என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

ரஜினி பேரன் ஆர்யா!

விகடன் டீம்

##~##

ம்மர் கடாஃபி என்பவர் யார்?

•  ரஜினி பேரன்களின் பெயர் என்ன?

• அண்ணா ஹஜாரே இளமைப் பருவத்தில் என்ன வேலை பார்த்தார்?

• கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஜெயலலிதா வைத்த புதிய பெயர் என்ன?

•  விஜயகாந்த் எவ்வளவு நாட்கள் கழித்து அ.தி.மு.க. ஆட்சி குறித்து கருத்து சொல்வேன் என்று கூறி இருக்கிறார்?

• இந்தியாவில் இப்போது எத்தனையாவது ஐந்தாண்டுத் திட்டம் அமலில் இருக்கிறது?

இவ்வளவுதான் கேள்விகள். இதைக் கேட்டதும் லிங்குசாமி, விமல், 'காடுவெட்டி’ குரு, விஜயலட்சுமி, 'கஞ்சா’ கருப்பு ஆகியோரின் பாய்ச்சலும் பதுங்கலும் அப்படி அப்படியே தொடர்கிறது!    

ரஜினி பேரன் ஆர்யா!

கேள்வி: மம்மர் கடாஃபி என்பவர் யார்?

சரியான பதில்: புரட்சிப் படையின் தாக்குதலுக்குப் பயந்து தலைமறைவான லிபியா நாட்டு அதிபர்!

லிங்குசாமி: ''ஏங்க... 'வேட்டை’ படத்துக்காக நா.முத்துக்குமார் பாட்டு எழுதிட்டு இருக்கார். பக்கத்துலயே உட்கார்ந்து கரெக்ஷன் பண்ணிட்டு இருந்தேன். உங்களுக்காக எந்திரிச்சு வெளியே வந்தா, முதல் கேள்வியே மம்மர் கடாஃபி, ஜம்மர் இடி அமீன்னுட்டு! யாருங்க அந்தாளு? ஒரு சாயலுக்கு நம்ம பொன்னம்பலம் மாதிரி இருப்பார்னு நினைக்கிறேன். தெரியலை... விடுங்க!''

விமல்: '' 'யுத்தம்’ ஷூட்டிங்ல இருக்கேன். சுத்தி நிறையப் பசங்க இருக்காங்க. அஞ்சு நிமிஷம் ஷாட் பிரேக். சென்னையில நேத்து நல்ல மழை. என்ன குழப்பமா இருக்கா? உங்ககிட்ட பேசிட்டே கடாஃபித் தலைவன் யார்னு யோசிச்சுட்டு இருக்கேன். அவரு ஏதோ ஒரு நாட்டு அதிபர்னு நினைக்கிறேன். அங்கே கூட சண்டை நடந்துட்டு இருக்கு. சரியா?''

'காடுவெட்டி’ குரு: ''என்னது... காப்பிக் கடையா? திரும்பச் சொல்லுங்க... யாருங்க அது? எந்தக் கட்சி ஆளாம்? பி.பி. ஏறிக்கிட்டே போகுது. பி.பி. செக்கப் பண்ண கிளம்புறப்போ... நீங்க வேற ஏந்தம்பி! ரெண்டு கழகங்களோட ஆட்சியில மக்கள் படுற பாட்டைப் பார்த்து காடுவெட்டிக்கு பி.பி. ஏறிருச்சுனு போட்டுக் கோங்க!''

விஜயலட்சுமி: ''இவரு ஏதோ எகிப்து சம்பந்தப் பட்ட ஆளுன்னு நினைக்கிறேன். பிரதம ராவோ, அமைச்சராவோ இருக்காரு. நான் எப்படிப் பதில் சொன்னாலும், நமீதா மாதிரி பத்துப் பத்து மார்க் போட்ருங்க ப்ளீஸ்!''

கஞ்சா கருப்பு: ''அண்ணே,  ராத்திரி லேட்டா யிருச்சு. அசந்து தூங்கிட்டேன். இன்னமும் தூக்கக் கலக்கம் போகலை. இருந்தாலும் நாம ரொம்ப சார்ப்புண்ணே!  ஆனா, இந்த ஆள் யாரு... மம்முவா? இங்கிலீபிஷ் வேண்டாம்ணே... தமிழ்ல ஏதாவது கேளுங்க!''

கேள்வி: ரஜினி பேரன்களின் பெயர் என்ன?

சரியான பதில்: யாத்ரா, லிங்கா.

லிங்குசாமி: ''ஆர்யாவா? சே... செட்ல ஆர்யா பேரைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு அவர் பேரே வருது... எனக்குத் தெரியும்ங்க... இருங்க... ஆங்... பிடிச்சுட்டேன். லிங்கா, யாத்ரா!''

விமல்: ''முதல் பையன் யாத்ரா. அவன் அளவுக்கு ரெண்டாவது பையன் பேர் பளிச்சுனு தெரியலை. ரெண்டாவது பேரனுக்கும் சூப்பர் ஸ்டார் பக்தி மயமாத்தான் பேர் வெச்சார். ருத்ராவா? இல்லை... இல்லை... லிங்கானு நினைக்கிறேன். கரெக்டா?''

காடுவெட்டி குரு: ''ரஜினியைத் தெரியும். அவர் பேரப்புள்ளைங்கபத்தித் தெரியாது. ஆமா, அவருக்கு எத்தனை பேரப் பசங்க?''

விஜயலட்சுமி: ''இந்த மாதிரி ஈஸியாவே கேளுங்க... யாத்ரா, லிங்கா!''

