Published:Updated:

`அது என் பர்சனல்... என் மகன்தான் என் உலகம்!' - `நிறம் மாறாத பூக்கள்' அசிம்

முதல்முறையாக மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து நெகிழ்ந்த அசிம்... காரணம் என்ன தெரியுமா?

மகனுடன் அசிம்
மகனுடன் அசிம்

`பிரியமானவள்' சீரியலில் துருதுரு பிரபாவாக சின்னத்திரையில் பரிச்சயமானவர் முகமது அசிம். விஜய் டிவி சீரியலில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நாயகனாக நடித்தார். கடைக்குட்டி சீரியலுக்குப் பிறகு, சின்ன பிரேக் எடுத்துக்கொண்ட அசிம், அண்மையில் தன் மகன் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்து, `இவன்தான் என் உலகம்' என்று குறிப்பிட்டிருந்தார்.

 அசிம்
அசிம்

விஜய் டிவியில் அடுத்தடுத்த சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர், `திடீரென பிரேக் எடுத்துக்கொண்டது ஏன்' என்று அவரிடமே கேட்டோம்.

``விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் முடிந்த பிறகு எந்த புராஜெக்ட்டும் கமிட் பண்ணிக்கல. ஒரு சின்ன பிரேக் எடுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டேன். இப்போ ஜீ தமிழில் நிறம் மாறாத பூக்கள் சீரியலில் ஹீரோவா பண்ணிட்டிருக்கேன்.

மகனுடன் அசிம்
மகனுடன் அசிம்

ஏற்கெனவே நடிச்சிட்டு இருந்த ஹீரோவுக்கு பதிலா நான் கமிட் ஆகியிருக்கேன். அடுத்ததா ஒரு பெரிய புராஜக்ட்டில் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்திருக்காங்க. அந்த ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குது. ஒரு திரைப்படம், வெப் சீரிஸ் பண்ணிட்டு இருக்கேன்’’ என்றவரிடம், குழந்தையின் புகைப்படம் திடீரென போஸ்ட் செய்து இவன்தான் என் உலகம் என்று சொன்னதற்கான காரணத்தைக் கேட்டோம்...

``என்னைப் பத்தி ஒரு செய்தி சமீபத்தில் வைரல் ஆச்சு. அதனால் நான் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளானேன். இப்போதைக்கு நான் அதைப் பற்றி பொதுவெளியில் பகிர விரும்பல. என் பர்சனல் அது. எந்தப் பிரச்னை வந்தாலும் என் மகன்தான் என் உலகம். அவன் மட்டும் போதும்.

மகனுடன் அசிம்
மகனுடன் அசிம்

மேலும், என் மகனோட எதிர்காலம் எனக்கு முக்கியம். அவனோட பிறந்தநாள் சமீபத்தில் முடிஞ்சது. அதற்காகத்தான் அவனுடைய புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தேன். என் உலகமே அவன்தான். அவனைத் தாண்டி யாருமே எனக்கு முக்கியமில்லை. அதை இந்த உலகத்துக்குச் சொல்வதற்காகத்தான் புகைப்படத்தை பகிர்ந்தேன்’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.