Published:Updated:

``தனித்துவிடப்பட்ட உணர்வு எனக்கு ஏற்படுவதில்லை!" - நடிகை அபிநயாவின் சமூக அக்கறை

abhinaya
abhinaya

``எனக்காகவே என் தோழிகள் சிலரும் சைகை மொழி கத்துக்கிட்டாங்க. அவங்களோடு சந்தோஷமா பேசி மகிழ்வேன்."

கேட்கும் திறன், பேசும் திறன் குறைபாடுகளை மீறியும் நடிகையாகச் சாதித்தவர், அபிநயா. இவரைப் போன்ற குறைபாடுடைய மாற்றுத்திறன் குழந்தைகளுக்குச் சைகை மொழி (sign language) கற்றுக்கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

abhinaya
abhinaya

இதுகுறித்து அபிநயா பகிர்ந்துகொண்டபோது, ``இந்தியாவில் காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஐந்து கோடி பேருக்கும் அதிகமானோர் இருக்காங்க. அவங்கள்ல முக்கால்வாசி பேருக்கு சைகை மொழி தெரியாது. அதனால, அந்த மனிதர்களால் வழக்கமான பணிகளைச் செய்வதும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் ரொம்பவே சிரமம்.

எனக்கு இதுபோன்ற பிரச்னை வரக்கூடாது என்பதால்தான், எங்க வசிச்சாலும் உதவும்னு என்னை ஆங்கில வழி பள்ளியில பெற்றோர் படிக்க வெச்சாங்க. வீட்டுலயே சைகை மொழியும் கத்துக்கொடுத்தாங்க. இந்த ரெண்டு முயற்சிகளும் எனக்குப் பெரிய உதவியா இருந்துச்சு. அதுபோல என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் சைகை மொழியைக் கத்துக்கிட்டு, அதை தங்கள் குழந்தைகளுக்கும் கட்டாயமாகக் கத்துக்கொடுக்கணும். அதுக்காகப் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துறேன். 

abhinaya
abhinaya

எனக்காகவே என் தோழிகள் சிலரும் சைகை மொழி கத்துக்கிட்டாங்க. அவங்களோடு சந்தோஷமா பேசி மகிழ்வேன். இதனால, நான் தனித்துவிடப்பட்ட உணர்வு எனக்கு எப்போதும் ஏற்படுவதில்லை. என்னைப் போன்ற மாற்றுத்திறன் குழந்தைகளை அடிக்கடி சந்திச்சு, சைகை மொழியில் உரையாடி சந்தோஷப்படுறேன்.

சைகை மொழியை எல்லா மொழியினரும் கத்துக்கலாம். `கேட்கும் திறன், பேசும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அவங்க படிக்கிற பள்ளியில் சைகை மொழியைக் கட்டாயப் பாடமாக்கணும்'னு பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று வலியுறுத்துகிறேன். ஆந்திரா, தெலங்கானா தவிர, தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும்கூட விழிப்புணர்வு ஏற்படுத்துறேன்.

``தனித்துவிடப்பட்ட உணர்வு எனக்கு ஏற்படுவதில்லை!" - நடிகை அபிநயாவின் சமூக அக்கறை

இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் நலன் சார்ந்து செயல்படும் மனிதர்களுடன் நட்பில் இருக்கிறேன். நாங்க ஆக்கபூர்வமான முயற்சிகள் நடக்கத் தொடர்ந்து திட்டமிடுவோம். அந்த வகையில்தான், என்னுடைய இந்த முன்னெடுப்பும் தொடங்கியது" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு