Published:Updated:

ரூ.20 கோடி மோசடி புகார்: நடிகர் ரித்தீஷ் எம்.பி. கைது!

விகடன் விமர்சனக்குழு
ரூ.20 கோடி மோசடி புகார்: நடிகர் ரித்தீஷ் எம்.பி. கைது!
ரூ.20 கோடி மோசடி புகார்: நடிகர் ரித்தீஷ் எம்.பி. கைது!
ரூ.20 கோடி மோசடி புகார்: நடிகர் ரித்தீஷ் எம்.பி. கைது!

சென்னை: 20 கோடி ரூபாய் மோசடி புகாரில் நடிகரும்,திமுக எம்.பி.யுமான ரித்தீஷ்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜசேகர் என்பவர்,சென்னை காவல்துறை  ஆணையரிடம் அளித்திருந்த புகாரில்,"எனது தந்தை முருகேசனிடம் 20 கோடி  ரூபாய்க்கு இடம் வாங்கித் தருவதாக ரித்தீஷ் பணம் பெற்றுக் கொண்டு, இடம் வாங்கித்  தரவில்லை.வேறு இடம் வாங்கித் தருவதாக கூறியிருந்தார்.ஆனால் வேறு இடமும்  வாங்கித் தரவில்லை.ரூபாயும் திருப்பித் தரவில்லை”என்று புகார் அளித்திருந்தார்.

##~~##
ஆனால் இதை மறுத்த ரித்தீஷ், “நானும், ராஜசேகர் தந்தை முருகேசனும் நெருங்கிய  நண்பர்கள். பல கோடி ரூபாய்க்கு இருவரும் சேர்ந்து தொழில் செய்துள்ளோம். தற்போது  இடப் பிரச்சினையில் சில குளறுபடி இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. அதனை  காரணம் காட்டி சிலரின் தூண்டுதலின் பேரில் ராஜசேகர் என் மீது பொய் புகார்  கொடுத்துள்ளார். அதனை சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கை சந்திப்போம்” என்று கூறி  இருந்தார்.
இந்நிலையில், தொழிலதிபர் ராஜசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய  குற்றப்பிரிவு போலீசார் இன்று சென்னையில் நடிகர் ரித்தீஷ் எம்.பி.யை கைது  செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.