Published:Updated:

பால்தாக்கரே நிலைமை மேலும் மோசமடைந்தது: மும்பையில் பதட்டம்!

விகடன் விமர்சனக்குழு
பால்தாக்கரே நிலைமை மேலும் மோசமடைந்தது: மும்பையில் பதட்டம்!
பால்தாக்கரே நிலைமை மேலும் மோசமடைந்தது: மும்பையில் பதட்டம்!
பால்தாக்கரே நிலைமை மேலும் மோசமடைந்தது: மும்பையில் பதட்டம்!

மும்பை: சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ள  தால், மும்பையில் பதட்டமான நிலை காணப்படுகிறது.இதனால் நகர் முழுவதும் போலீஸ்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரேவுக்கு கடந்த வாரம் திடீரென மீண்டும் உடல்  நலக்குறைவு ஏற்பட்டது. 86 வயதாகும் அவர் மூச்சுவிட கடுமையாக திணறினார்.  இதையடுத்து லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் அவரது வீட்டுக்கு சென்று சிகிச்சை  அளித்து வருகிறார்கள்.

அவருக்கு மஞ்சள் காமலை தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அவர் உடல்நிலை கடந்த  சில தினங்களாக கவலைக்கிடமாக உள்ளது. நேற்றிரவு அவர் உடல்நிலை மிகவும்  மோசமானது. பால்தாக்கரே நல்ல தைரியமாக இருப்பதாக அவரது மகன் உத்தவ் தாக்கரே  கூறி வருகிற போதிலும் அவர், செயற்கை சுவாசம் உதவியுடன்தான் சுவாசித்து  வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2 நாட்களாக அவருக்கு உணர்வும் சற்று மங்கியது.பால்தாக்கரே மெல்ல, மெல்ல  உணர்வற்ற நிலைக்கு செல்வதால் சிவசேனா மூத்த தலைவர்கள் அவரது வீட்டில்  குவிந்தனர்.

பால் தாக்கரே உடல்நிலை பற்றி தகவல் அறிந்த முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்  நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், அவரது  மகன் அபிஷேக்பச்சன் நேற்றிரவு பாந்த்ராவில் உள்ள பால்தாக்கரே வீட்டுக்கு சென்றனர்.  இன்று காலை வரை அவர்கள் அங்கேயே தங்கி இருந்தனர். பால்தாக்கரேயிடம் இருந்து  பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிய ராஜ்தாக்கரேயும் அங்கு வந்தார்.

##~~##
நேற்றிரவு மும்பையில் உள்ள பல வி.ஐ.பி.க்கள் பால்தாக்கரே வீட்டுக்கு வந்து சென்ற  வண்ணம் இருந்தனர். பால்தாக்கரே உடல்நிலை பற்றி பரபரப்பாக பேசப்பட்டதால்  நேற்றிரவு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் பாந்த்ராவில்  குவிந்தனர்.
பால்தாக்கரே வீடு முன்பு திரண்ட அவர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டப்படி  இருந்தனர். பால்தாக்கரேயை பார்க்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். உடனே  பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே வெளியில் வந்து, சிவசேனா தொண்டர்களை  சமரசம் செய்தார்.பிறகு அவர்களை கலைந்து போகச் செய்தார்.
இதற்கிடையே இன்று காலை மும்பை உள்பட மகராஷ்ட்ரா மாநிலம் முழுவதும்  பால்தாக்கரே உடல்நிலை பற்றி பரபரப்பாக தகவல்கள் பரவியது. இதனால் மாநிலம்  முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.பல்வேறு ஊர்களில் இருந்தும் சிவசேனா  தொண்டர்கள்,மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியில் தாக்கரேவின் வீடு உள்ள  நோக்கி  படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மும்பையிலும்  போலீசார் பல்வேறு முன்எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளனர். பால்தாக்கரே வீடு  இருக்கும் பகுதியில் உள்ள தெருக்களில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
மிக முக்கிய பிரமுகர்கள் தவிர வேறு யாரும் பந்த்ரா கிழக்கு பகுதிக்குள் செல்ல  அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில் இன்று காலை மும்பையில் பால்தாக்கரே பற்றி  மீண்டும் பரபரப்பு தகவல்கள் பரவியது.இதனால் இன்று காலை மும்பையில் பல  இடங்களில் கடைகள் மூடப்பட்டன. சில இடங்களில் சிவசேனா தொண்டர்கள்  திரண்டனர்.
இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் மும்பையில் ரோந்து பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பால்தாக்கரே வீட்டுக்கு இன்று காலை சிவசேனா மூத்த  தலைவர்கள் அனைவரும் வந்தனர்.மனோகர் ஜோஷி, சுபாஷ்தேசாய் ஆகியோர்  வந்தபோது பால்தாக்கரேவின் மதோஸ்ரீ வீடு அருகே செல்ல இயலவில்லை.
பால் தாக்கரே உடல் நிலையில் முன்னேற்றம்: செய்தி தொடர்பாளர்
இதனிடையே பால் தாக்கரேவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
சுவாச கோளாறு காரணமாக அவதியுற்று வரும் பால் தாக்கரேவுக்கு உயிர் காக்கும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பால்தக்ரேவின் மகன் உத்தவ் தாக்ரே, தொண்டர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பால் தாக்கரே விரையில் குணமடைவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.