Published:Updated:

`மனைவிக்கு வெங்காயக் காதணி! - ட்விங்கிளை ஆச்சர்யப்படுத்திய அக்‌ஷய் குமார்

வெங்காய காதணி
வெங்காய காதணி

கபில் சர்மாவின் நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பி வந்த அக்‌ஷய் குமார் தனது மனைவிக்கு வெங்காயத்தால் செய்யப்பட்ட காதணிகளைப் பரிசளித்துள்ளார்.

இந்தியாவில், இன்றைய டிரெண்டிங் வெங்காயம்தான். சமூக வலைதளங்கள் முதல் நாடாளுமன்றம் வரை வெங்காய விலை ஏற்றம் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. மக்களின் அன்றாட பட்ஜெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் வெங்காய விலை ஏற்றம் குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ், வீடியோக்கள் எனக் கலாய்த்து வருகின்றனர். `நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது’ என்று அரசியல் பிரபலங்களும் நெட்டிசன்களுக்கு கன்டென்டுகளை வழங்கி வருகின்றனர்.

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

வெங்காயம் விலை ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் அக்‌ஷய்குமார் செய்திருக்கும் விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. கபில் ஷர்மாவின் நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பி வந்த அக்‌ஷய் குமார், தனது மனைவிக்கு வெங்காயத்தால் செய்யப்பட்ட காதணிகளைப் பரிசளித்துள்ளார்.

`பாஸ்போர்ட் இருந்தால்தான் நான் இந்தியனா?!’ - அக்‌ஷய் குமார் வருத்தம்

அக்‌ஷயின் பரிசால் நெகிழ்ந்த அவரது மனைவி ட்விங்கிள் கன்னா, இன்ஸ்டாகிராமில், `எனது கணவர் அக்‌ஷய் குமார், கபில் ஷர்மா நிகழ்ச்சியிலிருந்து வந்தபோது, 'இதை அங்கே கரீனாவுக்குக் காண்பித்துக்கொண்டிருந்தார்கள். இது அவரைப் பெரிதாக ஈர்க்கவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால், நிச்சயம் உனக்குப் பிடிக்கும் என்று கொண்டுவந்தேன்' என்றார்.

ட்விங்கிள் கன்னா
ட்விங்கிள் கன்னா

சில நேரங்களில், இப்படி வேடிக்கையான சின்னச் சின்ன விஷயங்கள்கூட நம் இதயத்தைத் தொட்டு விடும்' என்று பதிவிட்டிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு