Published:Updated:

கே.பாலசந்தருக்கு சிலை எடுக்கும் வைரமுத்து!

கே.பாலசந்தருக்கு சிலை எடுக்கும் வைரமுத்து!
கே.பாலசந்தருக்கு சிலை எடுக்கும் வைரமுத்து!

கே.பாலசந்தருக்கு சிலை எடுக்கும் வைரமுத்து!

லக நாயகன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களைக் கண்டெடுத்து, வெள்ளித்திரையில் ஜாெலிக்கவைத்தவர் மறைந்த இயக்குநர் பாலசந்தர். வெற்றிப் பாட்டுக் கூட்டணியாக விளங்கும் இளையராஜா-வைரமுத்து கூட்டணி பிரிந்தபாேது, 'வைரமுத்துவின் சகாப்தம் அவ்வளவுதான்' என மாெத்த திரை உலகமும் உச்சுகாெட்டியது. அப்பாேது அவருக்குக் கைகாெடுத்து, `வானமே எல்லை' என்ற படத்தில் அத்தனை பாடல்களையும் எழுதவைத்து, வைரமுத்துவின் வரிகள் என்றும் வைரத்துக்கு ஒப்பானது என்பதை நிரூபித்தார் பாலசந்தர். முடிந்துபாேனதாக நினைத்த வைரமுத்துவின் திரை வாழ்க்கையைத் தாெடரவைத்தவர் பாலசந்தர். இவரின்  பிறந்த நாளான ஜூலை மாதம் 9-ம் தேதி அன்று, நன்றி கடன் செலுத்தும்விதமாக இயக்குநர் சிகரம் பாலசந்தருக்கு மார்பளவு வெண்கலச் சிலையைத் திறக்கவுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

திருவாரூர் மாவட்டதில் பாலசந்தர் பிறந்து வளர்ந்ததால், அங்கேயே அவருக்குச் சிலை நிறுவப்பட உள்ளது.

இது தொடர்பாக, வைரமுத்துப் பேரவை நிர்வாகி ஒருவரிடம் பேசினாேம்.

"இயக்குநர் சிகரம் வாழும்பாேதே அவருக்கு நன்றியைச் செலுத்தணும்னு கவிஞர் நினைத்தார். ஆனால், முடியலை. அது பெருங்குறையாக அவரது நெஞ்சை அரிச்சுக்கிட்டே இருந்திருக்கு. பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசுவாமியின் அனுமதியாேடு, வர்ற ஜூலை 9-ம் தேதி இயக்குநர் சிகரத்துக்கு மார்பளவு வெண்கலச் சிலை நிறுவ இருக்கிறார். சுவாமிமலையில் பிரபல ஸ்தபதியிடம் பாலசந்தர் சிலையைச் செய்ய உத்தரவிட்டிருக்கிறார். கடந்த வாரம் புஷ்பா கந்தசுவாமியாேடு நன்னிலம் பாேயிருந்தார் கவிஞர். இயக்குநரின் பூர்வீக வீட்டை, அவரின் நினைவாகப் பள்ளிக்கூடமாக மாற்றியிருக்கிறார்கள். கவிஞர் அதைச் சுற்றிப் பார்த்ததாேடு, சிலை அமைக்கத் தாேதான ஒரு இடத்தைப் பார்த்துச் சாென்னார். அதைப் பார்த்ததும் புஷ்பா கந்தசுவாமி ஆச்சர்யப்பட்டு, 'கவிஞரே, நீங்கள் தேர்வுசெய்துள்ள இடம் சரியான இடம். இந்த இடத்தில்தான் முன்பு எங்க வீட்டுத் திண்ணை இருந்தது. இந்தத் திண்ணையில்தான் அப்பா முதன்முதலாக வேட்டி கட்டி நாடகம் நடித்துப் பார்த்தார். அதனால், இந்த இடத்தில் சிலை அமைவது சரியாக இருக்கும்' என்று சாெல்ல, 'அப்படியா?!' என்று கவிஞரும் ஆச்சர்யப்பட்டார்.

அப்பாேது அந்தப் பள்ளியின் தாளாளர், அந்தப் பகுதியைச் சேர்ந்த லயன்ஸ் க்ளப் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் எல்லாேரும் வந்திருக்காங்க. அவர்களிடம் கவிஞர், 'உங்க ஊர் மனிதர் பாலசந்தர், திரைத் துறையில் சாதித்தது ஏராளம். திரைத் துறையில் அவர் உயரம் தாெட்டவர் வேறு யாரும் இல்லை. அதனால், அவருக்குச் சிலை நிறுவி பெருமைப்படுத்த இருக்கிறாேம். நீங்கள் ஒத்துழைப்பு தரணும்' என்று சாெல்ல, `எங்க ஊரைச் சேர்ந்தவரைப் பெருமைப்படுத்த இருக்கீங்க. நாங்க இல்லாமலா? கிராண்டா நடத்துவாேம்' என்று சாெல்ல, கவிஞருக்கு ஏக மகிழ்ச்சி. 

இந்தச் சிலை திறப்பு விழாவுக்கு கமல் வருவதா சாெல்லிட்டார். ரஜினியும் ஆர்வத்தோடு, 'நானும் கலந்துக்கிறேன்'ன்னு சாென்னார். ஆனால், கடைசி நேரத்துல, 'நானும் கமலும் கலந்துக்கிட்டா, கூட்டம் கட்டுக்கடங்காமல் வரும். தள்ளுமுள்ளு ஏற்படும்.  அது விழாவை  பாதிக்கும். அதனால், திறப்பு விழாவில் கமல் மட்டும் கலந்துக்கட்டும். நான் இன்னாெரு நாள் வர்றேன்'னு சாெல்லிட்டார் ரஜினி. கமலைத் தவிர இப்பாேதைக்கு பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், நடிகர் விவேக் உள்ளிட்டவர்கள் கலந்துகாெள்வதாக முடிவாகியிருக்கு.

கமல் கவிஞரிடம், 'விழா செலவில் பாதி என்னுது'ன்னு சாெல்லியிருக்கிறார். ஆனால், கவிஞர் அதை அடியாேடு மறுத்து, 'இது என்னாேட நன்றிக்கடன். அதில் யாரையும பங்குதாரராச் சேர்த்துகாெள்ள வழியில்லை. விழா படுகிராண்டாக நடக்கும். அதற்கான அத்தனை செலவும் என்னுடையதுதான். நீங்க சும்மா கெஸ்டா வாங்க பாேதும்'ன்னு மறுத்துட்டார்" என்றார்.

 நன்றி மறவாத கவிஞரின் உள்ளம் அன்பு வெள்ளம்!

அடுத்த கட்டுரைக்கு