Published:Updated:

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீசன்-7 ட்ரெய்லர்!

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீசன்-7 ட்ரெய்லர்!
'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீசன்-7 ட்ரெய்லர்!
'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீசன்-7 ட்ரெய்லர்!

அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரான `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஏழாவது சீசனின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடருக்கு நம் ஊரில் ரசிகர்கள் ஏராளம். வருடத்துக்கு ஒரு சீசன் என இதுவரை ஆறு சீசன்கள் முடிந்துள்ள நிலையில்,  வரும் ஜூலை 16-ம் தேதிமுதல் ஹெச்.பி.ஓ சேனலில் ஏழாவது சீசன் ஒளிபரப்பாகிறது. 

இதுவரை, ஒரு சீசனுக்கு 10 எபிஸோடுகள் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால், இந்த சீசனில் ஏழு எபிஸோடுகள் மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது. எட்டாவது சீஸன்தான் கேம் ஆஃப் த்ரோன்ஸின் இறுதி சீஸனாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த சீசனில் அறிமுகமாகும் புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார், ஜிம் பிராட்பெண்ட். இவர், 'ஐரிஸ்' எனும் படத்தில் நடித்தமைக்காக `சிறந்த குணச்சித்திர நடிகருக்கான 'ஆஸ்கர் விருது' ' வென்றவர். வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர், ஏழாவது சீசன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.