Published:Updated:

அடுத்த தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் தலைமை தாங்குவார்: காங்கிரஸ் அறிவிப்பு

விகடன் விமர்சனக்குழு
அடுத்த தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் தலைமை தாங்குவார்: காங்கிரஸ் அறிவிப்பு
அடுத்த தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் தலைமை தாங்குவார்: காங்கிரஸ் அறிவிப்பு
அடுத்த தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் தலைமை தாங்குவார்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்  பிரசாரத்துக்கு ராகுல் காந்தி தலைமை தாங்குவார் என்று காங்கிரஸ் கட்சி  அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ்  செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான பி.சி.சாக்கோ கூறியதாவது:

"கட்சியில் மேலும் அதிக பொறுப்புகளை ராகுல் ஏற்க வேண்டும் என்று கட்சியினர்  தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்தனர். முதலில் தயங்கிய ராகுல், இப்போது அதற்கு  ஒப்புக் கொண்டுள்ளார். 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக்  கூட்டணியின் பிரசாரத்துக்கு அவர் தலைமை தாங்குவார்.

காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டும் என்று கடந்த காலங்களில் சில தலைவர்கள்  வலியுறுத்தினர். எனினும் நாங்கள் கூட்டணி அரசியலின் அவசியத்தை  அங்கீகரித்துள்ளோம்

##~~##
தேர்தலுக்குப் பிறகு, யார் பிரதமர் என்பது விவாதத்துக்கு வரும். அது குறித்து கட்சி  எம்.பி.க்கள் முடிவு செய்வார்கள். 2014ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங்கே  பிரதமராக இருப்பார். அவரது அரசு 2014 வரை நீடிக்கும்.
ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியில் முக்கியமான ஒரு பொறுப்பை விரைவில் ஏற்பார்.  அதன் பிறகு சோனியாவின் பங்கு என்னவாக இருக்கும் என்று கேட்கிறீர்கள். இப்போது  அவர்தான் கட்சியின் தலைவராக இருக்கிறார். அவர் புரவலராக இருப்பார். கட்சியின்  உயர் (சுப்ரீம்) தலைவராக அவர் இருப்பார்" என்றார்.