Published:Updated:

12 டிஎம்சி தண்ணீர் தர கர்நாடகத்திற்கு காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு!

விகடன் விமர்சனக்குழு
12 டிஎம்சி தண்ணீர் தர கர்நாடகத்திற்கு காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு!
12 டிஎம்சி தண்ணீர் தர கர்நாடகத்திற்கு காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு!
12 டிஎம்சி தண்ணீர் தர கர்நாடகத்திற்கு காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு!

புதுடெல்லி: தமிழகத்திற்கு 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்கு காவிரி  கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு  கூட்டத்தில்,நவம்பர் மாதம் வரை கர்நாடகா 30 டிஎம்சி தண்ணீர் தரவேண்டிய பாக்கி  உள்ளதாகவும்,எனவே 31.6 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட  வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கலந்துகொண்ட அதிகாரிகள் கோரிக்கை  விடுத்தனர்.

ஆனால் தங்களிடம் குறைந்த தண்ணீரே இருப்பு உள்ளதாகவும், குடி நீர்,பாசனம் மற்றும்  சுற்றுச்சூழல் ஆகிய தேவைகளுக்கு அவசியமாக உள்ளதால்,காவிரியிலிருந்து  தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடகா தரப்பில் கலந்துகொண்ட  அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

##~~##
இந்நிலையில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில்,தமிழகத்திற்கு 12  டிஎம்சி தண்ணீரரை,டிசம்பர் மாதத்திற்குள் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு  காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.
மேலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்னும் ஒரு மாதத்தில் அரசிதழில்  வெளியிடப்படும் என்றும் காவிரி கண்காணிப்பு குழு அறிவித்தது.
இது குறித்த விவரங்கள் குறித்த அறிக்கையை, வருகிற திங்கட்கிழமையன்று உச்ச  நீதிமன்றத்தில் நடைபெற உள்ள காவிரி வழக்கு விசாரணையின்போது,காவிரி  கண்காணிப்பு குழு தாக்கல் செய்யும்.
அதன்பின்னர் உச்ச நீதிமன்றம் அளிக்கும் இறுதி தீர்ப்பை பொறுத்தே தமிழகத்திற்கு  எத்தனை டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்பது தெரியவரும்.