Published:Updated:

அர்ச்சனா பகிர்ந்த `வீடு' சம்பவம், கெளதமின் புல்லட், ஆர்.ஜே.பாலாஜி `ஃபார்முலா'!

அர்ச்சனா
அர்ச்சனா

பத்திரிகையாளர்கள் உட்பட எல்லோரும் போன பிறகு, நாலு வருஷமா அவர் பத்திரப்படுத்தி வெச்சிருந்த அந்த லெட்டரை என்னிடம் காட்டினார்

கு.ஆனந்தராஜ்: " 'வீடு' படத்தில் உங்க நிஜப்பெயர் சுதாவாகவே நடிச்சிருப்பீங்க. அந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி எப்படி உருவாச்சு?"

அர்ச்சனா: " 'நீங்கள் கேட்டவை' பட ஷூட்டிங்ல பத்திரிகையாளர் ஒருவர் பாலு சாரைச் சந்திக்க வந்தார். அவர், 'இந்தப் பொண்ணை ரெண்டு இயக்குநர்கள் ஏற்கெனவே ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. நீங்க எப்படித் தேர்வு செய்தீங்க?'ன்னு பாலுகிட்ட கேட்டிருக்கார். பத்திரிகையாளர்கள் உட்பட சிலரிடம் தன் கருத்தைக் கைப்பட ஒரு கடிதத்தில் எழுதிக்கொடுப்பது பாலுவின் வழக்கம். அப்போ பேப்பரில் ஏதோ எழுதி அதைப் பத்திரிகையாளர்கிட்ட காட்டிட்டு, தன் சட்டை பாக்கெட்ல வெச்சுக்கிட்டார். அதுகுறித்து நான் கேட்க, 'பிற்காலத்துல சொல்றேன்'னு சொல்லிட்டார். சில வருஷம் கழிச்சு, 'நல்ல ஆர்ட் பிலிம்ல நடிக்க ஆசைப்படறேன்'னு பாலுகிட்ட கேட்டேன். 'அப்படியான நல்ல படம் எடுக்கணும்னுதான் ஒரு வாரமா நானும் நினைச்சுகிட்டிருந்தேன்'னு அவர் சொன்னார். 'வீடு' படத்துக்கான தொடக்கப்புள்ளி அதுதான்!

அர்ச்சனா பகிர்ந்த `வீடு' சம்பவம், கெளதமின் புல்லட், ஆர்.ஜே.பாலாஜி `ஃபார்முலா'!

சொந்த ஊர்ல வீடு கட்ட நிறைய சிரமங்களை எதிர்கொண்ட அவரின் அம்மாவை மையமா வெச்சுதான், பாலு சார் அந்தப் படத்தை உருவாக்கினார். அந்தப் படத்துக்காக, சென்னை சாலிகிராமத்துல தன்னோட நிலத்துல நிஜமாவே படிப்படியா வீடு கட்டிப் படமாக்கினார். ஒருநாள் யதேச்சையா கனமழை பெய்ய, 'மழையால் ஷூட்டிங் நடக்காதே'ன்னு குழந்தைத்தனமா சந்தோஷப்பட்டு கார்ல உட்கார்ந்துட்டேன். பத்து நிமிஷம் தனியா உட்கார்ந்து யோசிச்ச பாலு, 'கேமராவை வைங்க! ஷூட்டிங் ஸ்டார்ட்'ன்னு சொன்னார். அந்த நெருக்கடியான தருணத்தை, படத்துல பூமி பூஜையின்போது மழை வருவதுபோலப் படமாக்கிப் பிரமாதப்படுத்தினார். அந்தப் படத்துல மழை வர்ற காட்சிகள் எல்லாமே நிஜமாவே நடந்ததுதான். இந்திய சினிமாவில் முக்கியமான படங்கள்ல ஒன்றான 'வீடு' படத்துக்கு, பாலு தன் ஆன்மாவையே பயன்படுத்தினார்.''

'வீடு' படத்துக்காக "தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் முதல் நபரா என் வீட்டுக்கு வந்து பாராட்டிய பாலு சார்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன். பத்திரிகையாளர்கள் உட்பட எல்லோரும் போன பிறகு, நாலு வருஷமா அவர் பத்திரப்படுத்தி வெச்சிருந்த அந்த லெட்டரை என்னிடம் காட்டினார். 'திஸ் ஆர்ட்டிஸ்ட் வில் பிக்கம் ஆன் இம்பார்ட்டன்ட் ஆக்டர் இன் இந்தியன் சினிமா. ஸீ வில் கெட் எ நேஷனல் அவார்டு'ன்னு எழுதியிருந்தார் அவர்."

அர்ச்சனாவின் நேர்காணலை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "பாலுமகேந்திரா சொன்னதும் மழை வந்துச்சு!"

https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-actress-archana

சனா: ''கொஞ்ச நாளுக்கு முன்பு உங்களைப் பார்க்கும்போது மன அழுத்தத்தில் இருந்த மாதிரி இருந்தது. எப்படி அதிலிருந்து மீண்டு வந்தீங்க?''

அர்ச்சனா பகிர்ந்த `வீடு' சம்பவம், கெளதமின் புல்லட், ஆர்.ஜே.பாலாஜி `ஃபார்முலா'!

கெளதம்: ''வெளியே நிக்குற பைக்தான் எல்லாத்துக்கும் காரணம். இப்போ இந்த புல்லட்லதான் சென்னையைச் சுத்திட்டிருக்கேன். இந்த பைக் பயணம் நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்திருக்கு. மனசு ஒரு மாதிரி இருந்தா பைக் எடுத்துக்கிட்டு ரவுண்டடிக்கக் கிளம்பிடுவேன். அடுத்து என்னோட வீடு. வெளியில இருக்கிற பிரச்னை களையெல்லாம் தாண்டி வீட்டுக்குள்ள போயிட்டா வேறொரு அரவணைப்பு கிடைச்சிடும். நட்பு, காதல், அம்மா, பாசம், பசங்க இதெல்லாம்தான் என்னை மீட்டுக் கொண்டுவந்திருக்கு. என்னோட வெளி விஷயங்களைப் பத்தியெல்லாம் என் வீட்டில் கேட்க மாட்டாங்க; பேச மாட்டாங்க. மற்ற இயக்குநர்கள் படங்களைப் பார்ப்போம். இசை பத்தின விஷயங்களைப் பேசுவோம். வீடுதான் என்னுடைய உண்மையான உலகம்.''

- இயக்குநர் கெளதம் நேர்காணலை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "அடுத்த படத்தில் தப்பு பண்ணக்கூடாது!" https://cinema.vikatan.com/tamil-cinema/gautham-vasudev-menon-interview

நா.சிபிச்சக்கரவர்த்தி: "உங்க அபார வளர்ச்சிக்கு என்ன ஃபார்முலா பயன்படுத்துறீங்க ப்ரோ?''

அர்ச்சனா பகிர்ந்த `வீடு' சம்பவம், கெளதமின் புல்லட், ஆர்.ஜே.பாலாஜி `ஃபார்முலா'!

ஆர்.ஜே.பாலாஜி: "கலாய்க்குறீங்கன்னு நினைக்காம பதிலைச் சொல்றேன். எந்த ஃபார்முலாவையும் பயன்படுத்தாததுதான் என் ஃபார்முலா. ஒரு வேலை செய்ய நினைச்சா அதை ஒழுங்கா செய்யணும்னு நினைப்பேன். அந்த வேலையால், சில நல்ல விஷயங்கள் நடக்கும்னு நம்புவேன். என் முதல் படம் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. மக்களுக்கும் என் நடிப்பு பிடிச்சிருந்தது. தற்செயலா அடுத்து சில படங்களும் நல்லபடியா அமைஞ்சது. ஆனா, ரொம்ப நாள் இதே மாதிரி காமெடி பண்ணிட்டு இருக்க முடியாதுன்னு தோணுச்சு. 'எல்.கே.ஜி' படத்துக்குக் கதை எழுதினேன். அதுல நிறைய கத்துக்கிட்டேன். அந்த அனுபவத்தாலதான் இப்போ டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன். இது எதையுமே நான் பிளான் பண்ணலை. பிளான் இருந்தால் நமக்கு நாமே டார்கெட் வெச்சுப்போம். டார்கெட் வெச்சா, அதைத் தாண்டிப் போக முடியும்னாலும் போக மாட்டோம். டார்கெட் பிரஷரைத்தான் கொடுக்கும். வேலை செய்யும்போது அதை செமையா செஞ்சிட்டாலே போதும். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.''

ஆர்.ஜே.பாலாஜியின் நேர்காணலை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "வெற்றிடத்தை யோகிபாபு நிரப்பிவிட்டார்!" https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-actor-rj-balaji

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு