Published:Updated:

``ஆக்‌ஷன் இமேஜ்..." "வெயிட்டான சப்ஜெக்ட்!" - 'டக்கர்' நாயகன், 'ஹீரோ' நாயகி ஷேரிங்ஸ்

டக்கர்
டக்கர்

கதையின் முதல் பாதி சொல்லிட்டிருக்கும் போதே, 'படத்துல நடிக்குறேன்'னு சொல்லிட்டேன். அந்த அளவுக்கு முதல் பாதி ரொம்ப வெயிட்டான சப்ஜெக்ட்டா இருந்தது.

''ரொமான்டிக் ஹீரோ, சாக்லேட் பாய் இமேஜை மாத்த நினைக்கிறேன்னு நிறைய பேட்டிகள்ல சொல்றீங்க. ஆனா ரொமான்டிக் சப்ஜெக்ட்ல நடிக்கிறீங்களே?''

" 'பாய்ஸ்', 'ஆயுத எழுத்து'ன்னு நடிச்சதனால வந்த இமேஜ் அது. நானா அந்த இமேஜைத் தேடிப்போனது கிடையாது. ஆனா, அது ரொம்ப வருஷமா என்கூடவே ஒட்டிக்கிட்டு இருக்கு. அந்த இமேஜை மாத்தணும்னு நான் ரொம்ப மெனக்கெடலை. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டணும்னு நினைக்கிறேன். 'டக்கர்' படத்துல நடிக்கிறதனால மீண்டும் ரொமான்டிக் ஹீரோ இமேஜ் வந்திடுமான்னு கேட்டா, நிச்சயம் இல்லைன்னுதான் சொல்லுவேன். காரணம், இதுவரை நான் பண்ணுன ரொமான்டிக் படங்களுடைய சின்ன சாயல்கூட இதுல இருக்காது. அதனாலதான் இதுல நடிக்கவே சம்மதிச்சேன்.

இந்தப் படத்துல ஆக்‌ஷனையும் ரொமான்ஸையும் சரிசமமா வெச்சிருக்கார் இயக்குநர் கார்த்திக். எந்த இடத்திலும் எதார்த்தம் மிஸ் ஆகிடக்கூடாதுன்றதுல நான் ரொம்பவே கவனமா இருப்பேன். என் கரியர்ல ஆக்‌ஷன் போர்ஷன்களும் பண்ணியிருக்கேன். ஆனா, ஆக்‌ஷன் இமேஜ் எனக்கு வந்ததில்லை. இந்தப் படத்துல இருக்கிற அந்த கேரக்டர் மக்களோடு பொருந்திப்போனா நிச்சயமா எனக்கு ஆக்‌ஷன் ஹீரோவுக்கான இமேஜ் உருவாகும்னு நினைக்கிறேன். நான் இப்போ ஆக்‌ஷன் ஹீரோ."

``ஆக்‌ஷன் இமேஜ்..." "வெயிட்டான சப்ஜெக்ட்!" - 'டக்கர்' நாயகன், 'ஹீரோ' நாயகி ஷேரிங்ஸ்

- " 'டக்கர்.' இது ஒரு ரொமான்டிக் ஆக்‌ஷன் படம். இரண்டு தனித்துவமான கேரக்டர்களுக்கு இடையே நடக்குற கதை. சமீபத்தில் வந்த எந்தப் படங்களும் இந்த ஜானரைத் தொடலைன்னு நினைக்கிறேன். அதனால ஆடியன்ஸுக்கு இது ரொம்பவே ஃப்ரெஷ்ஷா இருக்கும்" - உற்சாகமாகப் பேசும் நடிகர் சித்தார்த் அளித்த சிறப்புப் பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-actor-siddharth

"தெலுங்கு, மலையாள சினிமாவுல என்ட்ரி ஆயாச்சு. அடுத்ததா, தமிழ்ல நல்ல கேரக்டர்ல நடிக்கணும்னு காத்துட்டிருந்தேன். அப்போதான் மித்ரன் சாரை மீட் பண்ணினேன்.

கதையின் முதல் பாதி சொல்லிட்டிருக்கும் போதே, 'படத்துல நடிக்குறேன்'னு சொல்லிட்டேன். அந்த அளவுக்கு முதல் பாதி ரொம்ப வெயிட்டான சப்ஜெக்ட்டா இருந்தது. மித்ரன் சார் கதை சொல்ற ஸ்டைல் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். கதை சொல்றதையும் தாண்டி, காட்சிகளை நடித்துக்காட்டுவார். நான் நினைச்ச மாதிரியே 'ஹீரோ' படம் அமைஞ்சிருக்கு. இப்போதைய சூழலுக்கு ஒரு நல்ல மெசேஜோட இந்தப் படம் வந்திருக்கு. இந்தியா முழுமைக்குமான கதை இது."

``ஆக்‌ஷன் இமேஜ்..." "வெயிட்டான சப்ஜெக்ட்!" - 'டக்கர்' நாயகன், 'ஹீரோ' நாயகி ஷேரிங்ஸ்

"சிவகார்த்திகேயன், அர்ஜுன்னு தேர்ந்த நடிகர்கள். ஷூட்டிங் ஸ்பாட் எப்படியிருக்கும்?''

"சிவகார்த்திகேயன் சாரோட தீவிர ரசிகை நான். அவரை எப்போதும் எண்டர்டெயினராதான் பார்த்திருக்கேன். ஆனா, இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை இயக்குநராகவும் பார்த்தேன். மித்ரன் சாருடன் சிவகார்த்திகேயன் சாரும் எனக்கு நடிப்பு கத்துக்கொடுத்தார்.

படத்துல அர்ஜுன் சாருக்கும் எனக்கும் காம்பினேஷன் காட்சிகள் இல்லை. இருந்தும் அவரோட போர்ஷனை என்கிட்ட போட்டுக் காட்டுவாங்க. இந்த டீம் செம்ம ஃபன். டீசர் மிக்ஸிங் அப்போ யுவன் சாரோட ஸ்டூடியோவுல இருந்தேன். ரொம்ப உற்சாகமா இருந்துச்சு!"

- அப்பா பிரியதர்ஷன் இயக்குநர்... அம்மா லிசி நடிகை... முதல் படத்திலேயே ஜூனியர் நாகர்ஜுனாவுடன் ஜோடி. தெலுங்கில் 'ஹலோ' சொன்ன, கல்யாணி பிரியதர்ஷன், தற்போது தமிழுக்கு 'ஹீரோ' சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயின் ஆகிறார். அவர் உடனான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-actress-kalyani-priyadarshan

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு