Published:Updated:

இந்தியன் தாத்தா, ராகுல் தாத்தா, அஸ்வின் தாத்தா - இது தமிழ் சினிமா தாத்தாக்கள் ஸ்பெஷல்

தார்மிக் லீ
இந்தியன் தாத்தா, ராகுல் தாத்தா, அஸ்வின் தாத்தா - இது தமிழ் சினிமா தாத்தாக்கள் ஸ்பெஷல்
இந்தியன் தாத்தா, ராகுல் தாத்தா, அஸ்வின் தாத்தா - இது தமிழ் சினிமா தாத்தாக்கள் ஸ்பெஷல்

இந்தியன் தாத்தா, ராகுல் தாத்தா, அஸ்வின் தாத்தா - இது தமிழ் சினிமா தாத்தாக்கள் ஸ்பெஷல்

தாத்தான்னா ஒரு ஓட்ட சேர்ல உட்கார்துக்கிட்டு... ஒருபக்கம் வெத்தலை பெட்டி. இன்னொரு பக்கம் மாத்திரை பை வெச்சுகிட்டு... லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டு இருப்பாங்களே... அந்த மாதிரி தாத்தான்னு நெனச்சீங்களாடா? தாத்தாடாஆஆ! என்னங்க பார்க்குறீங்க... இப்பல்லாம் தாத்தாவைத்தான் அதிக கெத்தா காட்டுறாங்க படத்துல. அதுல கலக்கிய, கலக்கப்போற தாத்தாவைப் பற்றிப் பார்ப்போம் வாங்க! 

இந்தியன் தாத்தா :

இவர் கொஞ்சம் சீரியஸ் தாத்தா. ஏதாவது தப்புதண்டா பண்ணா இடுப்புல இருக்கிற கத்தியை எடுத்துக் குத்திக் கிண்டிருவார். அது பத்தாதுன்னு வர்மக்கலையெல்லாம் கத்து வெச்சுருக்கார். படத்திலேயும் இதே மாதிரிதான் போலீஸ்ல ஆரம்பிச்சு அவரோட சொந்த மகன் வரைக்கும் தப்பு பண்றான்னு போட்டுத் தள்ளிருவார். இந்தத் தாத்தா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தாத்தா. படம் வந்த புதுசுல எல்லோருக்கும் பிடிச்ச தாத்தாவும் இவர்தான். அதுக்காக இவரும் மேக்அப், நடிப்புன்னு நிறையவே மெனக்கெட்டுருக்கார். தாத்தா கேரக்டர்களுக்கு பிள்ளையார் சுழி போட்டதே இந்தத் தாத்தாதான்.  

ராகுல் தாத்தா :

இவர் செம ஜாலியான தாத்தா. இவர் ஸ்க்ரீனில் வந்தால் ரசிகர்களின் முழு கவனமும் இவர் மேல்தான் இருக்கும். நயன்தாரா இருந்தாலும்கூட. அந்த அளவிற்கு அவரது பாடி லாங்வேஜ், டயலாக் என அனைத்திலும் ரசிகர்களை ஈர்ப்பார். 'ராகுல் ஏரியாவில் வந்து பிரச்னை பண்ணா சும்மா விடுவானா இந்த ராகுல்?' என்று இவர் சொல்ல... 'யாருடா அந்த ராகுல்?' என்று வில்லன் கும்பல் கேட்க 'நான்தான்டா ராகுல்'னு கெத்தா சொல்லுவார்.  இவரின் ஸ்பெஷல் டயலாக்குகளில் இதுவும் ஒன்று. பல படங்களில் நடித்திருந்தாலும் 'நானும் ரௌடிதான்' படத்திற்குப் பிறகு இவர் ரொம்ப ஃபேமஸ். 

அஷ்வின் தாத்தா :

கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெளியான 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் ட்ரெய்லரில் வெளியான பிறகு இந்த தாத்தா மிகவும் ஃபேமஸ் ஆகிவிட்டார். அதில் பொண்ணுங்களுக்கெல்லாம் பிடித்தமான தாத்தாவாக இருப்பார் என்பது அதில் இடம்பெற்ற காட்சிகளில் தெரிய வந்ததது. சிம்பு சாதாரணமாக வந்தாலே ரசிகைளுக்கு ரொம்பப் பிடிக்கும். இப்போ தாத்தா கெட்அப்பில் வந்து கவர் பண்ண நினைக்கிறார். படம் வந்தால்தான் தெரியும் இவரும் ஃபேவரைட் தாத்தாக்கள் லிஸ்டில் வருவாரா? இல்லையா? என்று. அதில் இவர் பேசும் பன்ச் டயலாக்குகளும் சோஷியல் மீடியாவில் டெம்ப்லேட் ஆகி வருகிறது.

பவர் பாண்டி தாத்தா :

இவருக்கு தாத்தா என்று சொன்னால் கோபம் வரும். தனுஷ் இயக்கும் 'பவர் பாண்டி' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் ராஜ்கிரணின் 'உட்லேன்ட்ஸ் ஷூ', 'லோ ஹிப் பேன்ட்', 'ராயல் என்ஃபீல்ட்' புல்லட் என எல்லாமே யூத்தைக் குறிக்கும் செயலாகவே இருந்ததையடுத்து ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்று வருகிறது. ஏற்கெனவே 'மஞ்சப் பை' என்னும் படம் மூலம் தாத்தா கெட்டப்பில் வந்த 'ராஜ்கிரண்' மக்களின் மனதில் இடம் பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ளது. வில் வெயிட் அண்ட் வாட்ச்!

- தார்மிக் லீ

அடுத்த கட்டுரைக்கு