிக் ரொம்பப் பிடிக்கும். போரடிச்சாலோ கொஞ்சம் டல் ஆனாலோ ஹெட்போனை மாட்டிக்கிட்டு உட்கார்ந்துருவேன். பொழுது போகலைனா இருக்கவே இருக்கு என் செல்ல நாய்கள் டாமியும், ஒயிட்டும். ஸோ, அகல்யா ஹேப்பி அண்ணாச்சிதான். சினிமா வாய்ப்புகள் வந்துக்கிட்டு இருக்கு. நான் 'தல' அஜித்தோட வெறி பிடிச்ச ரசிகை. அவருக்குத் தங்கச்சியா ஒரு சீன்ல நடிச்சாகூட போதும்னு இருக்கேன். என் கனவு, எதிர்காலத் திட்டம் எல்லாமே இது மட்டும்தான்!''

வினோத் : 

''இன்ஜினீயரிங் முடிச்சுட்டு மதுரையில எம்.பி.ஏ முடிச்சேன். சேல்ஸ் இன்ஜினீயரிங்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஆதித்யா சேனல் ஆடிஷன் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அதுக்கு முன்னாடியே மைம், டான்ஸ்னு கத்து வெச்சுக்கிட்டு இருந்ததால, ஈஸியா செலக்ட் ஆகிடலாம்னு அப்ளை பண்ணேன். ஆனா, அங்க நடந்ததே வேற. அஞ்சு மாச ப்ராஸஸுக்குப் பிறகுதான், வி.ஜே சான்ஸ் கிடைச்சது. முதல் ஷோவுல 'காமெடிக்கு நான் கியாரன்டி' தலைப்புல நிகழ்ச்சி பண்ணேன். பிறகு 'கோலிவுட் சம்பிரதாயம்' நிகழ்ச்சி. இதுதான் எனக்கு தனி அடையாளம் கொடுத்தது.''

''மறக்க முடியாத சம்பவம்?”

''ஒரேநாள் நைட்டுல 40,000 ரூபாய் சம்பளத்தைவிட்டு மீடியாவுக்குள்ள நுழைஞ்ச அந்த ராத்திரிதான், இன்னமும் எனக்கு 'எதையாவது சாதிக்கணும்'னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும். நான் இன்ஜினீயர் வேலையை விட்ட விஷயம் எங்க வீட்டுக்குத் தெரியாது. ஆறுமாசம் என் நண்பர்கள்தான் என்னைப் பார்த்துக்கிட்டாங்க. ஒருநாள் 75 ரூபாய் இல்லாம திண்டாடிக்கிட்டு இருந்து பொழுதுகள் எல்லாம் மறக்கவே மறக்காது. ஜாலியான அனுபவம் ஒண்ணு இருக்கு. டி.வி-யில லைவ் ஷோ பண்றப்போ மேக்கப் பண்ணி வெள்ளையா இருப்பேன். நிறைய பேர் லைவ் ஷோவுலேயே புரபோஸ் பண்ணியிருக்காங்க. ஆனா, நேர்ல பார்த்தா பின் வாங்கிடுறாங்க. இப்படி நிறைய பல்பு வாங்கியிருக்க்கேன்.''

"அடுத்து?"

''சின்ன வயசுல இருந்தே சினிமா ஆசை அதிகம். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தேன். இப்போ ஒரு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். எனக்கு சத்யராஜ், நாசர் சார் பண்ண மாதிரி கேரக்டர் ரோல் பண்ணனும்னு ஆசை!'' 

- ந.புஹாரி ராஜா

அடுத்த கட்டுரைக்கு