Published:Updated:

பேய்ப்படம்னா கோவை சரளா, கருத்து படம்னா சமுத்திரக்கனி... மோஸ்ட் வான்டட் நடிகர்கள் பட்டியல்!

பேய்ப்படம்னா கோவை சரளா, கருத்து படம்னா சமுத்திரக்கனி... மோஸ்ட் வான்டட் நடிகர்கள் பட்டியல்!
பேய்ப்படம்னா கோவை சரளா, கருத்து படம்னா சமுத்திரக்கனி... மோஸ்ட் வான்டட் நடிகர்கள் பட்டியல்!

பேய்ப்படம்னா கோவை சரளா, கருத்து படம்னா சமுத்திரக்கனி... மோஸ்ட் வான்டட் நடிகர்கள் பட்டியல்!

‘மசாலா படமா? - இந்தா இதுதான் பார்முலா', 'பேய்ப் படமா? - இதுதான் கதை', 'அட போலீஸ் பத்தின படம்னாலே இதெல்லாம்தான் இருக்கும்' என டீசர் பார்த்தே கதை சொல்லிவிடுமளவுக்கு க்ளிஷேக்கள் சூழ் கோலிவுட் ஆகிவிட்டது. காட்சிகள் கூட ஓ.கே. ஆனால் இப்போது நடிகர்கள் கூட க்ளிஷேயாகிவிட்டார்கள். 'இந்த ஜானர் படமா? அப்ப இந்த ஆர்டிஸ்ட் இல்லாம பூஜை கூட போடக்கூடாது' என முடிவு பண்ணிக் களமிறங்குகிறார்கள். அப்படி திரும்பத் திரும்ப வரும் 'மோஸ்ட் வான்டட்' ஆர்டிஸ்ட்கள் சிலர்:

கோவை சரளா:

வாரத்துக்கு இரண்டு பேய்ப்படங்கள் கண்டிப்பாக ரிலீஸ் ஆகவேண்டும் என்பது வருங்கால முதல்வர் விஷாலின் உத்தரவோ என்னவோ? அப்படி ரிலீஸாகும் படங்களில் எல்லாம் பேய் இருக்கிறதோ இல்லையோ, கோவை சரளா இருக்கிறார். பயந்து நடிங்கி வாயிலேயே ட்ரம்ஸ் மிருதங்கம் வாசிக்கும் அப்பாவியாக, 'பேயை ஓட்டணும்னா இந்த சேட்டையெல்லாம் பண்ணணும்' என வித்தைகளை இறக்கும் சாமியாராக என ப்ரேமுக்கு ப்ரேம் இவர் ராஜ்ஜியம்தான். எல்லாம் சரிதானுங்க. ஆனா, மகன் வயசுல இருக்குற சூரி கூட ரொமான்ஸ் பண்ணுற மாதிரி காமிக்கிறதைத்தான்... 

மொட்டை ராஜேந்திரன்:

நரம்பு தெறிக்கும் உடம்பு, சிக்ஸ் பேக் படிக்கட்டு என மெர்சல் வில்லனாக அறிமுகமானவர் இப்போது ஒரு படம் விடாமல் காமெடி செய்துகொண்டிருக்கிறார். ஒருகாலத்தில் மிரட்டிய குரலே இப்போது காமெடி கன்டென்ட் ஆகிவிட்டது. அதுவும் அடல்ட்ஸ் ஒன்லி படங்கள்... அதான் ஜி.வி பிரகாஷ் படங்களில் எல்லாம் தவறாமல் தலையை தடவியபடி வந்துவிடுகிறார். ஹீரோவுக்கு சமமா ஆடியன்ஸ் ஆரவாரம் செய்றது எல்லாம் சரிதான். அதுக்காக எல்லாப் படத்துலயுமா?

தம்பி ராமையா:

'படம் முழுக்க ட்ராவல் ஆகவேண்டும், நடுநடுவே கருத்து, ஆங்காங்கே காமெடித் தூவல் - இப்படி ஒரு கேரக்டரா? கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் அதில் நடிக்கப் போவது தம்பி ராமையா என. முதல் பாதி முழுக்க காமெடி செய்து கலக்குவது, பிற்பாதியில் கண் கலங்க வைப்பது, க்ளைமாக்ஸில் முடிந்தால் உயிர்த்தியாகம் செய்வது என வாழ்வாங்கு வாழும் கேரக்டரில் அடுத்தடுத்து நடிக்கிறார். ஆனா சாரே! சமயங்கள்ல காமெடி எல்லாம் நீங்க டைரக்ட் பண்ண படம் மாதிரியே இருக்கு! பார்த்துப் பண்ணுங்க!

சமுத்திரக்கனி:

அறிமுகமானது முரட்டு வில்லனாகத்தான். அப்புறம் ஹீரோவானார்.  டிபிக்கல் ஹீரோவாக இல்லாமல் சமூக பிரச்னைகளைப் பேசும் ஹீரோ. அதனாலேயே, கருத்து சொல்ற வெயிட்டான ரோலா? பிடி இவரை' என கோலிவுட் கனவுலகவாசிகள் துரத்துகிறார்கள். 'சாட்டை', 'நிமிர்ந்து நில்', 'அம்மா கணக்கு', 'தொண்டன்' என நடிப்பதாக இருந்தாலும் இயக்குவதாக இருந்தாலும் சரி, வெயிட்டு கருத்துகள் கியாரன்டி!

ராதாரவி:

ராதாரவி யூத்தாக இருந்த காலத்திலிருந்தே... வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை பெரிய மனுஷர் கேரக்டர்களில் எக்கச்சக்கமாக  நடித்திருக்கிறார். இப்போது கேட்கவா வேண்டும்? 'சிங்கம்', 'சூது கவ்வும்', 'அரண்மனை 2' என நிறைய்ய்ய படங்கள். இப்போது லேட்டஸ்ட்டாக பெரிய இடத்து பேயாக 'சங்கிலி புங்கிலி கதவைத் தொற' படத்தில் ப்ரொமோஷன் வாங்கியிருக்கிறார். முன்னாடி பயங்கர வில்லனா இருந்தார். இப்போ பேயா பயங்கரமா இருக்கார். அவ்ளோதான் வித்தியாசம்!

கணேஷ் வெங்கட்ராமன்:

ஆறடி உயரம், ஜிம் உடம்பு, பளீர் நிறம் என பஞ்சாபில் இருந்து இறக்குமதியான சிங் பையன் போலவே இருப்பார். இந்த லுக் காரணமாகவே தமிழ் சினிமாவின் அனேக போலீஸ் ஸ்டோரிகளில் தலை காட்டிவிடுகிறார். தொடங்கியது கமலின் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில். அதன்பின் 'இவன் வேற மாதிரி' படத்தில் ஐ.பி.எஸ், தனி ஒருவனில் ஐந்து பேர் குழுவில் ஒருவர், தொடரியில் போலீஸ் என வரிசை கட்டி நடிக்கிறார். கன்னக்குழி விழுகுற போலீஸ் தமிழ் சினிமாவுக்கே புதுசுதான்!

அடுத்த கட்டுரைக்கு