Published:Updated:

``அந்த ஏக்கமும் தவிப்பும்தான் கோபமா வெடிக்குது!'' - மனம்விட்டுப் பேசும் வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார் ( படம்: ப.பிரியங்கா / விகடன் )

பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் எழுதின மெயில் என் ஃபேமிலியைத் தவிர யாருக்குமே தெரியாமப் போயிடுச்சு. இப்போ, இந்தக் கட்டுரையைப் படிச்சிட்டிருக்கிற அத்தனை பேர் சாட்சியா, என் குடும்பத்துக்கு நான் சொல்ல விரும்புறதைச் சொல்லிடுறேன்.

வனிதா விஜயகுமார், சில வாரங்களுக்கு முன் அவரின் தம்பி, நடிகர் அருண் விஜய்-யின் பிறந்தநாள் போஸ்ட் ஒன்றில், `உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றாலும் எனக்கு உன்னைப் பிடிக்கும். ஹேப்பி பர்த்டே அருண்விஜய்' என்று கமென்ட் செய்திருந்தார். சில காலமாக, வனிதாவிடம் தன் உறவுகளைப் பிரிந்திருக்கிற பரிதவிப்பும் ஏக்கமும் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

வனிதாவின் சகோதரி ப்ரீத்தா, சமீபத்தில் தன் இன்ஸ்ட்டா அக்கவுன்ட்டில் போஸ்ட் செய்திருந்த ஃபேமிலி போட்டோக்களுக்கு கமென்ட் செய்தவர்களில் பலர், `வனிதா விஜயகுமார் எங்கே?' என ஆதங்கத்துடன் கேட்டிருந்தார்கள். 'பிக்பாஸ்' வீட்டில் வனிதாவின் இயல்பு பிடித்துப்போனவர்களின் எதிரொலி அது. வனிதாவை சந்தித்தோம். தன் அப்பாவிடமும் சகோதரர், சகோதரிகளிடமும் தான் சொல்ல விரும்புவதைக் கண்ணீரும் கோபமும் கலந்து, படபடவென கொட்டித் தீர்த்தார்.

``யெஸ்... பத்து வருஷத்துக்கு முன்னால ரொம்ப எமோஷனலாகி நிறைய வார்த்தைகளைப் பேசிட்டேன். அதை நான் வெளிப்படுத்திய விதமும் இடமும் தப்புதான். அதுக்காக நான் மொத்தக் குடும்பத்துக்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுட்டேன். என் குழந்தை மேல எனக்கிருந்த பாசம் என் கண்ணை மறைச்சிடுச்சுங்கிற என் நிலைமையை விளக்கி மன்னிப்பு கேட்டு, என் பிறந்த வீட்ல இருக்கிற அத்தனை பேருக்கும் ஒரு மெயில் அனுப்பினேன். அப்பாகிட்ட நேருக்கு நேரா பேசி என் நிலைமையைப் புரியவெச்சேன்.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

அப்போ எங்கம்மா உயிரோட இருந்தாங்க. அதனால, என் பிரச்னையைப் புரிஞ்சுக்கிட்டு நிறைய உணர்வுப் போராட்டங்களுக்கு மத்தியில என்னை மறுபடியும் குடும்பத்தோடு சேர்க்க முயற்சி செஞ்சாங்க. அம்மா அம்மாதாங்க. என்னைப் புரிஞ்சுகிட்ட, எனக்காகப் பரிஞ்சு பேசின அம்மாவையும் இழந்துட்டேன். என்கிட்ட பேசினா, என்னை வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டா, அப்பாவுக்கு சில சங்கடங்கள் வரலாம்'' என்றவர், ஒரு நிமிடம் நிதானித்து மறுபடியும் பேச ஆரம்பித்தார்.

``நான் என் குடும்பத்தோடு சண்டைபோட்டது மட்டும்தானே எல்லாருக்கும் தெரியும்? ஆனா, அதுக்காக நான் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டது இன்னிவரைக்கும் யாருக்கும் தெரியாது. 10 வருஷத்துக்கு முன்னாடி நான் அனுப்பின அந்த மெயிலுக்கு இன்னமும் எனக்கு பதில் கிடைக்கல. உங்க வீடுகள்ல எல்லாம் யாராச்சும் தப்பு பண்ணினா, அவங்க மேல கோபப்படுவீங்க, தண்டிப்பீங்க. ஆனா, இனி நீ வேண்டவே வேண்டாம்னு சொல்லிடுவீங்களா? ஆனா எங்க வீட்டுல...

