Published:Updated:

'வடசென்னை' ரகசியம் சொல்லும் வெற்றி மாறன்!

'வடசென்னை' ரகசியம் சொல்லும் வெற்றி மாறன்!
'வடசென்னை' ரகசியம் சொல்லும் வெற்றி மாறன்!

'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் 'வடசென்னை'. இந்தப் படத்தில்  தனுஷ் ஜோடியாக  ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.  மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது 'வட சென்னை' படத்தின் ஷூட்டிங். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் தனுஷ் கைதியாக நடித்த சீன்களை படமாக்கினார்களாம். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதில் கில்லாடியான வெற்றிமாறன், இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார்.


இந்தப் படத்தைப் பற்றி ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே சந்தேகம், படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா... இல்லையா... என்பதுதான். விஜய் சேதுபதிக்குப் பதிலாக அமீர் நடிப்பதாக தகவல் வந்ததே, அது உண்மையா என வெற்றிமாறனை தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு, "இந்தப் படத்தில் அமீர் நடிப்பது உண்மைதான். அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு ஆரம்பித்துவிட்டது. ஆனால், யாருக்குப் பதிலாக யாரும் நடிக்கவில்லை" என்றார்.

அவர் கூறிய பதிலிலிருந்து, வடசென்னை படத்தில் அமீர் நடிப்பதும், அவர் விஜய் சேதுபதியின் ரோலில் நடிக்கவில்லை என்பதும் உறுதியாகிறது.