Published:Updated:

சாதி வெறியைக் கிளப்புகிறவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்: கருணாநிதி

Vikatan
சாதி வெறியைக் கிளப்புகிறவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்: கருணாநிதி
சாதி வெறியைக் கிளப்புகிறவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்: கருணாநிதி
சாதி வெறியைக் கிளப்புகிறவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்: கருணாநிதி

சென்னை: சாதி வெறியைக் கிளப்புகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழாவினையொட்டி,பல்வேறு மாற்றுத்  தினனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும்  திமுக தலைவர் கருணாநிதியை இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து  தெரிவித்தார்கள்.அவர்களுக்கு திமுக சார்பில் கருணாநிதி வேட்டி, சேலைகளை  வழங்கினார். இறுதியாக

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியதாவது:

ஜாதியக் கட்சிகளைக் கூட்டியருப்பது தேர்தலுக்காக பா.ம.க. செய்கிற  முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாமா? வாக்கு வங்கியினைப் பெருக்குவதற்காக இப்படி  செய்கிறார்களா?

சாதிப் பிரச்னைகளை கையில் எடுப்பது என்பது தீக்குண்டத்திலே  இறங்குவது போன்ற அபாயகரமானது.

டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து சாதிப் பிரச்சினைகளை கிளப்புகின்ற  வகையில் பேசிக் கொண்டே இருக்கிறாரே,அதைப் பற்றி அரசு நடவடிக்கையும்  எடுக்கவில்லை, எச்சரிக்கைக் கூடச் செய்யவில்லையே?

சாதி வெறியைக் கிளப்புகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு  நடவடிக்கை எடுப்பது தான் எங்களுடைய கருத்தும் வேண்டுகோளும் ஆகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தி.மு. கழக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை  என்பதைப் போல முதலமைச்சர் சொல்லியிருக்கிறாரே?

##~~##
 “மாற்றுத் திறனாளிகள்” என்ற பெயரையே அவர்களுக்கு சூட்டியது  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான். பொதுவாக அனைவருக்கும் மாற்றுத்  திறனாளிகள் என்ற பெயரைச் சூட்டியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான்.  தி.மு. கழக ஆட்சியிலே தான் மாற்றுத் திறனாளிகளுக்காக தனியாக ஒரு வாரியமே  அமைக்கப்பட்டது.
அந்த வாரியம் இப்போது இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. அதை  அகற்றி விட்டார்கள் அல்லது கலைத்து விட்டார்கள் என்று கேள்விப்படுகிறேன். மாற்றுத்  திறனாளிகளுக்காக இட ஒதுக்கீட்டில் மூன்று சதவிகிதம் தரப்பட வேண்டும் என்ற  நிலையை உருவாக்கியதும் மாற்றுத் திறனாளிகளுக்கான போக்குவரத்து படியை 300  ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி அளித்ததும், திமுக ஆட்சிதான்.
வேலை வாய்ப்புகளில் கூட, அவர்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்ற அந்தக்  கோஷத்தை எழுப்பி அதிலே வெற்றி கண்டதும் திமுக ஆட்சிதான்.
தமிழக அரசு முன் வந்து மாற்றுத் திறனாளிகளுக்கான வாரியத்தை மீண்டும்  அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.அதற்கு நாங்கள் உறுதுணையாக  இருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
என்கவுன்டரை ஆதரிக்கவில்லை
மேலும் சிவகங்கை அருகே அண்மையில் நடைபெற்ற போலீஸ் என்கவுன்டரில் 2  ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி,என்கவுன் டரை திமுக எப்போதும்  ஆதரிக்காது என்றார்.
 

Vikatan