என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஐயோ செங்கொடி.... நான்காவது உயிர்

இரா.சரவணன், எஸ்.கிருபாகரன்

##~##

ழுகையும் ஆதங்கமுமாக இப்படி எழுதிவைத்துவிட்டு உயிரை விட்டு இருக்கிறார் செங்கொடி என்கிற இளம்பெண்.

 'காஞ்சிபுரம் மக்கள் மன்றம்’ என்கிற அமைப்பில் ஆறு வயதில் இருந்தே அங்கம் வகிக்கும் செங்கொடி, காஞ்சிபுரத்தில் சமூகத் தொண்டாற்றி வந்தவர். தூக்குத் தண்டனை விஷயத்தைக் கேள்விப்பட்ட நாளில் இருந்தே மிகுந்த வேதனையுடன் புலம்பிய செங்கொடி, கடந்த 23-ம் தேதி தன் அமைப்பினரோடு வேலூர் சிறைக்குப் போய் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறார்.அனுமதி கிடைக்கவில்லை. அடுத்தபடியாக 27-ம் தேதி காஞ்சிபுரத்தில் தூக்குத் தண்டனை யைக் கண்டித்து வைகோ தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு குமுறி இருக்கிறார். அடுத்த நாள் மாலை வாட்டர் பாட்டிலில் இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கியவர் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்னால் நின்றபடி, 'மூன்று பேரைத் தூக்கில் போடாதே’ என கோஷம்  போட்டபடியே தீக்குளித்து உயிரைவிட்டார்.

ஐயோ செங்கொடி.... நான்காவது உயிர்

அதே மன்றத்தைச் சேர்ந்த ஜெர்ஸி, ''ரொம்ப தமிழ் உணர்வான பொண்ணு செங்கொடி. 'கண்ணுக்குத் தெரியாமல் லட்சக்கணக்கில் செத்தவங்களைத்தான் கண்டுக்காமல் இருந்துட் டோம். கண்ணுக்கு முன்னாலேயே மூணு பேரு சாகுறதையும் இப்படித்தான் சகிச்சுக்கிட்டு இருக்கணுமா’னு கேட்டவள், இப்படி உயிரை விடுவாள்னு நினைக்கலையே...'' என்கிறார் கதறலாக.

செய்ய வேண்டியவர்கள் எதையும் செய்யாதபோதுதான், கையறு நிலையில் புலம்புபவர்களின் கடைசி முயற்சியாக தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது. ஆள்பவர்களே அவசியம் கவனிக்க!