Published:Updated:

`பணமில்லை. அரசு ஆஸ்பத்திரியாது இருக்கே!' - வருத்தத்தில் நடிகை ஷர்மிளா

நடிகை ஷர்மிளா
நடிகை ஷர்மிளா

நல்லா சம்பாதிச்சவங்க ஆடம்பர வாழ்க்கையிலேயே காசையெல்லாம் கரைச்சிட்டாங்க. சில மாதங்களுக்கு முன்னாடி கூட, `பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாம கஷ்டப்படறாங்க'னு நியூஸ் வந்தது.

தன்னுடைய ஐந்து வயதில் தொடங்கி, கிட்டதட்ட 40 ஆண்டுகளாக நடித்து வருகிறவர். மலையாள சினிமாக்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். தமிழிலும் நிறைய படங்களில் இவரை பார்த்திருப்பீர்கள். `அப்படிப்பட்ட ஒருவர் உடல்நலப் பிரச்னைக்கு தனியார் மருத்துவமனையில் பார்க்க பணமில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துச் சென்றார்' என்றால் நம்புவீர்களா?

நடிகை ஷர்மிளா
நடிகை ஷர்மிளா

தகவலைக் கேள்விப்பட்டபோது என்னாலும் நம்ப முடியவில்லை. ஆனால், நடந்தது நிஜம். ஆர்த்தோ பிரச்னைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துச் சென்ற அந்த நடிகை, இதுவரை சுமார் 80 படங்கள் வரை நடித்திருக்கும் நடிகை ஷர்மிளா. `காபூல்வாலா' மலையாளப் படத்தின் ஹீரோயின். தமிழில் `நல்லதொரு குடும்பம்', `உன்னைக் கண் தேடுதே' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சட்டென அடையாளம் காண வேண்டுமெனில் விக்ரம் பிரபு நடித்த `இவன் வேற மாதிரி'யில் ஹீரோயினுக்கு அம்மாவாக வருவாரே அவரேதான். மருத்துவமனை ஏரியாவில் பேசினேன்.

``வீட்டுல வழுக்கி விழுந்ததுல கால்ல அடிபட்டு சிகிச்சைக்காக வந்தாங்க. காயம் பலமா இருந்ததால அட்மிட்டாகி ட்ரீட்மென்ட் எடுக்கறதுதான் நல்லதுனு சொன்னோம். முதல்ல தயங்கினவங்க, பிறகு சம்மதிச்சாங்க. முதல்ல அவங்க நடிகைன்னு எங்களுக்குத் தெரியலை. அட்மிட்டான பிறகுதான் ஆஸ்பிடல்ல இருந்த சிலர் அவங்களைக் கண்டுபிடிச்சிட்டாங்க. அப்படித்தான் எங்களுக்கும் தெரிஞ்சது. சிகிச்சை எடுத்திட்டிருந்த நாள்கள்ல, அக்கம்பக்கத்துல அதிகமாப் பேசிக்கவும் இல்லை. அவங்க கூட அவங்க அம்மா வந்திருந்தாங்க. அவங்களும் ஏற்கெனவே மூட்டு வலி பிரச்னைக்காக இங்க வந்து சிகிச்சை எடுக்கிறவங்கதானாம். சினிமா நடிகைன்னாலும், அவங்க இங்க இருந்தவரைக்கும் அவங்களைப் பார்க்கறதுக்குன்னு நடிகர் நடிகைகள் யாரும் வந்தமாதிரி தெரியலை'' என்றார் செவிலியர் ஒருவர்.

ஷர்மிளா
ஷர்மிளா

ஷர்மிளா குறித்து திரையுல வட்டாரத்தில் விசாரித்தேன்.

``கேரளாவுல பிறந்தாங்க. குழந்தைப் பருவத்துல இருந்தே நடிக்கிறவங்கதான். மல்லுவுட்ல நிறைய சர்ச்சைகள்ல இவர் பேர் அடிபட்டிருக்கு. பாபு ஆண்டனியுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருந்தாங்க. பிறகு இரண்டு பேருக்கும் இடையில் பிரச்னை பெரிசாகி பிரிஞ்சிட்டாங்க. அடுத்ததா டிவி நடிகர் கிஷோருடன் கல்யாணம் நடந்தது. ஆனால், அந்தக் கல்யாணமும் விவாகரத்துல முடிஞ்சிடுச்சு. அந்தச் சமயத்துல கிஷோரும் இவங்களும் பரஸ்பரம் நிறைய புகார்களைச் சொல்லிக்கிட்டாங்க. அதன் பிறகுதான் ராஜேஷ்ங்கிறவருடன் திருமணம் நடந்தது. இப்ப சென்னையிலதான் வசிக்கிறாங்க. சினிமா வாய்ப்புகளும் கிடைக்காம இல்லை. ஆனாலும் என்னவோ தெரியலை, கஷ்டப்படறதாகவே தெரிய வருது. நல்லாச் சம்பாதிச்சவங்க ஆடம்பர வாழ்க்கையிலேயே காசையெல்லாம் கரைச்சிட்டாங்க. சில மாதங்களுக்கு முன்னாடி கூட, `பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாம கஷ்டப்படறாங்க'னு சமூக வலைதளங்கள்ல நியூஸ் வந்தது. நடிகர் விஷால் முயற்சியில நடிகர் சங்கம் அவங்க பையனின் படிப்புக்கு உதவுறதாக் கூடச் சொல்றாங்க'' என்றார்கள் ஷர்மிளாவைத் தெரிந்தவர்கள்.

`சமீபமா படங்கள்ல நடிச்சிட்டுதான் இருக்காங்க. ஆனா நடிச்ச நிறைய படங்கள் ரிலீசாகலை. அதனால் கூடப் பணக் கஷ்டம் இருக்கலாம். அதேநேரம், நட்பு வட்டத்துல இருக்கிற சிலர் இப்பவும் உதவிட்டு வர்றாங்க' என்கிறார்கள் இன்னும் சிலர்.

ஷர்மிளா
ஷர்மிளா

ஷர்மிளாவையே தொடர்புகொண்டு கேட்டபோது, "ஆர்த்தோ பிரச்னைக்காக அம்மாவும் நானும் ட்ரிட்மென்டுக்குப் போனது நிஜம்தான். அங்க நடிகைன்னு சொன்னா தர்மசங்கடமாயிடும். பணமில்லாதவங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியாச்சும் இருக்கே!" என்றவர், இது தொடர்பாக மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை' என முடித்துக்கொண்டார்.

``நான் எடுத்த முடிவு என்னுடைய டீமையும் பாதிச்சிடுச்சு!"  - ஃபைனலி பாரத் ஓபன் டாக்
அடுத்த கட்டுரைக்கு