Published:Updated:

``உடை விஷயத்துல என் எல்லை எனக்குத் தெரியும்" - சரண்யா ரவிச்சந்திரன் | #HerChoice

சரண்யா ரவிச்சந்திரன்
News
சரண்யா ரவிச்சந்திரன்

"சொந்தரக்காரங்க, ஊர்க்காரங்க 'வயசுக்கு வந்த பொண்ண ஏன் சினிமாவுக்கெல்லாம் விடுறீங்க'ன்னு கேட்டாங்க. ஒரு பொண்ணு படிச்சா, வேலைக்குப் போய், ஒரு நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் ஆகி செட்டில் ஆகிடணும்னு நினைக்குறாங்க..." - சரண்யா ரவிச்சந்திரன்

Published:Updated:

``உடை விஷயத்துல என் எல்லை எனக்குத் தெரியும்" - சரண்யா ரவிச்சந்திரன் | #HerChoice

"சொந்தரக்காரங்க, ஊர்க்காரங்க 'வயசுக்கு வந்த பொண்ண ஏன் சினிமாவுக்கெல்லாம் விடுறீங்க'ன்னு கேட்டாங்க. ஒரு பொண்ணு படிச்சா, வேலைக்குப் போய், ஒரு நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் ஆகி செட்டில் ஆகிடணும்னு நினைக்குறாங்க..." - சரண்யா ரவிச்சந்திரன்

சரண்யா ரவிச்சந்திரன்
News
சரண்யா ரவிச்சந்திரன்

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் `வல்லமை தாராயோ’ தொடரில் நடித்தவர் சரண்யா ரவிச்சந்திரன், பக்கத்து வீட்டுப் பெண் அடையாளத்தில் சினிமாத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கிராமத்தில் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து மீடியா, சினிமாத்துறையில் நுழைந்தவர். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படம், ஓரிரு பெரிய இயக்குநர்களின் படங்கள், வெப் சீரிஸ், ஷார்ட் ஃப்லிம்ஸ் என பரபரப்பாக இருக்கிறார்.

சரண்யா ரவிச்சந்திரன்
சரண்யா ரவிச்சந்திரன்

மீடியா துறைக்கு வரணும்ங்கிற உங்க விருப்பத்தை எளிதா தேர்ந்தெடுக்க முடிஞ்சுதா என்ற கேள்வியுடன் அணுகினோம். திருப்பதியில் ஷூட்டிங்கில் இருந்தவர், இடைவேளை நேரத்தில் #HerChoice அனுபவம் பகிர்ந்தார்.

``எனக்கு சொந்த ஊர் திருச்சி பக்கத்துல கே.கள்ளிக்குடிங்கிற கிராமம். அப்பா விவசாயி, அம்மா சித்தாள் வேலை பார்க்கிறாங்க. ரெண்டு தம்பிங்க இருக்காங்க. எங்க மூணு பேரையும் படிக்க வைக்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.

பி.எஸ்ஸி மைக்ரோபயாலஜி படிச்சிட்டு வேலைக்கு சென்னை வந்தேன். நிறைய படிக்கணும்னு ஆசை இருந்துச்சு. கரெக்டா அந்த நேரத்துல அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சு. அதனால எங்க அம்மா தாலிய அடகு வெச்சுதான் படிக்க வெச்சாங்க. படிச்சு முடிச்சிட்டு பொருளாதார ரீதியா என் வீட்டை சப்போர்ட் பண்ணும்னு ஆசை. அதுக்கும் மேல சென்னையை எக்ஸ்ப்ளோர் பண்ணனும்னு ரொம்ப ஆசை. சென்னைக்கு வர்றதுங்கிறது என்னோட கனவு.

சரண்யா ரவிச்சந்திரன்
சரண்யா ரவிச்சந்திரன்

சென்னைக்கு வேலைக்கு வந்து என் ரெண்டு தம்பிங்களையும் டிப்ளோமா படிக்க வெச்சேன். இன்னும் படிக்கணும்னு ஆசை இருக்கு. கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸ் எதும் பண்ணலாமான்னு தோணும். ஆனா, சினிமாத்துறைக்குள்ள நடக்குற போராட்டங்களை (Peer challencge) சரிசெய்யவே நேரம் சரியா இருக்கு. அப்புறம் எங்க படிக்கிறது....

மீடியா துறைக்குள்ள போகணும்ங்றது முழுக்க முழுக்க என்னோட முடிவுதான். பார்த்த வேலைய விட்டுட்டு முதல்ல ஒரு ஆங்கராதான் கரியரை தொடங்குனேன். அதுக்கப்புறம்தான் சினிமாத் துறைக்குள்ள வந்தேன். என்னோட முடிவுக்கு அப்பா எதுவும் சொல்லல. எதிர்காலத்துல எனக்கு கல்யாணம் நடக்காம போயிடுமோன்னு என் அம்மா மட்டும் கொஞ்சம் பயந்தாங்க. சொந்தக்காரங்க, ஊர்க்காரங்க எல்லாம் எங்க அம்மா, அப்பாகிட்ட, 'வயசுக்கு வந்த பொண்ண ஏன் சினிமாவுக்கெல்லாம் விடுறீங்க'ன்னு கேட்டாங்க. ஒரு பொண்ணு படிச்சா, வேலைக்குப் போய், ஒரு நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் ஆகி செட்டில் ஆகிடணும்னு நினைக்குறாங்க. அவ கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தனக்குப் புடிச்சதைச் செய்யணும்னு நினைக்கிறதை இந்தச் சமூகம் ஏத்துக்க மாட்டேங்குது.

சரண்யா ரவிச்சந்திரன்
சரண்யா ரவிச்சந்திரன்

இன்னும் சொல்லப்போனா, சினிமா இண்டஸ்ட்ரியிலயே ஹேர் டிரெஸ்ஸர், காஸ்ட்யூமர், அசிஸ்டன்ட் டைரக்டர்னு பலர், நல்ல படிப்பு படிச்சிட்டு ஏன் சினிமாவுக்கு வந்தீங்கன்னுதான் கேக்குறாங்க. என்னோட விருப்பத்துக்கு என் குடும்பம் பெரிய அளவுல தடையா இல்ல. எங்க அப்பா, அம்மா ரொம்ப படிக்கல. என் புள்ள என்ன முடிவெடுத்தாலும் சரியா எடுக்கும்னு அவங்க நம்புறாங்க.

அவங்க நம்பிக்கையைக் காப்பாத்துற பொறுப்பு எனக்கு இருக்கும். நான் சரியா இருந்தாதான் என்னைப் பார்த்து வளர்ற என் தம்பிகளும் சரியா வளருவாங்க. அதே மாதிரி என்னை மாதிரி பின்னணியில இருந்து இந்தத் துறைக்கு வரணும்னு நினைக்கிறவங்களுக்கும் நான் நல்ல உதாரணமா இருக்கணும். இந்தத் துறையைப் பொறுத்தவரை, ஒரு அலை அடிச்சு நடுக்கடலுக்குள்ள போயிட்டா, எப்படியாவது நீச்சல் கத்துக்கலாம்.

Actress Saranya Ravichandran
Actress Saranya Ravichandran

இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்கள் நடிச்சிருக்கேன். ஆனா கனவுல 100-க்கும் மேற்பட்ட படம் நடிச்சிருப்பேன். இந்த டைரக்டர்கிட்ட வொர்க் பண்ணும், இப்படி நடிக்கணும்னு யோசிச்சிட்டே இருப்பேன். என் வாழ்க்கைங்கிற புத்தகத்துல நிறைய நல்ல நினைவுகளை எழுதணும்னு நினைக்கிறேன். அதுவரை எனக்கான தேடல்கள் தொடரும்" என்றவரிடம், இன்னும் பெண்கள் தங்களுக்குப் பிடிச்சதைத் தேர்ந்தெடுக்குற விஷயத்துல சமூகத்துல என்ன மாற்றம் வரணும்னு நினைக்கிறீங்க என்று கேட்டோம்.

``விருப்பப்பட்ட உடையைப் போடுறதையே ஏத்துகிறது இல்ல. கூடுதலா கொஞ்சம் மேக்கப் போட்டுட்டா அவ்வளவுதான். உடை விஷயத்துல என்னோட எல்லை எனக்குத் தெரியும். ஆனாலும் அதுபத்தின விமர்சனங்களை சொல்லிக்கிட்டேதான் இருக்கும் இந்தச் சமூகம். அதுமட்டுமில்லாம, எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும். லைஃப்ல செட்டில் ஆயிட வேண்டிதானேன்னு நம்முடைய தன்னம்பிக்கையை உடைக்கிற மாதிரியான பேச்சுகளும் வரும். பொண்ணுங்க எப்பவும் சேஃப் ஸோன்-லயேதான் இருக்கணும்னு நினைப்பாங்க.

ஒரு பெண்ணுக்கு ஏதாவது பிரச்னைன்னா அதை குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானமா நினைக்குறாங்க. ஆனா அதே பிரச்னை ஒரு ஆணுக்கு ஏற்பட்டா அதைக் கண்டுக்ககூட மாட்டாங்க. 'விடுறா பாத்துக்கலாம்'ன்னு டேக் இட் ஈசியா எடுத்துக்கிறாங்க.

Saranya Ravichandran
Saranya Ravichandran

இப்படியான தடைகளை, விமர்சனங்களை உடைச்சு தங்களுக்குப் புடிச்ச விஷயத்தை செய்யுற பெண்கள், அந்த விஷயத்துல ரொம்ப பொறுப்புணர்வோட நடந்துக்கணும்.

எதுக்காக இத்தனை தடைகளையும் உடைச்சிட்டு வந்தோம்ங்கிறதை மறந்திடாம அதை நோக்கி சின்சியரான உழைப்பைக் கொடுக்கணும். அப்படி நடந்துகிட்டா இதே போல கனவுகளைச் சுமந்துகிட்டு வர்றவங்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க முடியும். அப்படி வர்றவங்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்க முடியும்" என பாசிட்டிவ்வாக நிறைவு செய்தவர், 'லைன்மேன்', 'பைரி' என்ற இரண்டு படங்களில் லீட் ரோலில் நடித்து ரிலீஸுக்காக வெயிட்டிங்!