Vanitha Vijayakumar
Vanitha Vijayakumar

`வனிதா நேத்து நல்லாத்தானே பேசினா... இன்னிக்கு ஏன் கோபப்படறா?' நிறைய பேருக்கு குழப்பம் வரும். நான், என் குடும்பத்து மேல கோபப்படுறேன், வருத்தப்படுறேன், மன்னிப்பு கேட்குறேன், உருகுகிறேன், அவங்க எல்லார்மேலயும் உயிரையே வெச்சிருக்கேன். இதையெல்லாம் நான் வெளிப்படையா செய்றேன். ஆனா, அந்தப் பக்கமிருந்து அன்பாகூட வேண்டாம், என்னைத் திட்டியாவது ஒரு ரிப்ளை பண்ணலாம் இல்லையா..? அதுகூட எனக்கு கிடைக்காதப்போதான், உருகின மறுநாளே அவங்கமேல கோபப்படறேன். எல்லாத்துக்கும் மேல, நான் ரொம்ப டிப்ரெஷன்ல இருக்கேன். எந்த சப்போர்ட்டும் இல்லாம என்னை எப்படி சரிசெஞ்சுக்கிறதுனு எனக்கும் புரியல.

என்னை மாதிரி வாழ்க்கையில தனியா போராடுற பெண்களுக்கு அப்பா, தங்கை, அண்ணி, நாத்தனார்னு ஃபேமிலி சப்போர்ட் ரொம்ப ரொம்பத் தேவை. அது கிடைக்காம நான் கஷ்டப்படுற சந்தர்ப்பங்கள்லதான் என்னோட ஸ்ட்ரெஸ் லெவல் அதிகமாகிடுது. நான் கோபப்படுற அந்த நிமிஷத்துக்கு முன்னாடி வரைக்கும் என் அப்பா மேல, ப்ரீத்தா மேல, ஶ்ரீ பாப்பா மேல நான் அன்பாத்தான் இருக்கேன். ஆனா பிரச்னைகள் வர்றப்போ, என் குடும்பம் என்கூட இல்லையேங்கிற ஏக்கத்துல கோபமா வெளிப்படுத்திடுறேன். நான் என்ன செய்ய...'' என்பவரின் கண்கள் கலங்கி குரல் உடைகிறது.

Vanitha Vijayakumar
Vanitha Vijayakumar
``ஸ்ட்ரெஸ் அதிகமாகுறப்போ சிலர் கோபப்படுவாங்க, சிலர் கத்துவாங்க, சிலர் அழுவாங்க. நான் இதுல எல்லாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரீமா இருக்கலாம். ஆனாலும், நானும் மனுஷிதானே..?
வனிதா விஜயகுமார்

என் அப்பாவும் தங்கைகளும், என்கூட பேசாமலேயே இருந்துட்டா பிரச்னை தீர்ந்துடும்னு நினைக்கிறாங்க. அப்படி நடக்கவே நடக்காது. நான் அவங்களைத் திட்டினதுக்கு, அவங்க என்னைத் திருப்பி திட்டட்டும். அடிச்சாகூட தப்பில்ல. ஆனா, என்னோட உணர்வுகளுக்கு எந்த ரியாக்‌ஷனுமே காட்டாம இருக்கிறது நியாயமே இல்ல. எவ்வளவு கொடுமையான தண்டனை, வலி தெரியுமா அது?

பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் எழுதின மெயில் என் ஃபேமிலியைத் தவிர யாருக்குமே தெரியாமப் போயிடுச்சு. இப்போ, இந்தக் கட்டுரையைப் படிச்சிட்டிருக்கிற அத்தனை பேர் சாட்சியா, என் குடும்பத்துக்கு நான் சொல்ல விரும்புறதைச் சொல்லிடுறேன்.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

ப்ரீத்தா... ஶ்ரீ பாப்பா... (ஶ்ரீதேவி) உங்க ரெண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. எனக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமையலையேனு நான் ஒருநாளும் உங்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டதில்ல. சந்தோஷம்தான்பட்டிருக்கேன். ஏன்னா, நம்ம மூணு பேர்ல யாரால, எல்லாக் கஷ்டங்களையும் எதிர்த்துப் போராட முடியும், யாரால கஷ்டங்களிலிருந்து எல்லாம் போராடி மீண்டு வர முடியும்னு கடவுளுக்குத் தெரியும். அதனாலதான், உங்களுக்காகவும் சேர்த்து அத்தனை கஷ்டங்களையும் நான் தாங்கிக்கிட்டேன். இதெல்லாம் உங்க மனசாட்சிக்கு தெரியும்.

"நான் செஞ்ச தப்புக்கு என்னைத் திருப்பி திட்டுங்க. அடிச்சாக்கூட தப்பில்ல. ஆனா, என்னோட உணர்வுகளுக்கு எந்த ரியாக்‌ஷனுமே...

