Published:Updated:

பட்டாசு ஆலை விபத்து: கருணாநிதி இரங்கல்

விகடன் விமர்சனக்குழு
பட்டாசு ஆலை விபத்து: கருணாநிதி இரங்கல்
பட்டாசு ஆலை விபத்து: கருணாநிதி இரங்கல்
பட்டாசு ஆலை விபத்து: கருணாநிதி இரங்கல்

சென்னை: சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக 38 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் இவ்வாறு அடிக்கடி வெடிவிபத்துக்கள் நடைபெறுவதும், அதில் ஏழையெளிய தொழிலாளர்கள் செத்து மடிவதும் தொடர்கதைகளாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து நேற்றிரவே முன்னாள் அமைச்சர், கழக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு விளக்கமாகத் தெரிவித்தார்.

அவரையும், ஏனைய கழக முன்னணியினரையும் நிவாரணப் பணிகளிலே விரைந்து ஈடுபடுமாறு அறிவுறுத்தியிருக்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற விழைவதோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.