Published:Updated:

Samantha: `மயோசைட்டிஸ்' (Myositis) காக சிகிச்சை பெற தென் கொரியா செல்லும் நடிகை சமந்தா

Samantha |சமந்தா
News
Samantha |சமந்தா

`மயோசைட்டிஸ்' - காக சிகிச்சை பெற நடிகை சமந்தா தென் கொரியா செல்கிறார்.

Published:Updated:

Samantha: `மயோசைட்டிஸ்' (Myositis) காக சிகிச்சை பெற தென் கொரியா செல்லும் நடிகை சமந்தா

`மயோசைட்டிஸ்' - காக சிகிச்சை பெற நடிகை சமந்தா தென் கொரியா செல்கிறார்.

Samantha |சமந்தா
News
Samantha |சமந்தா

பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா சமீப காலமாக 'மயோசைட்டிஸ்' ஆல் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்த பாதிப்பக்கென சிகிச்சை பெற ஐதராபாத் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். ஆனால், சிகிச்சையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. எதிர்பார்த்ததைவிட மிகவும் மெதுவாக சிகிச்சை பலனலித்தது. இதனால் சமந்தா ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள திட்டமிட்டார். ஆனால் அத்திட்டத்தை மாற்றிக்கொண்டு இப்போது தென்கொரியா செல்ல முடிவு செய்துள்ளார். தென்கொரியாவில் சில மாதங்கள் தங்கி இருந்து நவீன சிகிச்சை எடுத்துக்கொள்ள சமந்தா முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. முழுமையாக குணமடைந்த பிறகுதான் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்ப திட்டமிட்டு இருப்பதாகவும், வந்தவுடன் குஷி படத்தில் நடிக்க இருக்கிறார்.

சமந்தா |Samantha
சமந்தா |Samantha

முன்னதாக ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறித்து அளித்திருந்த பேட்டியில், தன்னால் படுக்கையில் இருந்து சில நாட்கள் எழுந்திருக்கவே முடியவில்லை என்றும், அதனை எதிர்த்து போராட தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகளில் பார்த்தேன். ஆனால் விரைவில் இறக்க மாட்டேன். நான் எப்போதும் போராட்டக்காரி. தொடர்ந்து போராடுவேன் என்றும் சமந்தா தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

மயோசைட்டிஸ் என்பது தசைகளின் இன்ஃப்ளமேஷன், அதாவது வீக்கம். இது பரவலாக காணப்படுகிற பிரச்னை அல்ல. சற்றே அரியவகை பாதிப்புதான். தசைகளில் ஏற்படும் இந்த வீக்கம் பல காரணங்களால் வரலாம். அவர் விரைவில் குணமடையவேண்டும் என்று சோசியல் மீடியாவில் குறிப்பிட்டுள்ளனர்.