Posted by Aval Vikatan on Saturday, December 7, 2019

அப்பா, உங்க மேல எனக்குக் கோபம் வந்தாலும் பாசத்தை நான் விட்டுடலை, விட முடியலை. நான் உங்க தலைச்சன் பொண்ணு. உங்க ரத்தம்ப்பா. எத்தனை வயசானாலும் நான் உங்களுக்கு குழந்தைதானேப்பா? உங்களுக்கு என் மேல பாசமே இல்லையா? பாசமெல்லாம் மரத்துப்போச்சா? என்னை ஒதுக்கிவைக்க உங்களுக்கு எப்படி மனசு வருது? இதயமில்லாம நடந்துக்கிறீங்கப்பா.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்
"என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கே புரியல!" - மனம் திறக்கும் வனிதா

கொஞ்ச நாள் `பிக்பாஸ்'ல என்கூட இருந்தவங்களுக்கே என்னைப் பத்தி புரிஞ்சுடுச்சு. ஆனா, என்னைப் பெத்த உங்களுக்கும் என் கூட பிறந்தவங்களுக்கும் என்னை எப்படிப் புரியாம போச்சு? `வனிதா இல்லாத 'பிக்பாஸ்' வீடு, வீடாவே இல்லை'னு அந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டவங்க, பார்த்தவங்க எல்லாரும் சொன்னாங்க. நம்ம வீட்ல, நான் உங்க எல்லார்கூடவும் 30 வருஷம் ஒண்ணா வாழ்ந்திருக்கேன். ஒருநாள்கூட உங்களுக்கு, வனிதா இந்த வீட்டுல இல்லையேனு தோணவே இல்லையா? என்னை எல்லாரும் மறந்தே போயிட்டீங்களா?

ஒரு பெண், வாழ்க்கையில பார்க்கக்கூடாத அத்தனை பிரச்னைகளையும் நான் பார்த்துட்டேன். உங்க யாரோட துணையுமில்லாம போராடிக்கிட்டிருக்கேன்னா, என் குழந்தைங்க மேல நான் வெச்சிருக்கிற பாசம் மட்டும்தான் காரணம். அதையும் பிடுங்குறதுக்கு கோர்ட், கேஸ்னு போட்டு சிலர் என்னைக் கஷ்டப்படுத்துறாங்க'' என்றவர், கலங்கிய கண்களைத் துடைத்தபடி பேச ஆரம்பிக்கிறார்.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

``ப்ரீத்தா, உனக்கு ஒண்ணு தெரியுமா? என் பொண்ணு ஜோவிகாவை நான் அவ பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதைவிட, ப்ரீத்தான்னு கூப்பிட்டதுதான் அதிகம். அவ அப்படியே உன்னை மாதிரியே இருக்கான்னு எல்லாரும் சொல்றாங்க. நான் உன்னைப் பாதுகாத்த மாதிரி, இன்னிக்கு ஜோவிகா என்னைப் பார்த்துட்டிருக்கா'' என்றவர், அடுத்து இளைய தங்கை ஶ்ரீதேவிக்கான வார்த்தைகளை மனதுக்குள் தேடித் தேடி எடுத்துப் பேசுகிறார்.

``ஶ்ரீ பாப்பா, இன்னைக்கு நீ கணவர் , குழந்தைகள்னு சந்தோஷமா இருக்கிறதுக்கு இந்த வனிதா அக்காவும்தான் காரணம்ங்கிறதை நெனச்சுப் பார்த்திருந்தீன்னா, நமக்குள்ள இந்த இடைவெளி வந்திருக்காது. உன்னையும் ப்ரீத்தாவையும் நினைச்சா ஒரு விதத்துல எனக்குப் பெருமைதான். இப்போ என்னைவிட நீங்க ரெண்டு பேரும் ஸ்ட்ராங்கா இருக்கீங்க. ஆனா, என்னை மறந்துட்டு இருக்கிறதை நெனச்சாதான் ஒரு நேரம் அழுகை வருது, இன்னொரு நேரம் கோவம் வந்துடுது. இன்ஸ்டாவுல உங்க போட்டோஸ் எல்லாம் பாக்குறேன். உறவுகள், நட்புகள்னு எல்லோர்கூடவும் இருக்கீங்க. சொந்த அக்காவை மறந்துட்டீங்களே பாப்பா? நீங்க ஃபேமிலி போட்டோ போடும்போதெல்லாம், இப்போ என்னோட சேர்ந்து மக்களும், `வனிதா இதுல இல்லையே'னு நினைக்க ஆரம்பிச்சிருக்காங்க. உங்களுக்கு மட்டும் அது தோணவே தோணாதா?

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

கடைசியா ஒரு விஷயம், நீங்க வேணாம்னு நினைச்சாலும் வெறுத்தாலும், இந்த வனிதா விஜயகுமார் உங்களை நேசிச்சிட்டுத்தான் இருப்பா. யெஸ், நான் வனிதா விஜயகுமார். சாகும் வரைக்கும் வனிதா விஜயகுமார்தான். உங்களுக்கு விருப்பமில்லைன்னாலும் வனிதா விஜயகுமார்தான். தட்ஸ் ஆல்.''

அடுத்த கட்டுரைக்கு