Published:Updated:

"இது பண்ணக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது, இது தீட்டு என எந்தக் கடவுளும் சொல்லவில்லை"-ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்
News
ஐஸ்வர்யா ராஜேஷ்

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

Published:Updated:

"இது பண்ணக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது, இது தீட்டு என எந்தக் கடவுளும் சொல்லவில்லை"-ஐஸ்வர்யா ராஜேஷ்

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ்
News
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஜியோ  பேபி இயக்கத்தில், நிமிஷா சஜயன், சூரஜ் வெஞ்சிரமுடு நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. பொதுபுத்தி மனநிலையில் உள்ள மணமகன் குடும்பத்தால் பாதிப்புக்குள்ளாகும் பெண்ணின் நிலையை எடுத்துரைத்த  இப்படம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தற்போது இப்படத்தை  இயக்குநர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜெர்ரி சில்வெஸ்டர் இசையமைத்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,"ஆண் - பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு இல்லை. சபரிமலை  என்றில்லை எந்தக் கடவுளும் என் கோயிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை. 

இது பண்ணக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது இது தீட்டு என எந்தக் கடவுளும் கூறவில்லை. இதற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எல்லாம் மனிதர்கள் உருவாக்கியதுதான். எனவே நான் இதையெல்லாம் நம்புவது கிடையாது என்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், இந்த காலத்திலும் ஆணாதிக்கம் என்பது இருக்கிறது. நகரத்தைக் காட்டிலும் கிராமத்தில் சற்று அதிகமாக இருக்கிறது பெண்களுடைய வாழ்க்கை சமையலறையோடு  முடிவடைந்து விடக்கூடாது அவர்களது திறமை வெளிவர வேண்டும்" என்று கூறியுள்ளார்.