Published:Updated:

`` `சில்லுக்கருப்பட்டி' அமுதினி எனக்கு ரொம்பவே  ஸ்பெஷல்! ஏன்னா..." - சீக்ரெட் சொல்லும் சுனைனா 

சுனைனா
சுனைனா

சுனைனாவுடன் ஒரு ஸ்வீட் சாட்!

`` `சில்லுக்கருப்பட்டி' படம் வெளிய வர்றதுக்கு முன்னாடி, இந்த மாதிரி ஒரு படம் இருக்குனுகூட யாருக்கும் பெருசா தெரியாது. ஆனா, இப்போ இந்தப் படத்துக்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸைப் பார்க்கும்போது, எல்லாருக்குமே சந்தோஷம்" எனப் புன்னகைக்கிறார், சுனைனா.

சுனைனா
சுனைனா

`சில்லுக்கருப்பட்டி’ ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?

சில்லுக்கருப்பட்டி
சில்லுக்கருப்பட்டி

``இந்தப் படத்தோட இயக்குநர் ஹலிதா, என் போர்ஷன் கதையை என்கிட்ட சொல்ல வரும்போதே, மத்த மூணு கதைகளையும் முன்னாடியே படமா முடிச்சிட்டாங்க. அதனால, கதை சொல்லும்போது ஒரு ஐடியாவுக்காக மத்த மூணு படங்களையும் பார்க்கச் சொன்னாங்க. ஆனா, அதோட தாக்கம் இருக்கக் கூடாதுனு தவிர்த்துட்டேன். மொத்த படத்தையும் நான் ஆடியன்ஸோடதான் பார்த்தேன். படம் முடிச்சதும் எல்லோரும் எழுந்து நின்னு க்ளாப்ஸ் பண்ணிட்டுப் போனாங்க. இந்த மொத்த கிரெடிட்ஸும் ஹலிதாவுக்குதான் போகணும்."

`` `சில்லுக்கருப்பட்டி' படத்தோட மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். உங்களுக்குப் பிடிச்ச வசனம் எது?"

சுனைனா
சுனைனா

``எனக்குப் பிடிச்ச வசனம், `ஹே அம்மு' போர்ஷன்ல சமுத்திரக்கனி சார் பேசுறதுதான். `மத்தவங்க எல்லாரும் தலைலதான் முடியைப் பாக்குறாங்க. ஆனா, நான் தினமும் சாப்பாட்டுல உன் முடிய பாக்கறேன்'னு சார் அந்த வசனத்தைப் பேசும்போது, பயங்கரமா சிரிச்சுட்டேன். நான் மட்டுமில்ல, தியேட்டர்ல ஆடியன்ஸும் பயங்கரமா அந்த சீனை என்ஜாய் பண்ணிப் பார்த்தாங்க. இது தவிர, `பிங்க் பேக்'ல வர்ற வசனங்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்."

``சமுத்திரக்கனிகூட நடிச்ச அனுபவம்?"

சுனைனா
சுனைனா

``சமுத்திரக்கனி சார் கூட ஆன் ஸ்கீரின்ல நடிக்க எனக்கு எப்பவுமே பயம்தான். ஏன்னா, அவர் ரொம்ப வேகமா பேசுவார். நான் இப்போதான் தமிழ் கத்துக்கிட்டிருக்கேன். அதனால, அவர்கூட நடிக்கும்போது வசனங்கள் எப்படிப் பேசப் போறோமோங்கிற பயம் இருந்தது. ஆனா, ஆஃப் ஸ்கீரின்ல அவர் பயங்கர ஜாலியான ஆள்."

`` `காதலில் விழுந்தேன்'- மீரா, `நீர்ப்பறவை'- எஸ்தர், `சில்லுக்கருப்பட்டி'- அமுதினி இப்படி உங்களுடைய கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தது. ஆனா, பர்சனலா இதுல உங்களுக்குப் பிடிச்ச ரோல் எது?"

எஸ்தர் கதாபாத்திரத்தில் சுனைனா
எஸ்தர் கதாபாத்திரத்தில் சுனைனா
நீர்ப்பறவை

``நான் நடிச்ச எல்லா கதாபாத்திரங்களுமே பிடிச்சுப் பண்ணதுதான். ஆனா, பர்சனலா கேட்டீங்கன்னா அமுதினி கேரக்டரைச் சொல்வேன். ஏன்னா, நிறைய பேர் அதைத் தங்களோட பர்சனலா கனெக்ட் பண்ணிக்கிட்டாங்க. அதனால அமுதினி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்."

``அதிகப் படங்கள் நடிக்காதது ஏன்?"

சுனைனா
சுனைனா
Vikatan

`` `நிலா நிலா ஓடி வா', `ஃபிங்கர்டிப்'னு தமிழ், தெலுங்குல வெப் சீரிஸ் நடிச்சிட்டு இருக்கேன். நான், வெப் சீரிஸ் நடிச்சிட்டு இருக்கிற விஷயம் வெளிய நிறைய பேருக்குத் தெரியல. அதனால படங்கள் வாய்ப்பு குறைஞ்சிட்டதா நினைக்கறாங்க. உண்மை என்னன்னா, எனக்கு வெப் சீரிஸுக்குப் பிறகுதான் படங்கள் வாய்ப்பு வர்றது அதிகமாகியிருக்கு. இனி, அடுத்தடுத்து நல்ல படங்களையும், வெப் சீரிஸ்லயும் என்னை அதிகம் பார்க்கலாம்."

அடுத்த கட்டுரைக்கு