Published:Updated:

ஐ.மு.கூட்டணியிலிருந்து மம்தா விலகல்!

விகடன் விமர்சனக்குழு
ஐ.மு.கூட்டணியிலிருந்து மம்தா விலகல்!
ஐ.மு.கூட்டணியிலிருந்து மம்தா விலகல்!

கொல்கத்தா: டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து,காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் விலகியது.அந்த கட்சியைச் சேர்ந்த 7 மத்திய அமைச்சர்களும் 21-ம்  தேதி ராஜினாமா செய்கிறார்கள்.

ஐ.மு.கூட்டணியிலிருந்து மம்தா விலகல்!

டீசல் விலை உயர்வு, சமையல் சிலிண்டருக்கு கட்டுப்பாடு மற்றும் சில்லரை  வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கு அனுமதி ஆகிய மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த மம்தா, இவற்றை மத்தியில் ஆட்சியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 72 மணி நேரத்திற்குள்  திரும்பப்பெறவில்லை என்றால்,கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று   கூறியிருந்தார்.

அவரது கெடு நேற்று முடிவடைந்துள்ள நிலையில்,அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டதால், ஏற்கனவே அறிவித்து இருந்தபடி, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வதற்காக கொல்கத்தாவில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தை கூட்டி மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார்.

இதில் அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் மட்டும் இன்றி மேற்கு வங்காள மாநில அமைச்சர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் 3 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்,ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகுவது என்று முடிவு செய்யப்பட்டது.மேலும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் 21-ம் தேதி ராஜினாமா செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மரியாதை இல்லை

##~~##
இந்த தகவலை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் தெரிவித்த மம்தா பானர்ஜி," மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் எங்களுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை.மத்திய அரசு முடிவு எடுக்கும் போது கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிப்பது கிடையாது.
காங்கிரஸ் தன்னிச்சையாகவே முடிவு எடுக்கிறது.மேற்கு வங்காள மாநிலத்தை மத்திய அரசு பாரபட்சத்துடன் நடத்துகிறது.இப்போது டீசல் விலையை உயர்த்தியது ஏன்?கறுப்பு பணத்தை மீட்டு ஏன் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தக்கூடாது?
தலையை வெட்டி விட்டால் எப்படி உயிர் வாழ்வது? இந்த கூட்டணியில் எங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.எனவே கூட்டணியில் இருந்து நாங்கள் விலகுவது என்று முடிவு செய்து உள்ளோம்.இதைத்தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் 21-ம்  தேதி பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்கள் பதவியின் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்கள்.இப்போதைய சூழ்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை.
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு வாபஸ் பெறுவதோடு, சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் வழங்க வேண்டும். டீசல் விலை உயர்வை 3 ரூபாயாகவோ அல்லது 4 ரூபாயாகவோ குறைக்க வேண்டும். அப்படி செய்தால் மத்திய அரசுக்கு ஆதரவை நீடிப்பது பற்றி பரிசீலிப்போம். அரை மனதுடன் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடியாது.
நிலக்கரி சுரங்க ஊழல் பிரச்சினையை அமுக்குவதற்காகவே சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தது. சில்லரை வணிகத்தில் 50 லட்சம் பேர் உள்ளனர். அந்த துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் அந்த மக்கள் எங்கே போவார்கள்? அவர்களுடைய வாழ்க்கை சீர்குலைந்து விடும்.
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு எனது எதிர்ப்பை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேரடியாகவே தெரிவித்தேன். ஆனால் அதற்கு பலன் இல்லை.
காங்கிரஸ் 'பிளாக்மெயில்' அரசியல்
காங்கிரஸ் கட்சி 'பிளாக்மெயில்' அரசியலில் ஈடுபடுகிறது.கூட்டணி கட்சிகளுடன் ஏதாவது பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் மற்றொரு கட்சியிடம் போய் விடுகிறது. மாயாவதியுடன் பிரச்சினை ஏற்படும்போது,முலாயம் சிங்கிடம் போகிறது.அவருடன் பிரச்னை ஏற்படும்போது,மற்றொரு கட்சியிடம் போகிறது.இப்படித்தான் நடந்து கொள்கிறது.
நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வந்தால் அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பொறுப்பு ஆகாது.இந்த அரசு இன்னும் 3 மாதங்கள் இருக்குமா?அல்லது 6 மாதங்கள் இருக்குமா? என்பது பற்றி எனக்கு தெரியாது.அவர்கள் நம்பகத்தன்மையை இழந்து விட்டார்கள்.எங்களுடன் நட்புறவை பராமரிக்க முடியாதவர்கள்,மற்றவர்களுடன் எப்படி நட்புறவு வைத்துக்கொள்வார்கள்?
மத்தியில் ஒரு கட்சியின் ஆட்சி இல்லை.அரசு பிற கட்சிகளின் ஆதரவை சார்ந்தே இருக்கிறது.ஆனால் மேற்கு வங்காளத்தில் அப்படி அல்ல.எங்களுக்கு தனி மெஜாரிட்டி இருக்கிறது.நாங்கள் யாரையும் சார்ந்து இல்லை.

எதிர்ப்போம்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பென்சன் மசோதாவை கொண்டு வரும்போது அதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.அப்படி எதிர்க்கும் முடிவை நாங்கள் எடுக்காவிட்டால்,பென்சன் துறையிலும் வெளிநாட்டினரை அனுமதித்து விடுவார்கள். அதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது.மக்கள் நலனுக்கு எதிரான எந்த