Published:Updated:

``ராதிகா மேம் அறை விட்டாங்க; ரம்யா மேம் சோறு போட்டாங்க!'' - ஸ்வேதா

ஸ்வேதா தமிழ் பாரதிராஜன்  
ஸ்வேதா தமிழ் பாரதிராஜன்  

`சூப்பர் மாம்’ ஸ்வேதாவுடன் சின்ன உரையாடல்.

`அண்ணாமலை', `வம்சம்', `மலர்கள்' உள்ளிட்ட சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து சின்னத்திரைக்குள் என்ட்ரியானவர் ஸ்வேதா. `மானாட மயிலாட' சீசன் 1 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர். `சூப்பர் மாம்' நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த ஸ்வேதா, `ரோஜா', `செம்பருத்தி' உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால், திடீரென அந்த சீரியல்களில் அவரைக் காணவில்லை. என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

குடும்பத்தினருடன் ஸ்வேதா
குடும்பத்தினருடன் ஸ்வேதா

" 'சூப்பர் மாம்' நிகழ்ச்சியில டைட்டில் ஜெயிச்ச பிறகு எங்க லைஃப்ல நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு. என் பையன் பேசவேமாட்டானு நினைச்சேன். இப்போ பேச ஆரம்பிச்சிட்டான். அவனுடைய திறமைகள் வெளிப்பட ஆரம்பிச்சிருக்கு. இந்த ஒரு வருடமா என் குடும்பத்தோட நிறைய நேரம் செலவிடுறேன். `சூப்பர் மாம்' டைட்டில் வின் பண்ணதுக்குக் கிடைச்ச பரிசுத் தொகையைக்கூட இன்னும் செலவு பண்ணலை. அவனுக்காகதான் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். அவன் விருப்பப்படி ஏதாச்சும் வாங்கணும்.''

``சீரியல் இண்டஸ்ட்ரி முன்னாடி மாதிரி இல்லை. `அண்ணாமலை' சீரியல்ல நடிச்சிருந்த நெகட்டிவ் ரோல் மூலமாதான் என்னுடைய சின்னத்திரை பயணம் ஆரம்பிச்சிச்சு. ராதிகா மேடம்கூட நடிச்சதை மறக்கவே முடியாது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுப்பாங்க. ஒரு காட்சியில் அவங்க என்னை அடிக்கணும். நான் சும்மா அடிக்கிற மாதிரி நடிப்பாங்கனு அவங்க முன்னாடி நின்னிட்டிருந்தேன். இயக்குநர் `ஆக்‌ஷன்'னு சொன்னதும் உண்மையாவே அடிச்சிட்டாங்க. நான் அப்படியே அதிர்ச்சியில ஆடிப் போயிட்டேன். அப்புறம் அந்தக் காட்சி நல்லா வந்திருந்ததா எல்லோரும் பாராட்டினாங்க. ராதிகா மேம் வந்து ஸாரி கேட்டாங்க. அதுக்கப்புறம்தான், சின்ன விஷயத்துக்குக்கூட அவங்க எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பாங்கனு புரிஞ்சது. அந்த ஒரு காட்சியை என் லைஃப் முழுக்க மறக்கவேமாட்டேன்."

ஸ்வேதா
ஸ்வேதா
முடிகிறதா ஈஸ்வர் - மகாலட்சுமியின் `தேவதையை கண்டேன்' சீரியல்! பின்னணி என்ன?!

``அதே மாதிரி ரம்யா கிருஷ்ணன் மேம்கூட `வம்சம்' சீரியல்ல நடிச்சதும் செம அனுபவம். அவங்க ரொம்ப நல்லா சமைப்பாங்க. புரொடக்‌ஷன்ல சாப்பாடு ஏற்பாடு பண்ணியிருந்தாலும், கேரவன்ல அவங்களேதான் சமைச்சு சாப்பிடுவாங்க. செட்ல எல்லோருமே ஷேர் பண்ணி சாப்பிடுவோம். சைவம், அசைவம் ரெண்டுமே சூப்பரா சமைப்பாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவுமே சிரிச்ச முகத்தோடு இருப்பாங்க. அதெல்லாம் செம மெமரீஸ். இப்போ வர்ற சீரியல்கள்ல அதிகம் தமிழ் பேசத் தெரியாத நடிகர், நடிகர்கள்தான் நடிக்கிறாங்க. ஏன் இப்படி மாறிடுச்சுனு தெரியலை."

``சூப்பர் மாம் டைட்டில் ஜெயிச்ச பிறகு ரொம்ப கவனமா கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். `செம்பருத்தி' சீரியல்ல அம்மாவா நடிக்கிற வாய்ப்பு வந்தப்போ, கொஞ்சம் தயங்கினேன். என் கணவர்தான், `நடிப்புன்னு வந்துட்டா எதுவா இருந்தாலும் நடிக்கணும்'னு சொன்னார். எனக்கும் சரினு தோணுச்சு. ஆனா, ஏன்னு தெரியலை... அந்தக் கேரக்டரை சீக்கிரமே முடிச்சிட்டாங்க. இப்படித்தான் `ரோஜா' சீரியல்லேயும் பாசிட்டிவ் ரோல் கொடுத்தாங்க."

மகனுடன் ஸ்வேதா
மகனுடன் ஸ்வேதா
`கோபி'யின் `கல்யாண வீடு' சீரியலுக்கு அபராதமா..? திருமுருகனைச் சோதித்த 2019

``முக்கியமான கதாபாத்திரம்தான். ஆனா, திடீர்னு அந்த ரோலையும் அப்படியே விட்டுட்டாங்க. என்கிட்ட ஒண்ணுமே சொல்லலை. நான் கேட்டதுக்கும் சரியா பதில் சொல்லலை. நானும் ஃப்ரியா விட்டுட்டேன்."

``வாய்ப்புகள் வந்தாலும் சரி, வரலைனாலும் சரி, நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருப்பேன். நிறைய படங்கள் பார்ப்பேன். எனக்கு சமைக்கிறது ரொம்பப் பிடிக்கும். "

ஸ்வேதா தமிழ் பாரதிராஜன்
ஸ்வேதா தமிழ் பாரதிராஜன்

``என் குழந்தைகளுக்கு பிடிச்சதை சமைச்சுக் கொடுக்கிறதுல இருக்கிற மகிழ்ச்சி வேற எதுல இருந்திட முடியும் சொல்லுங்க. இப்போ ஒரு சீரியல்ல நல்ல ரோல்ல கமிட் ஆகியிருக்கேன். சைக்கோ மாதிரி ரோல்ல நடிக்கணும்ங்கிறது நீண்ட நாள் கனவு. சீக்கிரமே நடக்கும்னு நம்புறேன்’’ என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு