Published:Updated:

தண்ணீர் தேவை எவ்வளவு?: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

விகடன் விமர்சனக்குழு
தண்ணீர் தேவை எவ்வளவு?: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
தண்ணீர் தேவை எவ்வளவு?: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
தண்ணீர் தேவை எவ்வளவு?: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: காவிரி  நீர் இருப்பு மற்றும் பாசனத்திற்கு  எவ்வளவு நீர் தேவை என்பது குறித்து தமிழக  மற்றும் கர்நாடக அரசுகள்   உச்சநீதிமன்றத்தில்  அறிக்கை தாக்கல் செய்துள்ளன.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிகே.ஜெயின், மதன் பி லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு  முன் காவிரி விவகார வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெங்களூரில் கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும்  ஏற்படவில்லை என்றும்,தமிழகத்தில் சம்பா பயிர்களை காப்பாற்ற 39 டிஎம்சி தண்ணீர்  தேவைப்படுவதாகவும்  தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன்  வாதிட்டார்.

##~~##
டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை குறைந்தபட்சம் 30 டிஎம்சி தண்ணீர் அளிக்க  வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், தங்களுக்கு 78 டிஎம்சி  தண்ணீர் தேவைப்படுவதாக கர்நாடகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள்,  தமிழக அரசும், கர்நாடக அரசும், தங்களுக்கான தண்ணீர் தேவை குறித்து இன்று  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.
இதன்படி,தமிழக அரசு தனது தண்ணீர் தேவை குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்று  அறிக்கை தாக்கல் செய்தது.அதில் அதில், தமிழகத்தில் மொத்தம் 7 டி.எம்.சி. தண்ணீர் தான் உள்ளது. அது 5 நாள் பாசனத்திற்கு மட்டுமே வரும். சம்பா சாகுபடிக்கு 1-ம்தேதி முதல் 15-ம் தேதி வரை 30 டி.எம்.சி. தண்ணீர் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேபோல் கர்நாடக அரசு சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், கர்நாடக அணைகளில் 37 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. அதில் 28 டி.எம்.சி. குடிநீர் பயன்பாட்டிற்குத் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கைகளை  உச்ச நீதிமன்றம்,  வருகிற திங்கட்கிழமையன்று  பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க உள்ளது.