கஞ்சா கருப்பு: ''முதல் புள்ள பேரு 'ரா’ன்னு முடியும். ரெண்டாவது புள்ளை பேரு ஈஸ்வரன் மாதிரி ஏதோ வரும். சரியாண்ணே?''

ரஜினி பேரன் ஆர்யா!

அண்ணா ஹஜாரே இளமைப் பருவத்தில் என்ன வேலை பார்த்தார்?

சரியான பதில்: ராணுவத்தில் டிரைவராக இருந்தார்!

லிங்குசாமி: ''அவர் என்ன வேலைபார்த் தார்னு தெரியாது. ஆனா, இப்போ எந்த அரசியல்வாதியையும் வேலை பார்க்கவிடாம கண்ணுல விரலைவிட்டுஆட்டிட்டு இருக்கார்!''

விமல்: ''என்னவா இருந்தா என்ன... நல்லவரா இருந்தார்னு போட்டுக்கோங்க. அவரு காந்தியவாதி. சின்ன வயசுலயே கதர் டிரெஸ் போட்டு இருப்பார். காந்தியக் கொள்கைகளைப் பரப்பி இருப்பார். ஒருவேளை ராட்டையில நூல் நூத்து இருப்பாரோ?''

காடுவெட்டி குரு: ''அண்ணா ஹஜாரேவை இப்பதான் தெரியும். அவரு என்ன வேலை பார்த்தார்னு யாருக்குத் தெரியும்? நம்ம கட்சியைப்பத்தி ஏதும் கேட்க மாட்டீங்களா தம்பி?''

விஜயலட்சுமி: ''நல்லா போய்ட்டு இருக்கும்போதே, ஏன் இப்படிக் கேட்கிறீங்க... தெரியலையே!''

கஞ்சா கருப்பு: ''ஏதோ புஸ்தகக் கடையில வேலை பார்த்தார்னு நம்ம பசங்க சொன்னாங்க... என்ன வேலை பார்த்தாரோ... முகத்தைப் பார்த்தாலே நல்ல மனுஷன் மாதிரி இருக்கார்ணே!''

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஜெயலலிதா வைத்த புதிய பெயர் என்ன?

சரியான பதில்: பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!

லிங்குசாமி: ''தெரியலியே... நீங்க கேட்டதும்தான் ஞாபகத்துக்கு வருது. என்னோட மெடிகிளைம் பாலிசியைப் புதுப்பிக்கணும்!''

விமல்: ''அவசர மருத்துவத் திட்டமா? ஷாட்டுக்கு லேட் ஆகிடுச்சுனு அவசரப்படுத்துறாங்க. இதோட முடிச்சுக்கலாமா?''

'காடுவெட்டி’ குரு: ''அந்த அம்மா பேரும் வைக்கலை. எம்.ஜி.ஆர். பேரும் வைக்கலை. ஏதோ ஒரு காப்பீட்டுத் திட்டம்னு வெச்சாங்க!''

விஜயலட்சுமி: ''ஓ... அப்படி ஒரு திட்டம் இருக்கா?''

கஞ்சா கருப்பு: ''வயசானவங்க மருத்துவத் திட்டம்தானே, நல்லாச் செய்யட்டும்ணே!''

விஜயகாந்த் எவ்வளவு நாட்கள் கழித்து அ.தி.மு.க. ஆட்சி குறித்து கருத்து சொல்வேன் என்று கூறி இருக்கிறார்?

சரியான பதில்: ஆறு மாதம்!

லிங்குசாமி: ''அரசியலுக்கும் நமக்கும் 1,724 கி.மீ. தூரங்க. ஸாரி!''

விமல்: ''அப்படி எதுவும் சொன்னாரா என்ன?''

காடுவெட்டி குரு: ''அஞ்சு மாசம் கழிச்சுச் சொல்றதா சொல்லி இருக்கார்னு நினைக்குறேன். சரியா?''

விஜயலட்சுமி: ''ஏன் இப்படி எக்குத்தப்பாக் கேள்வி கேட்குறீங்க... கேப்டன் சொல்லும்போது சொல்வார்!''

கஞ்சா கருப்பு: ''அஞ்சு வருஷம் கழிச்சுனு பஞ்ச் டயலாக் போட்டுக்கோங்க!''    

இந்தியாவில் இப்போது எத்தனை யாவது ஐந்தாண்டுத் திட்டம் அமலில் இருக்கிறது?

சரியான பதில்: 11

லிங்குசாமி: ''நாம பொது அறிவுல ரொம்ப வீக்னு வெளியே தெரிஞ்சி ரும்போல. பரவாயில்லை, தெரியாத தைத் தெரியாதுனு சொல்றதுதான் நேர்மை. எனக்குத் தெரியாதுங்க!''

விமல்: ''இது எனக்குத் தெரியுமே... மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்தானே?''

ரஜினி பேரன் ஆர்யா!

காடுவெட்டி குரு: ''எத்தனையாவது திட்டம்? என்ன திட்டம்? அம்பதா... அம்பத்தஞ்சா?''

விஜயலட்சுமி: ''அடப் போங்க... ஸ்கூல் எக்ஸாம்லயே இந்தக் கேள்வியை நான் சாய்ஸ்ல விட்டவ. இப்பவும் பாஸ்!''

கஞ்சா கருப்பு: ''ஐந்தாண்டுத் திட்டமா? அதெல்லாம் திட்டம் நிறைய இருக்குண்ணே... இன்னும் பெரிய நகைச்சுவை நடிகனா வரணும். ஸ்க்ரீன்ல நம்மளைப் பார்த்தாலே எல்லாரும் விசில் அடிக்கணும். அம்புட்டுதாண்ணே நம்ம திட்டம்!''