Published:Updated:

எல்லா விஜய் பட டீசர்களிலுமே இந்த தப்பு நடக்குது..! #TeaserSpoiler

தார்மிக் லீ
எல்லா விஜய் பட டீசர்களிலுமே இந்த தப்பு நடக்குது..! #TeaserSpoiler
எல்லா விஜய் பட டீசர்களிலுமே இந்த தப்பு நடக்குது..! #TeaserSpoiler

ப்போ வெளிவரும் படங்களின் எதிர்பார்ப்புகள் தாறுமாறாக உயர்ந்திருக்கின்றன. குறிப்பாக விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. அவரது ரசிகர்களின் அலறல் முதல் அவரைப் பிடிக்காதவர்கள் கதறல் வரை சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். ஒரு படத்திற்கு ப்ரொமோஷன் அவசியம்தான். அதே சமயம் படத்தின் ப்ரொமோஷனே, முக்கியமாக டீசரே ஸ்பாயிலராகவும் அமைந்துவிடும். அப்படி ஸ்பாயிலராக அமைந்த விஜய் பட டீசர்களின் எஸ்.டி.டி இதோ! 

தெறி :

ஜோசப் குருவிலாவிற்கும் விஜய் குமார்க்கும் இடைப்பட்ட கதைதான் தெறி. படத்தின் இன்டெர்வல் ப்ளாக் வரை ஜோசப் குருவிலா அவரது மகள் நிவியை வளர்க்கும் பகுதி மட்டுமே இடம்பெற்றிருக்கும்.

அப்படி அந்தப் பகுதியிலேயே சில சீன்களை கட் செய்து டீசரில் இடம்பெறும்படி செய்திருந்தால்... அதாவது விஜய் குமார் பகுதியைத் துளியளவும் வெளிவிடாமல் இருந்திருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும். நார்மல் கமர்ஷியல் என்று திரையரங்கத்தில் காண வரும் ரசிகர்களுக்கு படமும் தெறியாகவே அமைந்திருக்கும். எல்லாத்தையும் டீஸர்லேயே சொல்லிட்டா எப்படித் தெறிக்கும்..?

பைரவா :

இந்தப் படத்தின் டீசரின் நீளம் ஒரு நிமிடம். அது வெளியான கொஞ்ச நேரத்திலேயே மிகுந்த வரவேற்பையும் பெற்றது. என்னதான் கமர்ஷியல் படமாக இருந்தாலும் அடுத்து என்ன சீன் இதுதான் வரப்போகிறது என்று முன்பே தெரிந்துவிட்டால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்து போய்விடும். அப்படி டொக்காகிப் போன வரிசையில் இந்தப் படமும் ஒன்று. விஜய் வந்துபோகும் ஸ்க்ரீன் ப்ரெஸன்ஸ் என்ற ஒரு விஷயத்திற்கு மட்டுமே திரையரங்கம் அதிர்ந்தது. மற்றபடி ஒவ்வொரு சீனும் நகர நகர அடுத்து இந்த பன்ச் டயலாக்குடன் இந்த சீன்தான் இடம்பெறும் என்று மிகச் சுலபமாகக் கணித்துவிடலாம். 

ஜில்லா :

தந்தை செய்யும் தவறுகளுக்குத் துணை போகும் மகன் விஜய் ஒரு கட்டத்தில் செய்தது தவறு என்று தெரிந்தப் பின்னர் தன் தந்தைக்கு எதிராக மாறிவிடுவார். விஜய்யின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன், ஆக்‌ஷன் சீன்கள் எனப் படம் முழுவதுமே சுவாரஸ்யமாக நகரும் நேரத்தில்தான் அந்தக் காட்சி வரும். தன் சொந்த மகனையே கொல்ல முடிவு செய்த மோகன்லால் விஜய்யை க்ளைமாக்ஸில் சந்திக்கிறார். சரி... இருவரும் மோதும் சண்டைக் காட்சிதான் இடம்பெறப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்க, மறுபக்கம் டீசரில் இடம்பெற்ற அதே லோக்கேஷன், காஸ்ட்யூம் வந்ததையடுத்து 'ரைட்டு... ரெண்டு பேரும் சேர்ந்துவிடுவார்கள்' என்ற மிகச் சுலபமாக கணிக்க முடியும். இத்தனைக்கும் டீசரின் நீளம் பதினோறே செகண்ட்தான். அம்புட்டு ஈஸியாவா சொல்லுவாய்ங்க..?

'இவன் கண்டிப்பா அஜித் ரசிகனாகத்தான் இருப்பான்...' இதானே பாஸ் உங்க மைண்ட் வாய்ஸ்? அதே விஜய் நடித்த படங்களில் 'அடடே...' போட வைத்த டீசர்களையும் பார்ப்போம் வாங்க!

கத்தி :

இந்தப் பட டீசர் வெளியான கொஞ்ச நேரத்தில் புகழ்ந்ததைவிட ஓட்டியதுதான் அதிகம். விஜய் பைப்புக்கு உள்ளே உட்கார்ந்த காட்சியை வைத்து மீம்ஸ் அனல் பறந்தன. ஆனால் அவை அத்தனையையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் படத்தின் கதையும், காட்சிகளும் அமைந்திருந்தன. காரணம் டீசரில் ஒரு சீன் கூட ஸ்பாயிலராக அமையவில்லை. படத்தின் கதையும் இதுதான் என்றும் கணிக்கவும் முடியவில்லை. 

துப்பாக்கி :

அதே விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மற்றொரு படைப்புதான் துப்பாக்கி. இந்தப் படத்தின் டீசர் வெளியானதையடுத்து இதுதான் கதையாக இருக்கும் என்று கணிக்கவும் முடியவில்லை. இருப்பினும் படத்தின் மாஸ் சீன்களுள் சில டீசரிலும் இடம்பெற்றிருந்தாலும் படத்தைப் பார்க்கும்போது ஒவ்வொரு சீனும் வாவ் போட வைத்தது. டீசர் முழுவதும் பன்ச் டயலாக் இல்லாமல் இந்த டீசரைப் போல் முடிவில் ஒரு பன்ச் இடம்பெற்றால் டீசர் மட்டுமல்ல படமும் சிறப்பு... மிகச் சிறப்பு.

தலைவா :

வெளிவருவதற்கு முன்பே பல பிரச்னைகளைச் சந்தித்த இந்தப் படத்தின் டீசர் மூன்று விதமாக இறங்கியது. மூன்று டீசரும் மூன்று ரகமாக இருந்ததும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. முதல் டீஸர் முழுதும் கமர்ஷியல் ரகம், அடுத்த இரண்டு டீசர்களும் ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லராகவும் இருந்தது. இந்த டீசரில் ஸ்பாயிலர் என்று குறிப்பிடும்படி எந்தக் காட்சியும் இடம்பெறவில்லை. 

ஆக, படத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் அதை நிர்ணயிக்கும் டீசருக்கும் இருக்கிறது. அந்த டீசரானது ஸ்பாயிலராக அமையாமல் எதிர்பார்ப்பை எகிற வைத்தால் மகிழ்ச்சி! இனிமேலாவது பார்த்துப் பண்ணுங்க பாஸ்..!