Published:Updated:

`என் படத்தைப் பார்த்து விஜய் காஸ்டியூம் டிசைனரைக் கேட்டார்!'- நினைவுகளைப் பகிர்ந்த `மைக்' மோகன்

மோகன்
மோகன்

ரி என்ட்ரிக்கு தயாராகும் மோகன்..

முதல் படத்திலேயே வெள்ளி விழா கொண்டாடிய நாயகன் மோகன். `மூடுபனி’ திரைப்படம் மூலமாக தமிழில் தடம் பதித்தவர்.

ரசிகர்கள் சந்திப்பில் மோகன்
ரசிகர்கள் சந்திப்பில் மோகன்

ரசிகர்களால் மைக் மோகன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர் 1990-க்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். தற்போது மீண்டும் நடிக்கப் போவதாக அண்மையில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் மோகன் குறிப்பிட்டுள்ளார்.

``நான் முதலில் காஸ்டியூம் டிசைனருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ரசிகர்களை அதிகம் கவர்ந்தது என்னுடைய டிரெஸ்ஸிங்தான்.’’

மோகன்
மோகன்

என்னுடைய படங்களைப் பார்த்துவிட்டு, நடிகர் விஜய் என்னுடைய காஸ்டியூம் டிசைனரைக் கேட்டார்" என்று நெகிழ்ந்தார் மோகன்.

அடுத்த கட்டுரைக்கு