Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படையினர் மீண்டும் தாக்குதல்!

Vikatan
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படையினர் மீண்டும் தாக்குதல்!
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படையினர் மீண்டும் தாக்குதல்!
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படையினர் மீண்டும் தாக்குதல்!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள்  மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 662 விசைப் படகுகளில், சுமார் 2800-க்கும் மேற்பட்ட  மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள கடல்  பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
 
அப்போது 5 சிறிய கப்பல்களில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக  மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.

பிளாஸ்டிக் பைப்களை கொண்டு மீனவர்களை தாக்கியதாகவும், மீன்பிடி சாதனங்களை  சேதப்படுத்தியதாகவும், மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை மீண்டும்  கடலில் வீசி எறிந்ததுள்ளனர்.

மேலும் 20 மீனவர்களின் படகுகளில் ஏறி, மீன்பிடி சாதனங்கள் மற்றும் கடலில்  வீசப்பட்டு இருந்த வலைகளை அறுந்து எறிந்து கடலில் வீசினர்.

##~~##
இதனால் உயிரோடு திரும்பினால் போதும் என்று பாதியிலேயே தாங்கள் கரைக்கு  திரும்பியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து ராமேஸ்வரம் மீனவர்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Vikatan